Wednesday, September 24, 2014

நவராத்திரிநாயகி அன்னை மீனாட்சி





அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே
ஆலவாய் க்ஷேத்திர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனி நீயே
வைகைத் தலைவியே சரணம் தாயே.

மலையத்துவஜ பாண்டியன் புத்திரகாமேஷ்டியாகம் செய்தபோது, யாகத்தீயில் பார்வதிதேவியே குழந்தையாகத் தோன்றி "தடாதகை என்னும் பெயரில் பொலிந்தாள்.!

கண்கள் மீன் போல் அழகாய் இருந்தததால் "அங்கயற்கண்ணி 
என்றும் "மீனாட்சி  என்றும் பெயர் பெற்றாள்..

மீன் தன் கண்களின் பார்வையாலேயே குழந்தைகளைப்போஷிப்பது போல கண்களை இமைக்காமல் தன் மக்களை போஷித்துக்காக்கும் கருணை தெய்வம் அன்னை மீனாட்சி..

வீரம் மிக்க இளவரசியான அவள், எல்லா மன்னர்களையும் வென்று, சிவன் ஆளும் கயிலாயத்தையும் பிடிக்கச் சென்றாள். சிவனைக் கண்டதும், நாணம் கொண்டாள். உலகாளும் சிவனையே, தன் மணாளனாக ஏற்றாள். முத்துக்குப் பேர் பெற்ற பாண்டிய நாட்டின் அரசியான அவள்,  முத்தங்கியில் காட்சி தருகிறாள்.

நவராத்திரி ஏழாம்நாள் அம்பாள் வித்யாலட்சுமியாக அலங்கரித்து தாமரை மலர் ஆசனம் துலங்க , இருபுறமும் யானைகள் திகழ அருட்காட்சி அருள்கிறாள்.. 

நைவேத்யம்: தேங்காய் சாதம்
தூவ வேண்டிய மலர்: மல்லிகை, வெள்ளைத்தாமரை

10 comments:

  1. நவராத்திரி நாயகி அறிந்தேன்
    உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான பகிர்வு!

    ReplyDelete
  3. ஓயிலழகாள் அன்னை மீனாட்சியின் தரிசனம் அருமை...

    ReplyDelete
  4. அருமையான பதிவு. நன்றி அம்மா

    ReplyDelete
  5. மீனாட்சி தரிசனம் சிறப்பு.

    ReplyDelete
  6. அன்னை மீனாட்சியின் தரிசனம் அற்புதம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அன்னை மீனாட்சி அருள்
    அனைவருக்கும் கிடைக்க நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. "நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு..."

    ReplyDelete
  9. நவராத்திரி சிறப்பு பதிவு அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. நவராத்திரியில் சிறப்பாக மீனாட்சி தரிசனம். நன்றி.

    ReplyDelete