சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!உங்கள் வேரினிலே
நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே
தாமரை பூத்த தடாகங்களே! உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!
மாமிகு பாதைகளே! உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட அந்தியெலாம் உழைத்தார்
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ?
கீர்த்திகொள் போகப்பொருட்புவியே! உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற் சிதைந்த நரம்புகள் தோல்!
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென நின்ற இயற்கைகளே!
உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே! தாரணியே!
தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும் செல்வர்கள் நீதிநன்றோ ?
எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும் புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த வார்த்தைக்கு மோசமில்லை
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி இந்திய்த்திரு நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தது போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது
சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு.
பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்
ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்.
தினங்களை விட்டு குழந்தைகளைக்கொண்டாடும்
தினம் மலரவேண்டும்..!
.
இனிய குழந்தைகள் தினப்பதிவு.
ReplyDeleteமனமகிழ்வு தருகிறது.
நல்ல படங்கள்.
நானும் குழந்தைப்பதிவு போட்டேன் .
பொருந்துகிறது சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
சிறந்த திறனாய்வுப் பார்வை
ReplyDeleteதொடருங்கள்
அழகிய படங்களுடன் குதூகலமான குழந்தைகள் தின பதிவு. //தினங்களைவிட்டு குழந்தைகளை கொண்டாடும் தினம் மலரவேண்டும்.// உண்மையான வார்த்தை. நன்றிகள்.
ReplyDeletenice post
ReplyDeleteகுழந்தைகள் தின பதிவு அருமை.
Deletevery nice..
ReplyDelete