அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத
ராம தூத க்ருபா ஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ’
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக் படுத்வம்ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!!
நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும். இந்த எட்டையும் எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குகிறோம்..!
அஜாட்யம் வாக் படுத்வம்ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!!
நல்ல புத்தி, தேகபலம், புகழ், சாந்தகுணம், யாருக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, ஆரோக்கியம், உற்சாகம், வாக்குவன்மை ஆகிய எட்டும் ஆஞ்சநேயரை தியானிப்பதால் உண்டாகும். இந்த எட்டையும் எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குகிறோம்..!
சோழம்பேடு கிராமத்தில் பொங்குளம் என்ற அழகிய தாமரைக் குளத்தின் கரையில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
அனுகூல ஸ்ரீராம ஆஞ்சநேயர் ஆலயத்தில் பட்டாபிஷேக ராமர் கோயிலில், தென்னகத்தில் மிக அரிதாக, ஈசான்ய மூலையில் தனி சந்நிதானத்தில் கல்யாண நவக்கிரகங்களை மிக நூதனமாக எழுந்தருளச் செய்யப்பட்டுல்ளது..
கோயிலில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ராமபஜனை நடைபெறுகிறது.
பௌர்ணமி, பிரதோஷம், ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ அனுமன் ஜெயந்தி ஆகிய நாட்களிலும், ராமநவமி, சீதாகல்யாணம், குருபூஜை ஆகியவை நடைபெறும் சமயத்திலும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பஜனையின் போது பாட்டு மட்டும் பாடாமல்,
ஆட்டமும் சேர்ந்து நடைபெறுகிறது.
சீதாகல்யாணம் ,பூஜைகள், அன்னதானம் போன்றவற்றுக்கான செலவுகளுக்கு பக்தர்களிடமிருந்து எந்தவித நன்கொடைகளும் வசூலிக்கப்படுவது கிடையாது. பக்தர்கள் தானாகவே முன்வந்து நன்கொடை அளிக்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண பாக்கியம் கிட்டாதவர்கள், தொழில் அபிவிருத்தி, குடும்பக் கஷ்டங்கள் நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டிசெல்வோருக்கு நினைத்தக் காரியம் கைகூடுவது தனிச் சிறப்பு.
கோயில் வளாகத்தில் பால விநாயகர், பால முருகர், அம்பாள், அரச கணபதி, தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ நாராயணர், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் சோழம்பேடு கிராமத்தில் உள்ளது அனுகூல ஸ்ரீராம ஆஞ்சநேயர் ஆலயம்.
அனைவருக்கும் ஹனுமானின் அனுகூலம் கிடைக்க எனது பிரார்த்தனைகள்....
ReplyDeleteஜெய் ஆஞ்சநேயா.....
ReplyDeletejaya anjaneya.
ReplyDeleteasaadhya saadhaka.
subbu thatha.
www.subbuthatha.blogspot.com
சனிக்கிழமை!..
ReplyDeleteசஞ்சலம் தீர்க்கும் ஸ்ரீ ஆஞ்சநேய தரிசனம். மகிழ்ச்சி..
nice post on saturday
ReplyDeleteவாயுவின் மைந்தன் வரந்தரும் ஆஞ்சநேயன்!
ReplyDeleteதாயென ஈவான் தயை!
அழகிய தோற்றமும் அருள்தரும் பார்வையும்
கண்களை நகரவிடாமல் ஈர்க்கின்றது சகோதரி!
அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
தக்க நாளில் தகுந்த பகிர்வு நன்றிங்க.
ReplyDeleteஎங்கோ மூலையில் இருக்கும் ஆலயங்களையும் தரிசிக்க செய்வது சிறப்பு! அந்த பணியை சிறப்பாக செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅனுமனைப் பற்றி எத்தனை படித்தாலும் சுவாரஸ்யம் தான்.
ReplyDeleteஅந்த எட்டை எட்டுவதற்கு ஆஞ்சநேயரை வணங்குவோம் நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் அனுகுலமான அருளை அருள வேண்டும் அனுமன்.
ReplyDeleteபடங்கள் செய்திகள் அருமை.