Friday, September 26, 2014

சௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் -




ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் 
தாரநாயக-சேகராம்  ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் 
பாணிப்யாம்-அளிபூர்ண-ரத்ன-சஷகம்-ரக்தோத்பலம் பிப்ரதீம் 
சௌம்யாம் ரத்ன-கடஸ்த-ரக்தசரணாம் த்யாயேத் பராம் அம்பிகாம்


"அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாகிய 
அன்னை பராசக்தி, ஓம்கார வடிவத்தில் உள்ள ஞானத்தின் வடிவம்' 
 ஸ்ரீஅன்னை, அட்சர வடிவாகவே விளங்குகிறாள்' 

நவராத்திரி ஒன்பது நாள்களிலும் வேதங்கள், ஆகமங்கள், 
தேவி பராக்கிரமம், தேவி மகாத்மியம், ஸ்ரீதேவிபாகவதம், 
சௌந்தர்ய லஹரி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்ற அன்னையின் தோத்திரங்களைப் பாடித் துதிப்பதனாலேயே அன்னையின் திருவருளை எளிதில் பெறமுடியும்.  

ஐந்தொழில்களையும் அணுவும் மாறாமல் இயக்கி வருபவள், 
பேரருள் சக்தி வாய்ந்த மாதா ஸ்ரீமகா திரிபுரசுந்தரிஅன்னை மிகவும் மகிழ்வது, அக்ஷர வடிவாய் உள்ள தோத்திரங்களால்தாம்! 
பண்டாசுரன் என்னும் அசுரனை வதைப்பதற்காக அம்பிகை தோன்றி  ஸ்ரீலலிதாவாக வந்து, வெற்றி விழாவின் போது தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் வீற்றிருக்கிறாள். 

அன்னையின் விருப்பத்தின்பேரில்  வசினி  தேவதையின் தலைமையில் பதினொரு வாக்தேவிகள் அவளுடைய புகழை மந்திரங்களின் வாயிலாகப்  பாடப்பட்டதுதான் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் என்னும்ஆயிரம் மந்திரங்கள்  ..!

சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதான ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்  அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. 

சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. 

பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.

 அம்பிகை லலிதாவுக்கு மிகவும் பிரியமான லலிதா சகஸ்ரநாமத்தின் 
ஆயிரம் மந்திரங்களும்.   கூறுகிறவர்கள் அம்பிகையின் முழுப் பேரருளுக்குப் பாத்திரமாவார்கள்..

லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் கொண்டு  திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது

ஓம் ஸ்ரீ மாத்ரே நம: . மாதா என்றால் அன்னை. தாய்க்கு நமஸ்காரம் என்பது இதன் பொருள்.

 உரையாசிரியர்களின் உரையினால் சிறப்பு பெற்ற லலிதா சகஸ்ரநாமம்.  விஷ்ணுசகஸ்ரநாமம்.ஆகியவை ஆகும்..

பாஸ்கரராயர் என்பவரால் "ஸெளபாக்ய பாஸ்கரீ' என்னும் பெயரில் உரை எழுதப்பட்டது லலிதாசகஸ்ரநாமம். லலிதா சகஸ்ர நாமாவளிகளில் எல்லாமே உயர்ந்தவை தான்.

எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். இதனால் வாழ்வில் எல்லா சௌபாக்கியங்களும் கிட்டும்.

முதல் நாமாவளியாகிய ஸ்ரீமாதா என்பதற்கு மட்டுமே மிக விரிவாக உரை எழுதியுள்ளார். மாதா என்றால் தாய். ஸ்ரீமாதா என்றால் எல்லையில்லாக் கருணையுடைய தாய். 

பல பொருள் தரும் ஒரு சொல்லாக . "ஸ்ரீ' என்பதற்கு அழகு, பெருமை, மகிமை, செல்வம், லட்சுமி என்னும் பொருள்களோடு விஷம் என்ற பொருளும் உண்டு. 

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தால் பலர் மூர்ச்சையாயினர். எல்லோரும் சிவனைத் தஞ்சம் அடைந்தனர். அவர்களைக் காப்பாற்ற, விஷத்தைத் தானே விழுங்க முன்வந்தார் அவர். 

விஷத்தின் கொடுமையால் பெருமானது உடலிலும் வயிற்றிலும் உள்ள மற்ற உலகங்கள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள் உமாதேவி. தொண்டையிலேயே தடுத்து நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றினாள்.

ஸ்ரீ என்றால் விஷம். "மாதி' என்றால் தடுத்து நிறுத்தியவள் என்று பொருள். இலக்கணக் குறிப்புகளால் ஸ்ரீமாதி என்பதே "ஸ்ரீமாதா'வாகி நாமாவளியில் நான்காம் வேற்றுமையாக "ஸ்ரீமாத்ரே நம:' என்றாகியது .

11 comments:

  1. தேவி மகிமை, லலிதா சஹஸ்ரநாமம் பற்றிய அருமையான பதிவு. தேவியின் படங்களும், தேர்ந்தெடுத்த நவராத்ரி கொலு படங்களும் அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீலலிதாசகஸ்ரநாமத்தின் பல சிறப்பான தகவல்களை அறிந்து கொண்டேன். நவராத்ரி வாழ்த்துக்கள். காணொளி,படங்கள் சிறப்பு.
    நன்றிகள்.

    ReplyDelete
  3. மனம் மகிழத் தந்த சிறப்பான பகிர்வு சரஸ்வதி பூஜையை முன்னிட்டுத்
    தாங்கள் வெளியிட்ட இப் பகிர்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் தோழி !

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு சகோதரி!
    லலிதா சகஸ்ரநாமம் தினமும் கேட்பேன்.
    அதன் மகிமை அறிவது மேலும் சிறப்பாக உள்ளது!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  5. நவராத்திரி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. செல்வ கடாட்சம் அருளிய பதிவு...

    ReplyDelete
  7. எல்லையில்லா கருணை உள்ள தாயின் கருணை அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. திரு மீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலுக்குப் போய் இருக்கிறோம். என் மனைவி ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து செய்து வருகிறாள். நவராத்திரியின் போது தேவிக்கு 108 தாமரைக் காசுகளால் அர்ச்சனை செய்வாள்.

    ReplyDelete
  9. லலிதா சஹஸ்ரநாமம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டேன். ப்ரியா சகோதரிகளின் இனிய குரலில் லலிதா சஹஸ்ரநாமம் உணர்வுகளை வருடிச் செல்லுகிறது. இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. நவராத்திரி இனிய நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. லலிதா ஸஹஸ்ரநாமத்தின் மகிமை சொன்ன பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete