மாதவனே கேசவனே மதுசூதனா கோவிந்தா
வாமனனே நாரணனே திருவேங்கடனே வைகுந்தா
ஸ்ரீனிவாசா வேங்கடேசா ஸ்ரீதரனே ஜெய் கிருஷ்ணா - என்று
என்ன சொல்லி அழைத்தாலும் எங்கிருந்து நினைத்தாலும்
பக்தி ஒன்றே போதுமென்று பரிவுடனே வந்திடுவான்
திருமால் பெருமைக்கு நிகரேது... உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உந்தன் திருநாமம் - பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
வரும் துயர் பகையாவும் மாற்றிடும் தெய்வம்
வாய் திறந்தே கேட்டால் வழங்கிடும் தெய்வம்
நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதையென்னும் தத்துவமே - அதை
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமேமாபலி சிரம் தன்னில் கால் வைத்து இந்த மண்ணும்விண்ணும் அளந்த அவதாரம் - வாமன அவதாரம்
கலைமணம் கமழக் கொண்டாடப்படும் ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம், சூழ்ச்சி, வஞ்சகம் முதலிய குணங்கள் அகற்றப்படவேண்டும் என்பதையும்,அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் மனித சமுதாயத்தற்கு உணர்த்திடும் நன்னாளாகும்.
தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அத்தம் நட்சத்திர தினத்தில்துவங்கும் ஓணம் சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று 10 வது நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது. அவிட்டம், சதயம் என்று அதற்கு அடுத்த 2 நாட்கள் வரை ஓணம் விழா தொடர்வதுண்டு.
ஓணம் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது..!
ஓணம் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது..!
மகா விஷ்ணுவின் உதவியை நாடி ‘விஸ்வஜித்’ என்ற யாகம் நடத்தினார் மகாபலி. தேவர்கள் குறையை போக்கவும், உலகம் நிலைத்திருக்கும் வரை மகாபலி புகழுடன் விளங்க செய்ய மகா விஷ்ணு மிகச் சிறிய வாமன அவதாரம் எடுத்து யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் மூன்று அடி நிலம் தானம் கேட்டார்.
மகாபலியும் நிலம் வழங்க தயாராக, குள்ள உருவமாக இருந்த மகாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார்.
ஒரு பாதத்தை பூமியிலும், இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். மூன்றாவது அடிக்கு நிலம் கேட்க, மகாபலியோ தனது தலையை காண்பித்தார்.
அவரை அப்படியே அழுத்தி பூமிக்குள் புதைத்தார் மகா விஷ்ணு.
அப்போது மகாபலியின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுக்கு ஒருநாள் அதாவது ஆவணி மாதம் திருவோண நாளில் மகாபலி தனது நாட்டு மக்களை காணவும் மகாவிஷ்ணுவும் வரம் கொடுத்தார். மன்னர் வருகிறார்
கேரள நாட்டு மக்களை மன்னர் காண வரும் நாள் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் திருவோண பண்டிகையாக கொண்டாடப்படுகிறது
ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் விருந்தாகும்.
உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர்.
தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அனைத்தும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திருவேணத் திருநாள் கொண்டாட்டங்கள் அறிந்தேன் சகோதரியாரே
ReplyDeleteநன்றி
அழகான படங்களும் திரு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தினை விவரிக்கும் அழகுமிகு பதிவு.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை ராஜி :)
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை.
ReplyDeleteஅழகு.. அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (29/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE