Monday, November 17, 2014

கோடி லிங்கேஸ்வரர் கோயில்



பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
 குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்.
 பிறப்பு - இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்.
அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
ஒரு சிவ லிங்கத்தில் 1001 லிங்கங்கள்  அமைக்கப்பட்டிருப்பது
சகஸ்ர லிங்கம் என வணங்கபடுகிறது..!
[Koti+Lingeswara+swamy+Temple.jpg]
கோடி லிங்கேஸ்வரர் ஆலயம் பெங்களுருவில் இருந்து நூறு கி.மீ.தொலைவில் ,, கோலார் அருகே BEML நகரில் கம்மசந்த்ரா என்ற இடத்தில் உள்ளது. 
ஒரு கோடி சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்வது தான் 
கோவில் நிர்வாகத்தினரின் இலக்கு. - 
பல தரப்பட்ட சிவ லிங்கங்கள் காணப்படுகின்றன.

 இங்குள்ள 108 அடி உயர சிவ லிங்கம் தான் உலகத்திலேயே பெரியது என்று சொல்லப்படுகிறது.
அதே போல 40 அடி உயர நந்தி ஒன்றும் இங்கு உள்ளது. 
சினிமாப் பட குழுவினரும் இங்கு படப்பிடிப்பு நடத்துகின்றனர். தெலுங்கில் சிவனை குறித்து வந்த திரைப்படம் “ஸ்ரீ மஞ்சுநாதர் ” முழுவதும் இங்கு தான் படமாக்க பட்டது. 
வேறு எங்கும் பார்க்க முடியாத ஒன்று  என்ற வகையில் இந்த கோவில் சற்று வித்யாசமானது. கோடி லிங்கங்கள் தவிர பாண்டுரங்கன், காளிதேவி, சந்தோஷி மாதா, அன்னபூர்ணேஸ்வரி சன்னதிகள் கோவிலில் உண்டு -
கோயிலில் காலை 6 மணி முதல் இரவு 8-30 மனி வரை 
தொடர்ந்து  தரிசனம் பூஜைகள் செய்யலாம். 
ஆலய முகவரி: 

ஓம் ஸ்ரீ கோடி லிங்கேஸ்வரர் ஆலயம், 
கொம்மசந்த்ரா, 
பங்கரபேட், கோலார், கர்நாடக மாநிலம்.

கோலார் தங்கவயலில் இருந்து 6 கி.மீ தூரதில் கோயில் அமைந்துள்ளது.

பெங்களூரிலிருந்து பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலையில் சுமார் 2.5 மணிநேரம் பயண தொலைவில் உள்ளது. கோலார் சந்திப்பு அருகே திரும்ப வேண்டும். 

பெங்களூரிலிருந்து காலை 6.30 மணிக்கும், பகல் 12 மணிக்கும் அரசுப் பேருந்து இயங்கி வருகின்றது. இது தவிர ஏராளமான தனியார் பேருந்துகளும் உள்ளன.  -


12 comments:

  1. பரவசமூட்டும் படங்கள் அம்மா...

    ReplyDelete
  2. கோடி லிங்கேசுவரர் கோயில்அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. கார்த்திகை சோமவாரத்தில் இனிய தரிசனம்..
    அழகிய படங்களுடன் அருமை..

    ReplyDelete
  4. கார்த்திகை சோமவாரத்தில் கோடி லிங்கேசுவரர் தரிசனம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. விழி இமைக்க மனமில்லாத அற்புதப் படங்களும்
    அரிய தகவல்களும்! மிக அருமை!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  6. என்னுடைய சிறுவயதில் என் அப்பா இங்கு சென்று வந்து பல தகவல்களை தெரிவித்த நினைவு. அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  7. கேள்விப்பட்டு இருக்கிறேன்! படங்களுடன் விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. அங்கு சென்று வந்திருக்கிறேன். நினைவுகளை மீட்ட பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கார்த்திகை சோமவாரத்தன்று கோடி லிங்க தரிசனம் சாத்தியமாக்கிவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  10. பயனுள்ள பதிவு ...

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு ...

    ReplyDelete