Monday, September 29, 2014

நவராத்திரி ஸ்ரீ மகாலஷ்மி பூஜை










அகணித தாரா கணங்களின் நடுவே ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
சகலசரா சரத்தும் தங்க சிலம்பொலிக்க ஜெகதீஸ்வரியவள் ஆடுகின்றாள் 

அயன் என வருவாள் அனைத்தையும் படைப்பாள்
ஹரிஎன அழைப்பாள் அரண்என அழிப்பாள்
அழிவில் இருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம்
அகிலாண்டேஸ்வரி ஆடுகின்றாள்

கிலம் முழுவதும் உள்ள ஆருயிரினங்களும்
ஆழப் பெருங்கடலில் வாழுயிரினங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகின்றாள்  

கனக கமலம் தன்னில் கனிந்த சிவப் பொருளைக்
கலந்து பேரின்பம் காட்டும் கனல் வடிவானவளாம்
நானற்ற நல்லோர்க்கெல்லாம் நானிதோ என்று தோன்றும்
ஞான பரமேஸ்வரி ஆடுகின்றாள்

இதயவீணை எழும் இன்னிசை அவளே
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே
நாற்பத்து மூன்று கோண நாகமணி மண்டபத்தில்
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஆடுகின்றாள்  

அழைக்கும்முன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக் காட்படுவாள் ஆனந்த கல்யாணிஅவள்
அருட்கவி மாலைபாடும் அகத்தியன் அகத்திலே
அமுத சுந்தரேஸ்வரி ஆடுகின்றாள் ஆனந்த நாடகம் ஆடுகின்றாள்
அகஸ்திய ஸித்தேஸ்வரி ஆடுகின்றாள்   

. ""திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் 
புரிந்து வருக வருகவென்றே கிளியே. மகிழ்வுற்றிருப்போம் என்று
 மகாகவி பாரதி போற்றிய மஹாலட்சுமி : மலரின் அழகு பொலிய அருள் பார்வையுடன் அழகாக விளங்கும் செல்வத்தின் தெய்வம். செல்வ வளம் தந்து அருள் புரிகிறாள்..

விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருந்து  நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுவதில் திளைகிறாள்..

நவராத்திரி பூஜையில் லஷ்மி பூஜை மிகவும் சிறப்பானது..

. "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க " என்று பெரியோர் வாழ்த்தும் பதினாறு செல்வங்களான சௌந்தர்யம், சௌபாக்கியம், கீர்த்தி, வீரம், வெற்றி, சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, புஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்கியம், மோட்சம் ஆகியவற்றிற்கு அதிபதியானவள்
ஸ்ரீ மகாலஷ்மி

4 comments:

  1. அருமையான பதிவு
    காளமேகத்துக்கு அபிராமி
    கற்போருக்கு சகலகலாவல்லியே!

    ReplyDelete
  2. படங்க:ள் அத்தனையும் மிக அருமை! தகவல்களும், தமிழில் அந்தப் பாடலும் அருமை! மெட்டிசைக்கலாம் போல....

    ReplyDelete
  3. மகாலஷ்மி பூஜையின் சிறப்பு இந்நன்நாளில் அழகான மகாலஷ்மியின் படங்களுடன் சிறப்பானதொரு பகிர்வு. நன்றிகள்.

    ReplyDelete
  4. இனிய இலட்சுமி பூசை.
    அழகிய படங்கள்.
    நவராத்திரி வாழ்த்துகள்.
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete