Monday, November 24, 2014

திருக்கார்த்திகை சங்காபிஷேகம்








ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.

கார்த்திகை மாதத்தில் தீப ஒளியால் ஏற்படும் வெப்பத்தை நடுநிலைப்படுத்தவும் சிவரூபத்தை குளிர வைக்கவும் சங்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.
கடலில் இருந்து கிடைக்கும் சங்கு பாற்கடலில் இருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாகப் போற்றப்படுகின்றது.
சங்கினில் நிரப்படும் தீர்த்தம் மேலும் குளிர்ந்து அதைக் கொண்டு அபிஷேகம் செய்கையில் சிவபெருமான் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு வரம் அளித்ததைப் போல பக்தர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
 சங்கிலிருந்து பிரணவமாகிய ஓங்கார ஒலி எழுவது சிறப்பு..

 உலக நன்மைக்காகவும், மழைவளம் பெருகவும், கல்விச்செல்வம் அதிகரிக்கவும் வேண்டி ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோமவாரத்தில்  சிவ ஆலயங்களில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

கார்த்திகை மாதம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்படும்  சோமவார விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். 

சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடி சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான்.
கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே அவரை குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். 

சங்காபிஷேகம் செய்தால் அது தேவாமிர்தத்தால் சுவாமியை அபிஷேகம் செய்வதற்கு ஒப்பானது
திருக்கழுக்குன்றம் குளத்தில் உருவாக்கும் புனித சங்கு :
 அனைத்து சிவ தலங்களையும் வழிபட்டு விட்டு திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்த மார்க்கண்டேயர் பூஜை செய்யும்போது பூஜைக்குரிய தீர்த்தப் பாத்திரம் வேண்டி சிவனை நினைத்தார்.அப்போது சங்கு தீர்த்தக்குளத்தில் ஒரு அற்புதமான சங்கு கரை ஒதுங்கியது. 
சங்கை சிவபெருமானே பூஜைக்கு கொடுத்து அருள் புரிந்ததாக தல வரலாறு கூறுகிறது. 

இதனையடுத்து 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு உருவாகிறது. இதனை புனித சங்காக பூஜையில் வைத்து பூஜித்து வருகிறார்கள்.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது சங்குதீர்த்தக்குளத்தில் உருவாகும் புனித சங்கு பூஜையில் முதன்மை பெறும். இந்த குளத்தில் குளித்தால் தோல் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

மதுரை, திருக்கடையூர், திருவாதவூர், திருவாடானை, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருச்சி, மயிலாடுதுறை, திருக்கழுக்குன்றம் மற்றும் பல சிவதலங்களில் கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் 1008 சங்குகள் வைத்து பூஜித்து சிறப்பாக அபிஷேகம் நடத்தப்படுகிறது.
h

12 comments:

  1. சங்காபிஷேகத்துக்கு இவ்வளவு மகிமையா? 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் சங்கு - அட!

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா
    யாவும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கார்த்தினை சங்காபிஷேகம் அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. படங்கள் ஆகா...!

    சங்காபிஷேகம் பற்றிய சிறப்பை அறிந்தேன் அம்மா....

    ReplyDelete
  5. கனவில் வந்த காந்தி : http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

    ReplyDelete
  6. அறியாத தகவல்கள். படங்களும் பகிர்வும் நன்று. நன்றி.

    ReplyDelete
  7. சங்காபிஷேகம் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை மிக அழகிய படங்களுடன் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சங்காபிஷேகம் குறித்து அறிந்தேன். 12 வருடம் ஒரு முறை சங்கு வருதல் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா.

    ReplyDelete
  9. படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. நான் சங்காபிஷேகம் என்றவுடன் , சின்னச் சின்ன சங்குகளை லிஙகத்தின் மீது கொட்டி பூஜை செய்வது என்று நினைத்தேன். அப்படி அல்ல, . சங்குகளில் உள்ள நீரைக் கொட்டி அபிஷேகம் என்பதனை உங்கள் பதிவின் வழியே தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  10. சங்காபிஷேகம் பற்றிய புகைப்படங்களும், புதிய செய்திகளும் அருமையாக உள்ளன. நன்றி.

    ReplyDelete
  11. சங்கு பற்றிய தகவல்கள் புதிது- அருமை.
    மிக்கநன்றி சகோதரி.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. சங்காபிஷேகத் தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete