அபிநயங்கள் சூடும் அழகு மயில்














அழகன் முருகனின் வாகனம் அழகு மயில்..
உள்ளம் கவர் கள்வனாம் கண்ணனின் மகுடத்தில் வீற்றிருப்பதும் மயிலிறகு..
கல்விக்கடவுளாம் கலைமகள் வீற்றிருப்பதும் மயில் மீதுதான்..
நம் தேசீயப்பறவையும் மயில்தான்..!


சென்னை: வடபழனி முருகன் கோவில் கொடி மரத்தில், மயில் வடிவத்தில் வந்து அமர்ந்த தேனீக்கள் பரவசமடைய வைத்தன..
கோவிலில் மூலவருக்கு எதிரே அமைந்துள்ள கொடி மரத்தை தேனீக்கள் பல சுற்றி வலம் வந்து கொடி மரத்தில் மயில் போன்ற வடிவத்தில் தேனீக்கள் அமர்ந்து ஆச்சரியமடையவைத்தன..
குறிப்பாக, மயில் போன்ற உடல் அமைப்பு, கழுத்து, தோகைகள் என மூலவரை பார்த்த வண்ணம். மயில் தோற்றத்தில் தேனீக்களை கண்டு ரசித்து பரவசமடைந்து, "அரோகரா' கோஷமிட்டு முருகனையும், தேனீக்களையும் வணங்கிச் சென்றனர்.
வடபழனி முருகன் கோவிலுக்குள் தேன்கூடு எங்கும் இல்லாத நிலையில், திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள், மயில் தோற்றத்தில் வந்து அமர்ந்து ஆச்சர்யமளித்தன..! இந்தியாவில் மட்டுமல்ல ஆச்சர்யக்காட்சி..!ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் உள்ள பாலமுருகன் கோயிலில் சஷ்டியன்று, ஒரு மயில், சுவாமி சன்னிதானத்திற்கு வந்து சிறிது நேரம் நின்ற அந்த மயில், பின்னர் வெளியே வந்து, சுவாமி முன் வைக்கப்டடிருந்த தீர்த்தத்தைப் பருகியது.
சுவாமிக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த மயில் வாகனத்தைப் பார்த்தவாறே சிறிது நேரம் நின்றிருந்த அந்த மயில், சன்னிதானத்தை வலம் வந்து பின்னர் பறந்து சென்றது. மயிலின் இந்த செயல் கூடியிருந்தவர்களை ஆச்சர்யப்பட வைத்தது...






ஆச்சர்யம்!.. அரிய தகவலைக் கண்டு மகிழ்ச்சி!..
ReplyDeleteஇறைவனின் படைப்பில், பட்டாம்பூச்சியையும் மயிலையும் கண்டு, அதன் அழகில் மயங்காதவருண்டோ!
ReplyDeleteஅழகனின் மயில் வாகனம் - அவனருளை நாடுவோருக்கு, அருள் செய்ய அழகன் விரைந்து வரும் வாகனமல்லவா!
பேதமை நிறைந்த மனதும், விரிந்து தன் கற்பனை வளத்தால், தன் மன மயக்கத்தால் அவதியுறும் போதும், அழகானனவன் விரைந்து வந்து அருளாட்சி செய்து மன மயக்கத்தை நீக்கி அருள்வான் என்பது அருளாளர்களின் கூற்று! என்பதனை அழகுற எடுத்துரைத்தமைக்கு நன்றி அம்மா! கொள்ளை கொள்ளும் அழகு வண்ணமிகுப் படங்கள் நெஞ்சை கொள்ளை கொள்கின்றன!
16 வயதினிலே மயிலைக் கண்டு சொக்கிப் போய்இருந்த நான் ,இப்போது உங்கள் மயிலின் அழகு கண்டு சொக்கி நிற்கிறேன் !
ReplyDeleteஆச்சரியம் தான்!
ReplyDeleteமயில்களின் அழகே அழகு!
ஆச்சர்யத் தகவல்கள்.
ReplyDeleteஆச்சரியமான தகவல்கள்,அழகுமயில்களின் அற்புதங்கள் பகிர்வு அருமை.நன்றிகள்.
ReplyDeleteபடிக்கப் படிக்க ஆச்சரியம்...
ReplyDeleteஅழகு மயில்களின் ஆச்சர்யமான பல தகவல்களும் அழகிய படங்களும் பாராட்டுக்கு உரியவை
ReplyDeleteஅருமையான தகவல்கள் ஐயா...
ReplyDeleteஆச்சரியமான வியப்பான தகவல்கள் அம்மா...
ReplyDeleteதிருமுருகன் என்றாலே அழகு தான்; மயில்வாகனனின் அழகு அவனது மயிலுக்கும் வாய்த்து அழகோடு அழகாக ஐக்கியமாகியிருக்கிறது போலும்!
ReplyDeleteபுடவைத் தலைப்பை விரித்துப் போட்டு உட்கார்ந்திருக்கிற மாதிரியான அந்த மயிலோ கொள்ளை அழகு!
இனிய வணக்கம் சகோதரி..
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது வருகை...
கண்களுக்கு இனிமையான படங்கள்
கண்டு ரசித்த திருப்தி...
ReplyDeleteசிறந்த பகிர்வு
இனிதே தொடருங்கள்
அருமையான ஆச்சிரியமான தகவல்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் மிக அழகு.
ஆம் ஆச்சரியத் தகவல்கள்.
ReplyDeleteதீர்த்தம் அருந்திய மயில், தேன்கூடு.
அழகான படங்கள். நன்றி நன்றி..
பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.