Sunday, November 9, 2014

பிரமிக்கவைக்கும் பிரமிடு அற்புத அதிசயங்கள்..





பிர்பஞ்சத்தில் உள்ள சக்தியை ஈர்த்து தன்னுள் தக்க வைக்கும்அமைப்பு பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின் வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த கலவையால் பெறப்படும் ஆற்றல் தான் பிரமிடின் ஆற்றலாகும்.


பிரமிடுகள் தங்களுக்குள் சக்தியை வெகுவாகக் கொண்டிருக்கின்றன..

.
பிரமிடு வடிவம் உள்ளேயும், வெளிப்புறத்திலும்கூட தன் ஆற்றலால் தட்பவெப்ப நிலையிலிருந்து பொருட்களுக்கு புத்துணர்ச்சி தருவதை மிக விஞ்ஞானப் பூர்வமான உணரமுடிந்தவை...
பிரமிடுகளின் கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. 

பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைப்பதுதான் ரகசியம் ..
.வடிவமைக்கப்பட்ட வடிவ கணித கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை ஒன்றுதிரட்டி சேமிக்கும் தன்மையுடையது என்ற உண்மையை, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அக்கால எகிப்திய அறிஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பிரமிடை வடிவமைத்து, பயன்படுத்தினர். 



சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால் போன்றவை பிரமிடின் உள்ளே கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி, ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி அதிகமாகின்றது. பிளேடு, கத்தி போன்றவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கின்றன. .பதப்படுத்தி காத்தல் ,துர்நாற்றத்தை நீக்கி, அறையின் தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.





காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள் முதலியன விரைவில் குணமடைகின்றன. உடல் பருமனைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது. 
ஆஸ்துமா, பல்வலி, தலைவலி, சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயத்துடிப்பு, தூக்கமின்மை போன்றவற்றை குணப்படுத்துகின்றது. 

கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை குணப்படுத்தி இளமையை அளித்து.சிகிச்சை அளித்தல் பிரமிட் சக்தி!






பிரமிடினுள் தியானம் செய்யும் பொழுது அகவுடல் பிரயாணம் 
மிக எளிதாக நிகழ்கின்றது. 

வாழ்வின்பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. பிரமிடுகளைப் பற்றிய பல பிரமிப்பானத் தகவல்களை .பிரமிட் தியானத்தினால்  மிகத் தெளிவாக நினைவில் உணரமுடியும் சூட்சுமம் நிறைந்தவை..!



உலகின் கண்டங்களையும் கடல்களையும் சரிபாதியாகப் பிரிக்கும் மெரிடியன் என்ற கோட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. 

எப்போதுமே குன்றுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சக்தி இயற்கையாகக் குடிகொண்டிருக்கும். அதற்கு குன்றினுடைய பிரமிடு போன்ற வடிவம் ஒரு காரணம்.
நாமக்கல் மலைக்கோட்டை , திருச்சி மலைக்கோட்டை, திண்டுக்கல் மலைக்கோட்டை போன்றவை சக்தி அதிர்வுகளை தன்னக்த்தே கொண்டு மிளிர்கின்றன..

அனைத்து சமய வழிபாட்டு தலங்களும் பிரமிட் போன்ற ஒரு கூம்பு வடிவமான அமைப்பில் தான் இருக்கும். தஞ்சை பெரிய கோவிலும் , மற்ற ஆலய கோபுரங்களும் பிரபஞ்ச அதிர்வுகளை ஈர்த்து மனத்திற்குப்புத்துணர்வு அளிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன..!





விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல் பயணத்தில் பெறப்படும் அறிவின் துணைகொண்டு அக்கால அறிஞர்கள் "பெரிய பிரமிடை கட்டினார்கள். இது நம்மை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சாதனமாக அமைக்கப்பட்ட கருவியாகும்

.பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள் அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட் தியான'மாகும். 

பிரமிடினுள் அமர்ந்து செய்யும் தியானத்தில் சாந்தமான மனநிலையிலிருந்து, மிக உன்னதமான நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத் திறனையும் பலர் பெற்றுள்ளனர்.






பிரமிடினுள் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல் செய்யும் தியானத்தில் பெறும் ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப் பெறுகின்றோம்.



பிரமிட் தியானத்தில் தேவையற்ற உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல் முழுவதும் ஒரு ஓய்வு நிலையை அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான உணர்வு நிலையைத் தருவதாக உணரலாம்..



தியானத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிக அதிகமன ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட் உருவாக்குகின்றது. 


மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க, பிரமிட் உதவுகின்றது. பிரமிடினுள் செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து  அறிகிறோம்..




இந்த பிரமிட்டுக்குள் இருந்து தியானம் செய்தால் மனதை ஒருமைப்படுத்துவதை பலமடங்கு இலகுவாககுகிறதாம். 

பிரபஞ்சத்திலுள்ள சக்திகளுடன் தொடர்புகொள்ள வைக்கிறதால் தான் இது சாத்தியமாகிறது. 



.மனிதனின் அதிசய தக்க ஆற்றல் ,அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும் ,இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் அற்புதத்தை உணரவேண்டும்..


கோவையில் பெர்கஸ் பள்ளி வளாகத்தில் பிரமிடு அமைப்பை அமைத்து இராம .அரங்கநாதன் அவர்கள் அதன் சிறப்புகள் பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார்.
கோவை பஜனகோல மாருதி ஆலயத்தில் பிரமிடு வடிவ தியான மண்டபம் அமைத்து அதனுள் ஆன்மீக அதிர்வலைகள் சிதறாமல் தியானம் செய்பவருக்கு கிடைக்க ஏற்பாடு செதிருக்கிறார்கள்..
பஜன மாருதி ஆலய வளாகத்தில் பிரமிடு வடிவ தியானமண்டபம்.
பிரமிடின் உட்புற தியான அமைப்பு..
 வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தில் தியானலிங்கத்தைசுற்றி குகைகள் போன்ற அமைப்பு  அமர்ந்து சின்முத்திரை தாங்கி குறிப்பிட்டநேரம் தியானம் செய்பவருக்கு அதிர்வலைகளை ஏற்படுத்துவதை கண்கூடாக உணர்ந்திருக்கிறோம்..
ரமண மகரிஷி திருவண்ணாமலை பாதாள லிங்கம் சன்னதியில் அமர்ந்து தியானித்த இடத்தையும் , ஞானானந்தகிரி சுவாமிகளும் , அவரது குருவான இரத்னானந்தகிரி சுவாமிகளும் அமர்ந்து தியானித்த சுரங்க அறையில் அமைதியாக  அந்த அதிர்வலைகளை உணரமுடிகிற சூழல் நிலவுவதை அறியமுடிகிறது..

இல்லத்தில் அமர்ந்து தியானிப்பதைவிட ஆலயங்களிலும் , 
பிரமிட் வடிவ தியானமையங்களிலும் ,மனம் ஒருமைப்படுவதை உணரலாம்..

14 comments:

  1. நல்ல பகிர்வு. இதைப் பற்றிப் படித்திருக்கிறேன். அறிந்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் தியானம் செய்து பார்க்கிறேன். கூம்பின் உள்ளே சென்று வந்தால் விசித்திர உணர்வு உண்டாவதை அனுபவித்திருக்கிறேன். கருப்பையின் வடிவத்தை ஒட்டி பிரமிடுகளை உருவாக்கியதாக சொல்வார்கள்.

    ReplyDelete
  3. பிரமீடு பற்றிய வியத்தகு செய்திகள்அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. பிரமிட் பற்றிய அரிய தகவல்களுடன் உங்களிடமிருந்து ஒருவித்தியாசமான பகிர்வு.இன்னுமொரு வீடு கட்டும் வாய்ப்பு கிடைத்தால் சில இடங்களாவது பிரமிட் வடிவில் அமைக்க வேண்டும் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நிறைய தகவல்கள்... பிரமிடுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா?

    ReplyDelete
  6. அரிய பல தகவல் பிரமிட் பற்றி இத்தனை சூட்சுமங்கள் அடங்கியது எனும் வியப்பு அதிகமாகிறது ....

    நன்றி சகோதரி....

    ReplyDelete
  7. அன்றும் இன்றும் என்றும் அவிழ்க்க முடியாத புதிர்களில் ஒன்று பிரமிடு. நல்ல தலைப்பினைத் தெரிவு செய்து பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. நல்லா சொல்றீங்கப்பா டீடைலு ...
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பிரமிட் பற்றிய தகவல்கள் உண்மையில் பிரமிக்க வைக்கின்றது. தெரியாத விடயங்களை அறிந்துகொண்டேன்.நல்லதொரு பகிர்வு.நன்றி.

    ReplyDelete
  10. பிரமிடுகள் பற்றிய சில புதிய தகவல்களையும் உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது! அன்பு நன்றி!!

    ReplyDelete
  11. பிரமீடு பற்றிய வியத்தகு செய்திகள்அறிந்தேன்
    நன்றி

    ReplyDelete
  12. பிரமிடுகள் பற்றிய செய்திகள் மிக அருமை.

    ReplyDelete