செயற்கரிய செய்வோமைச் செய்யாம நெஞ்சே
மயக்கு வாரைவர் வலியா —- னயக்கலவி
சிந்திபுர விண்ணகரமென்பர் திருச்செங்கண்மா
ணந்திபுர விண்ணகர நாடு
திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும்
திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார்.
அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற தலத்தில் வந்து தவம் செய்தாள்.
திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.
கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால்,
மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால்
தாயாரின் திருநாமம் “செண்பகவல்லி’ ஆனது.
பெருமாளின் திருநாமம் ஜெகநாதன்.
இவர் திருநாமத்திலேயே“நாதன் கோயில்’ என்று ஆனது
நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்ற
போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு,
கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால்
கோபம் கொண்டு, சாபமிட்டனர்.
சிவன்.“பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,” என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார்.
தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால்,
“நந்திபுர விண்ணகரம்’ என தனது தலம் வழங்கப்படும்,”என்று அருள்பாலித்தார்.
சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார்.
ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.
சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.
விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது
.
செண்பகவள்ளித் தாயார் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteஅருமையான படங்கள்
ReplyDeleteஇவை ஒரு காலப் பெட்டகத்தில் பொதிக்கப் பட்டிருகின்றன வாழ்த்துக்கள்
சிறப்பான தகவல்கள் + படங்கள்...
ReplyDeleteஅழகான படங்களுடன், நந்திபுர விண்ணகரத்தலம், செண்பகவல்லி தாயார் பற்றிய சிறப்பான பகிர்வு.
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
தற்போது நாதன்கோயில் என அழைக்கப்படும் நந்திபுர விண்ணகத்திற்கு பல முறை சென்றுள்ளேன். அழகான கோயில். தங்களது பதிவும் புகைப்படங்களும் மிக சிறப்பாக உள்ளன. நன்றி.
ReplyDeleteநந்திபுர விண்ணகரக் கோயிலின் தகவல்களும் படங்களும் வெகு சிறப்பு! நன்றி!
ReplyDeleteபல அறியாத தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான பதிவு ராஜி. உங்களைப் பத்தி சாட்டர்டே ஜாலி கார்னரில் பகிர்ந்திருக்கிறேன். வாங்க வந்து பாருங்க. :)
ReplyDeleteசாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்.
ReplyDeletehttp://honeylaksh.blogspot.in/2014/11/blog-post_8.html
தந்தை வழி தாத்தா அரங்கனுக்கு பயபக்தியுடன் வஸ்திரம் நெய்வதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.. குளித்துவிட்டு இல்லத்திலிருக்கும் பிரும்மாண்ட ராமர் பட்டாபிஷேகம் , அரங்கநாதர் தஞ்சாவூர் ஓவியங்களுக்கு திருப்பாவைப்பாசுரங்கள் பாடி பூஜை செய்துவிட்டு கைத்தறி நெசவில் உருவாகும் வஸ்திரத்தைப்பார்ப்பது ஆனந்தமாக இருக்கும் கைத்தறியின் ஓசையும் திருப்பாவைப் பாசுரங்கள் இசைப்பதாக தோன்றும் .. இழை அறுந்துவிட்டால் பவித்திரமாக தண்ணீர் தொட்டு இணைப்பார்.ஆலயத்தின் யாகங்களுக்கும் பட்டுவஸ்திரங்கள் பக்தியுடன் தயாராகும் .
உங்கள் மூலம் இன்னுமொரு திவ்யதேச தரிசனம்..... மிக்க நன்றி.
ReplyDelete