Tuesday, September 2, 2014

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலய ஆவணி மூலத்திருவிழா




 திருநெல்வேலியில் ஆவணி மூலத்திருவிழா , கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, கொடிமரத்தின் முன்பு சிறப்பு தீபாராதனையுடன்  சிறப்பாக நடைபெறும்..!

சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியன் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடைபெறும் ..
கருவூர் சித்தர் ரதவீதிகளில் எழுந்தருள்வார். மானூர் சென்று, ஸ்ரீஅம்பலவாண சுவாமிக்கு சாபவிமோசனம் அளித்த பிறகு, வரலாற்று சிறப்பு வாய்ந்த புராணங்களை பாடி, ஆவணி மூல மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் .

இறைவன் அம்மையோடு இங்கு வந்து உகந்து வீற்றிருப்பதால்

பேர் அண்டம்ஊழிக்கால முடிவில் எல்லாம் அழிந்தாலும் இத்தலம் மட்டும் அழியாததால்
ஐந்து எழுத்து ஓசை எங்கும் நிறைந்ததால்

அம்பிகை தவம் செய்தும் சிவத்தை பூஜித்தும் இறைவனை மணம் முடித்ததால்

பிரம்மா, விஷ்ணு,ருத்ரர்ஆகியோர் வணங்கி மகிழ்ந்து கொண்டிருப்பதால்

இந்திரனின் ஐராவதம் யானை  வந்து வணங்கி நிற்பதால்

திருமால் ஆமை வடிவமாகி  சிவபூஜை செய்ததால்

பிரம்மன் சிவபூஜை இயற்றுவதால்

மேலான தர்மங்கள் தொடர்ந்து நிலைபெற்று இருப்பதால்

பிரம்மனுக்கு விஷ்ணு அருள் புரிந்ததால்

மேலான நற்கதி போகம் முதலியவற்றை இத்தலம் தருவதாலும்

 கம்பை நதி காமாட்சி அருளுவதால்தென்காஞ்சி காமகோட்டம் என்று
சகல சித்திகளையும் அடைய வல்ல ஸ்தலமாகப் பெருமை பெற்றுத்திகழ்கிறது..! 
 மூன்று மூலவர்களைக் கொண்ட  நெல்லையப்பர் கோயிலில் மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக   - பெரிய லிங்கமாக அருள்பாலிக்கும்   நெல்லையப்பர் லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.!

மூலஸ்தானம் அருகில் உள்ள உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார்.

அம்மன் தவம் இயற்றி இறைவனின் அருளை உலகுக்குப் பெற்றுத்தரும் ஐதீகத்தின்படி, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருக்கல்யாணத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்ட பின்னர் கொடிமரத்தின் முன் நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்ட பின்னர் கொடிமரத்தின் முன் நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
 விநாயகர் முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்

சுவாமி சந்நிதியின் மேல் பக்கமுள்ள ஆறுமுகநயினார் சந்நிதியில் ஒரே கல்லில் ஆனஆறுமுகப் பெருமான் மயில்மேல் அமர்ந்திருக்கிறார். .ஆறுதிருமுகத்தையும்  சுற்றி வந்து பார்த்து வணங்கலாம்

 நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பது  மிக அரிய கோலம்,   , செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ கிடைக்கவும் . ஜாதகத்தில் புதன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் வழிபட்டு பலனடையலாம்..!

சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. 

 சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. 

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும்இ

 நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். 
தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக ஐதீகம். 

அம்பிகை சன்னதி முன்பாக துவாரபாலகிகளாக கங்கையும், யமுனையும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.

பண்டாசுரணை வதைத்த துர்க்கை - மஞ்சன வடிவாம்பாள்



12 comments:

  1. ஆவணி மூலத் திருவிழா அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. விரிவான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மிக அருமையான தகவல்கள் ராஜேஸ்வரி. நெல்லையப்பர் கோவில் சிறப்புகளை அழகாகக் கொடுத்திருக்கிறீர்கள் அம்மன் பெயரிலேயே ஓலியும் காந்தமும் இருக்கிறது. முதல் படம் கம்பீரமாக இருக்கிறது.மிக நன்றி மா.

    ReplyDelete
  4. அன்னை காந்திமதி ஐயன் நெல்லையப்பர் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  5. நெல்லையப்பர் காந்திமதியம்மனின் சிறப்புக்களையும்,தகவல்களையும் அருமையாக கொடுத்திருக்கிறீர்கள். முதல் படம் மிகமிக அழகு. நன்றி.

    ReplyDelete
  6. நெல்லையப்பர், காந்தியம்மனைக் கண்டு மனம் குளிர்ந்தது. வெகு நாட்களாகிவிட்டது சென்றுவந்து.....தகவல்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. ஆவணி மூலத்திருவிழா அறியத்தந்தீர்கள்!

    அழகிய படங்களுடன் அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமையான செய்திகள் .
    அழகான படங்கள். காந்திமதி அம்மன் கோவிலுக்கு போக்கும் போது தெப்பகுளத்தை பார்க்க நேரம் இல்லாமல் திரும்பி பிடுவோம். உங்கள் பதிவில் தெப்பகுள தரிசனம் கிடைத்து விட்டது .
    மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மூன்று மூலவர்களைக் கொண்ட தலம் என்பதிலிருந்து பல அரிய தகவல்களையும் தந்து அருமையான படங்களையும் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. பலமுறை இக்கோவிலுக்குச் சென்று வந்தாலும் இப்பதிவின்மூலம் தான் பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது
    நன்றி

    ReplyDelete
  10. சிறந்த அறிமுகம்

    தொடருங்கள்

    ReplyDelete
  11. அந்தந்த பதிவுக்கு அந்தந்த படங்கள் எப்படி உங்களுக்குக் கிடைக்கின்றன என்பது இன்னொரு ஆச்சரியம்.

    முதல் ஆச்சரியம் ஒவ்வொரு திருவிழாச் செய்தியையும் எப்படி இப்படி உங்களால் 'கவரப்' பண்ண முடிகிறது என்பது.

    உண்மையிலேயே உங்கள் மூலம் தான் அந்தந்த திருவிழாக்களை அவ்வப்போது தெரிந்து கொள்கிறேன் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா..

      பூவனத்தின் பூமழை தூவி வசந்தத்தை வரவேற்று
      மகிழ்ச்சியைப் பகிர்ந்த மாதிரிஅருமையான கருத்துரைகளுக்கு மன நிறைவான நன்றிகள்..!

      Delete