. 





‘அன்றே தடுத்தெனை ஆண்டு கொண்டாய்
கொண்டதல்லவென்கை சென்றே
நடுக்கடலில் விழினும் கரையேற்றுகை
நின் திருவுளமே’
தீபதுர்க்கா மந்திரம்
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் அமும்
துர்கே ஏஹ்யேஹி ஆவேசய ஆவேசய க்ரோம்
தும் துர்க்கே க்ரோம் ஹ்ரீம் ஆம் ஹும்பட் ஸ்வாஹா. 

நன்றே வரினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயுமில்லை; உனக்கே பரம்; எனக்குள்ளவெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற

இருள் அகல விளக்கின் ஒளி அவசியம். மனத்தின் இருள் அகல ஞானம் எனும் தேவியின் அருளொளி அவசியம்.

தீப துர்க்கை அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை அருள்கிறாள். அம்பிகையே ஆத்ம ஒளியாகவும் மிளிர்கிறாள்.
குத்துவிளக்கை ஏற்றி , அலங்கரித்து கோலமிட்ட பலகையில் வைத்து இரு கைகள் நிறைய மலர்களை அள்ளியெடுத்து மனமுருக வேண்டிக்கொண்டு குத்துவிளக்கில் தீப துர்க்கையை ஆவாஹனம் செய்து வேண்டிட, குல விளக்காய் குலம் காத்தருள்பவள் தீப துர்க்கை.

அறியாமை எனும் இருளை அழிப்பவள். இருள் சூழ்ந்த இடத்தில் கண்ணுக்கு எதுவுமே புலப்படாது. அதனால் அந்த இடத்தில் எதுவுமே இல்லை என்று பொருள் இல்லை. கண், காது, மூக்கு போன்ற இந்திரியங்கள் ஓரளவிற்குத்தான் பொருட்களை உணர்த்தும்.

கண்களால் காண முடியாத பொருட்களை
அகக்கண்ணால் காண முடியும்.
அறியாமை என்ற அஞ்ஞானத்தை தீபலட்சுமியாக விளங்கும்
தீப துர்க்கையே அகலச் செய்பவள்.
அகக்கண்ணால் காண முடியும்.
அறியாமை என்ற அஞ்ஞானத்தை தீபலட்சுமியாக விளங்கும்
தீப துர்க்கையே அகலச் செய்பவள்.
தேவியின் பெருமைகளைப் பாடும் தேவி மஹாத்மியம் எனும் ஸப்தஸதீ பாராயணங்களில் 13 அத்தியாயங்களிலும் மகாகாளி, மகாலட்சுமி, திரிபுரபைரவி, ஜெயதுர்க்கா, மகாசரஸ்வதி, பத்மாவதீ, மாதங்கி, பவானி, அர்த்தாம்பிகா, காமேஸ்வரி, புவனேஸ்வரி, அக்னி துர்க்கா, சிவா ஆகிய 13 தேவதைகளை சமஷ்டியாக தீபங்களில் ஆவாஹனம் செய்து பூஜிக்கும்போது ஏற்படும் ஒளியே தீப துர்க்கையாக பாவிக்கப்படுகிறது.
கேரளாவில் பகவதி சேவை என்ற பெயரில் தீப துர்க்கை பூஜை
வெகு கோலாகலமாக நடைபெறுகிறது.
தேவியே ஆத்மா. உள்ளத்தில் விளக்கொளி போல
ஆத்மா விளங்குகிறது.
ஆத்மா விளங்குகிறது.
சத், சித், ஆனந்தம் மூன்றும் சேர்ந்த சச்சிதானந்த வடிவினள்.
எது இருக்கிறதோ அது சத்,
எது பிரகாசிக்கிறதோ அதுவே சித்,
எது பிரியமானதோ அது ஆனந்தம்.
இந்த மூன்றும் சேர்ந்த சச்சிதானந்த வடிவினள் தீப துர்க்கா.
இந்த மூன்றின் பிரவாகமாகவே உள்ளேயும் வெளியேயும் பிரவேசித்து தான் ஒருவளாகவே ஜோதி வடிவாகப் பிரகாசித்து திருவருட்பாலிக்கும் தேவி இவள்.
எப்படி சூரியனின் கதிர்வீச்சு நேர்பிம்பமாக பூமிக்கு வராமல் தன்னைச் சுருக்கிக்கொள்கிறதோ அதே போல் உலக உருண்டை அளவு உள்ள அம்பாள் சிறுத்து தீபத்தில் ஆவாஹனமாகி தீப துர்க்காவாக பொலிகிறாள்.
ஜோதிர் தரிசனத்தின் போது மனம் நிர்மலமாகி உருவ-அருவ வழிபாட்டை நீக்கும் என்பது ஐதீகம். அதை அருள்பவள் தீப துர்க்கா.
தீபத்தின் சுடரில் அழகிய தேவதையாகத் தோன்றும் இவள் தாமரை மலர் போன்ற நிறத்தவள்.
சிங்கத்தின் மீது ஆரோகணித்தருள்பவள். தேவியின் கடாக்ஷமாகிய குகையிலிருந்து அடர்ந்த பிடரிகளுடன் கூடிய சிங்கம் வெளிப்பட்டு அக்ஞானமாகிய மான் கூட்டத்தை வேகமாக, வெகு தூரம் ஓட்டுகிறது என்று மூகர் தன் மூகபஞ்ச சதியின் கடாக்ஷ சதகத்தில் துதியில் கூறியுள்ளார்.
சிங்கத்தின் மீது ஆரோகணித்தருள்பவள். தேவியின் கடாக்ஷமாகிய குகையிலிருந்து அடர்ந்த பிடரிகளுடன் கூடிய சிங்கம் வெளிப்பட்டு அக்ஞானமாகிய மான் கூட்டத்தை வேகமாக, வெகு தூரம் ஓட்டுகிறது என்று மூகர் தன் மூகபஞ்ச சதியின் கடாக்ஷ சதகத்தில் துதியில் கூறியுள்ளார்.
அஞ்ஞானத்தை நீக்கவே தேவி சிம்மத்தின் மீது ஆரோகணித்தருள்கிறாள் என்பது கருத்து.
சூலம், வில், அம்பு, சங்கு, தாமரை,அபயம், வரதம் ஆகிய ஆயுதங்களைத் தன் திருக்கரங்களில் தாங்குபவள்.
சம்சார பயத்தைப் போக்கி ஞானமளித்து முக்தியை வழங்குபவள்.
சக்தி வேண்டும் ஞானியர் உள்ளத்து இருளை தன் சக்தியால் அகற்றி தீபம் போல் ஒளி வீசுபவள்.
தேவர்களால் பூஜிக்கப்படுபவள். என்றும் மகிழ்ச்சியுடன் திகழ்பவள். மங்களமானவள்.
தினமும் காலையிலும் மாலையிலும் பூஜையறையில் விளக்கேற்றி, அந்த விளக்கின் சுடரை தீப துர்க்கையாக பாவித்து பானகம், நீர்மோர் நிவேதனம் செய்ய, எல்லா செயல்களும் இனிதே நிறைவேறும்.
தீப துர்க்காவை ஆராதித்து வருபவர்களுக்கு, தீபத்தின் மூலமே வருங்காலத்தை உணர்த்திடும் மாபெரும் சக்தி, இவள்.
அம்பிகைக்கு வெண்பொங்கல், அவல்பொரி, புட்டு இடியாப்பம் மற்றும் கிழங்குவகைகள் இல்லாத சாம்பார் போன்றவற்றை நிவேதிக்க வேண்டும்.
அக்னி, ரௌத்ரம் எனும் கோபவடிவமாகக் கருதப்படுகிறது.
ஆனால், தீபமானது, வழிபடுவதற்கு ஏற்றார்போல சாந்த வடிவமானது.
சிவலிங்க மூர்த்தம் எப்படி உருவமாகவும் அருவமாகவும் விளங்குகிறதோ அதே போல் தீபமும் உருவ வழிபாடாகவும் அதே சமயத்தில் நம் தேகத்தில் உறைந்துள்ள ஆன்மாவாகவும் வழிபடப்படுகிறது.
தேவியின் கண்களை அதன் பேரழகை அதனோடுதான் ஒப்பிட இயலும்?
இந்திர நீலக்கல்லோடு ஒப்பிடுவோம் என்றால் அது வெறும் கல்லே. ஏனெனில் கல், மென்மை இல்லாதது.
கருநீலமலரோ என்றால், இதுவும் பகற்பொழுதில் வாடிப்போய்விடும். தேவியின் கண்களோ வாடாத நீலோற்பலங்கள்.
கார்மேகத்தை ஒப்பிடலாமென்றால் அது நீருண்டபோதும் சூல்கொண்டபோதும் மட்டுமே கருநீலமாயிருக்கும். அம்பிகையின் கண்கள் மென்மை, கருமை, ஒளி ஆகிய மூன்றும் ஒருங்கேயுடையது.
எனவே மென்மை இல்லாத இந்திரநீலமணி, இரவில் மாத்திரம் விகஸிக்கும் கரு நீலமலர், பருவகாலத்தில் மட்டும் சூல் கொள்ளும் மேகம் இவற்றுடன் தேவியின் கண்களை எப்படி ஒப்பிடமுடியும்? இப்படி ஒப்பிலா கண்களை உடைய தேவியின் கடைக்கண் பார்வை நம்மீது விழ தேவியைப் பிரார்த்திப்போம்.
தீப துர்க்காவை வழிபடுவதால் மனசஞ்சலங்கள் தீரும். பணப்பற்றாக்குறை தீர்ந்து செல்வவளம் பெருகும்.
வீட்டினருகில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அழியும். பாம்பு நடமாட்டம் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் தங்கள் இல்லத்தில் அம்பிகையை தியானம் செய்து நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்தால் பாம்புகள் வீட்டிற்குள் வராமல் சென்றுவிடும்.
முகம் பொலிவுறும். ராகு,கேது தோஷங்கள் நீங்கும். கண்டசனி, அஷ்டம சனி, ஏழரைச் சனி போன்ற தோஷங்கள் நீங்கும்.
வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்.
தடைகள் நீங்கி சுபவிசேஷங்கள் வெற்றி பெறும்.
திருமணத் தடை, கோயில் திருப்பணித்தடை, எடுத்துக்கொண்ட ஏதேனும் செயல்கள் ஏதாவதொரு காரணத்தால் தடைப்பட்டுக்கொண்டே வருமானால் அதற்கும், ஒரு மண்டலகாலம் பூஜையறையில் இஷ்ட தெய்வத்தை அல்லது குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அகண்ட தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் அந்தத் தடைகள் நீங்கி நினைத்த நல்ல செயல்கள் நலமுடன் முடியும் என்பது தீப வழிபாட்டின் சிறப்பு.
தடைகள் நீங்கி சுபவிசேஷங்கள் வெற்றி பெறும்.
திருமணத் தடை, கோயில் திருப்பணித்தடை, எடுத்துக்கொண்ட ஏதேனும் செயல்கள் ஏதாவதொரு காரணத்தால் தடைப்பட்டுக்கொண்டே வருமானால் அதற்கும், ஒரு மண்டலகாலம் பூஜையறையில் இஷ்ட தெய்வத்தை அல்லது குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு அகண்ட தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் அந்தத் தடைகள் நீங்கி நினைத்த நல்ல செயல்கள் நலமுடன் முடியும் என்பது தீப வழிபாட்டின் சிறப்பு.
வெள்ளை அலரி, தாழம்பூ, வெள்ளை ரோஜா, வெண்சங்கு புஷ்பங்கள், இவளை பூஜைக்க உகந்தவை. தன்னைத் துதிப்பவர்களுக்கு வரமளித்து வாழ்வளிக்கும் அன்னை இவள்.
தேவியை ஐந்து வகை உபசாரங்களால் பூஜிக்க வேண்டும்.
சந்தனம், பூ, தூபம், தீபம், நைவேத்யம் போன்றவை ஐந்து வகை உபசாரங்கள். தேவிக்கும் ஐந்து என்ற எண்ணிற்கும் நிறைய தொடர்பு உண்டு. லலிதா ஸஹஸ்ரநாமம் பஞ்சயக்ஞப்ரியா, பஞ் சப்ரேதமஞ்சாதிசாயினி, பஞ்சமி, பஞ்சபூதேஸி என்று அம்பிகையைப் புகழ்கிறது. பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரியான அம்பிகை இந்த பஞ்சோபசார பூஜையில் பரமதிருப்தி அடைகிறாள்.
ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்கள், கிரக நிலையினால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் தீப துர்க்கையின் திருவருளால் நீங்கும். அம்பிகை எல்லா ஆபத்துகளி லிருந்தும் பக்தர்களைக் காத்து ரட்சிக்கிறாள்.
ஆபத்து காலத்தில் அம்பிகையை த்யானம் செய்தால்
சகல கஷ்டங்களையும் போக்குகிறாள்
எனவேதான் அகத்தியரும் தன் லலிதா நவரத்னமாலையில்
‘தீமேல் இடினும் ஜெயசக்தியென திடமாய்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்’ என்றார்.


தேவியின் திருவடித் தாமரைகள் ஒளிமிகுந்த தன்மையால் சூரியனாகவும்,
அமிர்தமயமாய் உள்ளதால் சந்திரனாகவும்,
சிவப்பு நிறமாய் திகழ்வதால் செவ்வாயாகவும்,
தன்னை வணங்குவோர் வாழ்வில் வளம் பெருக்குவதால்
சௌம்யமான புதனாகவும்,
புத்திமான் எனும் ரீதியில் குருவாகவும்,
கவித்தன்மையில் சுக்கிரனாகவும்,
மந்த கதி நடையால் சனியின் தன்மை கொண்டதாகவும்,
தன்னைப் பூஜிப்பவர்களின் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் அளிக்கும் தன்மையில் ராகு-கேதுவாகவும் விளங்குகின்றன.
எனவே, தேவியின் திருவடிகளை பூஜிப்பவர்கள் நவகிரகங்களையும் பூஜித்த பலனைப் பெறுவர் என்பது கருத்து.

ஒரு காலத்தில் இமவானின் மகளான பார்வதி தேவி தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது நாரதர் தேவியைக் கண்டு, ‘உன்னை சாட்சாத் ஈசனே மணம்புரிவார். அவரைக் குறித்து தவம் புரியாக’ என்று ஆசீர்வதித்தார். பார்வதி தேவி விடாமல் தவமியற்றி பரமேஸ்வரனை மணந்தாள்.
திரிபுர சம்ஹாரத்தின்போது ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப்பட்ட அஷ்டவகைக் கோலத்தில் இருந்து தோன்றியவளே பிரம்மசாரிணி அம்பிகை


. வியாழக்கிழமைகளில் தீப தேவி அம்பிகையை பூஜித்தால் வியாழன் எனும் தேவகுரு ஞானம், கல்வி, அமைதியான, நிலையான வாழ்வு கிட்டச்செய்வார்.


![[Santhana+lakshmi.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr2Gy9YkjOPKkL__sbh7o2HXC9T7JmUHaBffoGw3dOVOgsyM8yUFZ7m9zDb4fWtyMjdXjckRYCyV5a1teLYvxdImla-u0L85JMylMh2e8S_EosNqQzhGHmg5k2CE8w1R2HKdnhfC0QnJk/s640/Santhana+lakshmi.jpg)










மென்மையும் கருணையும் பரிவும் காட்டும் வள்ளல் அன்னையின் அலங்கார ரூபங்களுடன், அன்னையின் பரிவும் கருணையும் பெற்றிட, அவளின் பக்தர்களது வாழ்வில் நலம் பயக்கும் பூசாவிதிமுறைகளையும் தீரும் வினைப்பயன் குறித்தும், கவிதையுடன், கவி நயத்தோடு பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்! நவராத்திரி வருகையை யொட்டி, அன்னையின் மாண்பினை விளக்கும் தொடர்களாகவே கருதுகிறேன். அன்னை யின் கருணை படரட்டும் அனைவர் மீதும்....
ReplyDeleteheartening and enlightening
ReplyDeletesubbu thatha
தீப துர்க்காதேவியின் சிறப்புகளை அழகான படங்களுடன் பகிர்ந்தமை அருமை. நன்றிகள்.
ReplyDeleteஞானத்தினைத் திருவருளாகத் தரும்
ReplyDeleteதீப துர்க்காதேவியின் சிறப்புகள் அறிந்து கொண்டோம்.
அழகான படங்கள்! அற்புதம்!
வாழ்த்துக்கள் சகோதரி!
படங்கள் அருமை சகோதரி எனது பதிவுக்கு வந்து வலைச்சர அறிமுகத்தை அறியப்படுத்தியதற்க்கு நன்றி சகோதரி எனது ஸ்விஸ் பதிவு காண்க,,,,
ReplyDeleteமிகவும் அருமையான பகிர்வு அம்மா...
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை. ஆம்...கேரளாவில் பகவதி சேவை ....தகவல்களுக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteபடங்களுடன் அன்னையின் மகிமைகள் விளக்கும் பகிர்வு. எல்லோருக்கும் அவள் அருள் கிடைக்கட்டும்.
ReplyDeleteசற்றே உள்வாங்கிப் படிக்கலாம் என்றால் படங்கள் பார்ப்பதில் கவனம் சென்று விடுகிறது. நான் பார்த்தவரையில் பகவதி சேவை யில்மந்திர உச்சாடனங்களைவிட கை விரல்களின் நடனமே அதிகமாயிருக்கிறதுகோலம் போடுவதும் அதை அலங்கரிப்பதுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
ReplyDeleteதீப துர்க்கையைப் போற்றி அழகிய படங்களுடன் இனிய பதிவு!..
ReplyDeleteதீப துர்க்கை தேவி அறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
தீப துர்க்கை பற்றிய தகவல்கள் அறிந்தேன். படங்கள் அனைத்துமே அழகு.
ReplyDeleteநவக்கிரகநாயகியின் அருளால் எல்லோருக்கும் நலம் பயக்கட்டும்.
ReplyDeleteதீபதுர்க்கையே போற்றி போற்றி!
வாழ்த்துக்கள்.