மதுரையம்பதியில் பிறந்து பாண்டிய நாட்டிற்க்கே அரசியாகி
எட்டு திக்கிலும் வெற்றி பெற்று பேரரசியாக திகழ்ந்து, இறைவனாகிய சொக்கநாதரையும் போர்களத்தில் வெற்றி கொண்டு அவரையே கரம்பிடித்த மிக பெரும் வரலாற்று பெருமை வாய்ந்த மதுரை மாநகரின் சிறப்புகளுக்கு மகுடம் சூட்டுவது போல் இறைவனாகிய சிவ பெருமான் பாண்டிய நாட்டிலேயே தங்கி நாட்டிற்க்கு அரசனாகி பல திருவிளையாடல்களை நிகழ்த்தி அருள் புரிந்த தலம் ..!
இறைவனின் திருவிளையாடல் நிகழ்வுகளை ஆண்டு தோறும் நிகழ்த்தி காட்டும் நிகழ்வாக தான் ஆவணி திருவிழா மதுரை மாநகரில்
நடை பெறுகிறது .,
இறைவியும் இறைவனும் மன்னர்களாக முடி சூடிக்கொண்டு மதுரையை விட்டு செல்லாமல் இங்கு இருந்து எல்லோர்க்கும் அருள் புரிந்து வந்துள்ளனர் என்பது தான் மதுரை க்கு கிடைத்த மிக பெரிய சிறப்பு .,
ஆவணி மூலவிதியில் அம்மை அப்பனின் திருவிளையாடல் படலம் தினமும் அரங்கேறுவது கண்கொள்ளாக் காட்சிகளாக் மனம் நிறையும்..!
மதுரை ஆவணி திருவிழாவின் சிறப்பான நிகழ்வு சுந்தரேஸ்வரர்க்கு பட்டம் சூட்டபடும் வைபவம் ஆகும்.!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆவணி மூலத்திருவிழாவில், பட்டாபிஷேகம் நிகழ்ந்து. பட்டம் சூட்டிய சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் எழுந்தருளுவார்
ஆவணி மூலத் திருவிழாவினை முன்னிட்டு, ஸ்வாமி சந்நிதி - கம்பத்தடி மண்டபத்தின் அருகே புனிதநீர் நிறைந்த பதினோரு கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்..
கம்பத்தடி மண்டபத்தில் ஸ்வாமியும் பிரியாவிடையும் அன்னை மீனாட்சியும் பல்லக்குகளில் எழுந்தருளிய வேளையில் - அவர்தம் முன்னிலையில் - தங்கக் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்..
புதிய தங்கக் கொடி மரத்தில் மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க ஆவணி மூலத் திருவிழாவின் கொடி ஏற்றப்படும்..!
கருங்குருவிக்கு உபதேசம் செய்தருளல்,
நாரைக்கு முக்தி கொடுத்தருளல்,.
வணிகனாக வந்து மாணிக்கம் விற்று விளையாடுதல்.
புலவனாக வந்து தருமிக்குப் பொற்கிழி தந்தருளல்,.
செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்த அன்பனுக்கு என்றும் குறையாத உலவாக்கோட்டை அருளி
நரிகளைப்பரிகளாக்கி திருவிளையாடல் புரிதல்
போன்ற பல இறைவனின் விளையாடல்கள் காட்சியாக்கப்படும் ..!
கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்வாமியும் - வெள்ளி சிம்ம வாகனத்தில் மீனாட்சியும் - தங்க சப்பரத்தில் ஸ்வாமியும் - யானை வாகனத்தில் மரகதவல்லியும் எழுந்தருளல் போன்று பல்வேறு வாகன சேவைகளும் கண்களுக்கு விருந்தாக்கப்படும்.!
அருள்மிகு சுந்தரேசுவரர் பட்டாபிசேகம் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteபடம் அதிலும் இந்த மண்டபப் படம் அழகோ அழகு
படங்கள் ஒவ்வொன்றுமே அழகு......
ReplyDeleteபல வருடங்களுக்கு முன்னர் மதுரைக்குச் சென்றது. பிறகு அந்த வழியே பயணித்திருந்தாலும் கோவிலுக்குச் சென்றதில்லை. பார்க்க வேண்டும்.....
கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய பதிவு.. மகிழ்ச்சி..
ReplyDeleteகாணக் கண் கோடி வேண்டும்! அத்தனை அழகு!
ReplyDeleteஎனக்கும் நல்வினை கொஞ்சம் இருந்ததினால் நானும் மதுரை மீனாட்சியின் அழகினை 15 வருடங்கள் முன்பு வந்து கண்டு களித்திருந்தேன்!.. மிக அருமை!
வாழ்த்துக்கள் சகோதரி!
அழகிய படங்களுடன் ஆவணி மூல விழா நிகழ்ச்சிகள் பற்றிய பதிவு சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமதுரை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். நாங்களுந்தான் உங்கள் பதிவினைக் காண.
ReplyDeleteஅழகிய படங்களுடன் அருமையான பதிவு. அதிலும் அந்த மண்டபப் படம் மிக அழகு...
ReplyDelete