ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழு ஏழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது!
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன்பிறப்பானான்!
தான் சுவைத்தப் பழங்களையே தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமிலை தலைவனே எமை ஆதரி
தசாவதாரங்கள் எடுத்த பின்பும், , கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை.
பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்
சத்தியலோகத்தில் இருந்து பிரம்மா, பூலோகம் வந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துகிறார்.
இதற்கு புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்ஸவம் என்று பெயர்.
காலை,மாலையில் வெவ்வேறு அலங்காரத்துடன் திருப்பதியிலுள்ள உற்சவர் மலையப்ப சுவாமி பவனி வருவார்.
திருப்பதி வெங்கடாஜலபதி மட்டும் தன் திருக்கரத்தை கீழ்நோக்கி காட்டியபடி, ""பக்தர்களே! கலியுகத்தில் உய்வதற்குரிய ஒரே வழி என் திருவடியை பற்றிக் கொள்வது மட்டுமே!'' என்று உணர்த்தியபடி இருக்கிறார்.
தன்னை சரணடைந்தவர்களை கையால் அணைத்து ஆதரிப்பதை பெருமாளின் இடது தொடையில் இருக்கும் இடது கை உணர்த்துகிறது. பன்னிரு ஆழ்வார்களும், ராமானுஜர் போன்ற ஆச்சாரியர்களும் வெங்கடாஜலபதியைச் சரணடைந்து வாழ்வில் நற்கதி அடைந்தனர்.
திருப்பதியை "வேங்கடம்' என்கிறோம் "வேங்கடம்' என்றால் "பாவம் பொசுங்கும் இடம்' என்று பொருள்.
புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை மனதால் நினைத்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம்.
சந்திரதோஷத்தால் திருமணத்தடை, பணப்பிரச்னை, நோயால் அவதி, கல்வித்தடை உள்ளவர்கள், திருவோண விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் பிரச்னை தீர்ந்து நன்மை உண்டாகும்.
புரட்டாசியில், சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதனும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்தவை. புண்ணியம் மிக்க புரட்டாசிமாதத்தில் ஏழுமலையானைச் சரணடைந்து “ஓம் நமோ நாராயணாய”
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நம: என ஜபித்து புண்ணியம் பெறலாம்.!
மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.
துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம்.
பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
குறையொன்றுமில்லாத கோவிந்தன் - வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசன்! -நிறைந்த நல்வாழ்வை அளிப்பான்.
வேங்கடவன் நம்மோடிருக்க வேறென்ன குறை நமக்கு? அற்புதமான படங்கள்.
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
வெங்கடேசனின் அத்தனை வண்ணமும் மிகச் சிறப்பு!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி!
எல்லோருக்கும் நிறைந்த வாழ்வை அருளட்டும் கோவிந்தன்.
ReplyDeleteஅருமையான அழகான பதிவு.
வாழ்த்துக்கள்.
குறை ஒன்றுமில்லை மறை மூர்த்திக் கண்ணா என்று பாடத் தோன்றுகிறது.
ReplyDeleteOm Namo Venkatesaaya Namaha
ReplyDeletegovindha govindha
subbu thatha