கோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான பாதாள விநாயகரை வணங்கிவிட்டே பரிவார தேவதைகளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்
பாதாள விநாயகர்
பாதாள விநாயகர் விநாயகர் சன்னதி
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பாதாள லிங்கம் வெகு சிறப்பான சன்னதி ஆலய. தளத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்து பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன..
காந்திமதியமமன் உடனமர் ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம்மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியில் மகாவிஷ்ணு பூசித்த லிங்கம் ஒன்று உள்ளது.
பாதாள லிங்கத்தில் உள்ள சிவபெருமானே ஆதிமூலவர் என்றழைக்கப்படுகிறார்.
சாலி வாடீசுவரன், (சாலி என்பது நெல்), விருகி விடுதீசுவரன்,
ஸ்ரீதான மூர்த்தி ஆகிய திருநாமங்கள் கொண்ட இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூசை நடக்கிறது.
பாதாள லிங்கத்தில் உள்ள சிவபெருமானே ஆதிமூலவர் என்றழைக்கப்படுகிறார்.
சாலி வாடீசுவரன், (சாலி என்பது நெல்), விருகி விடுதீசுவரன்,
ஸ்ரீதான மூர்த்தி ஆகிய திருநாமங்கள் கொண்ட இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூசை நடக்கிறது.
விருத்தாசலம் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
இங்கே ஒரு புறம் பொன்னுக்கு மாற்றுரைத்த கணேசரும் உள்ளார். பாதாள விநாயகர் சந்நிதி 20 படிகள் இறங்கிச்சென்று தரிசிக்க வேண்டும்.
முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் விக்னேசர் அருள்பாலிக்கிறார்..
விநாயகரின் அறுபடை வீடுகளில் ஆழத்து விநாயகர்இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.திருமணதடை நீக்குகிறார், குழந்தை பாக்கியம் அருள்கிறார்..
காசியை விட வீசம்புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும்விருத்தாசலத்திற்கு உண்டு."
வாயுத்தலமான திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) தலத்திற்கு வந்த அகத்தியர் வந்தபொழுது விநாயகரை வணங்க மறந்தார்.
அதனால் கோபம் அடைந்த விநாயகர், இங்கிருந்த பொன்முகலி ஆற்றின் நீரை வற்றச் செய்தார். தவறு உணர்ந்த அகத்தியர், ஆற்றின் நீர் மட்டத்திற்கு சுமார் முப்பது அடி கீழே விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே, இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று பெயர் பெற்று கோயிலின் பிராகாரத்திற்கு வெளியே ஆலயத் தளத்திற்குக் கீழே வீற்றிருந்து .
தனது துதிக்கையை உயர்த்தி வாழ்த்துச்
சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளார்.
தனது துதிக்கையை உயர்த்தி வாழ்த்துச்
சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை தீர்க்காசல ஈஸ்வரன் ஆலயம் - நெடுங்குன்றம்பாதாள லிங்கம் நந்தி தேவருடன்
நெடுங்குணம்திருவண்ணாமலை தீர்க்காஜலேஸ்வரர்பாலாம்பிகை
பாதாள லிங்கம்
பாதாள லிங்கம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில்ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி” அமைந்துள்ளது.
வியப்பான, சுவாரஸ்யமான தகவல்கள்.
ReplyDeleteபல தகவல்கள் அறியாதவை அம்மா...
ReplyDeleteஇறைவனே வியப்பானவன்! வியப்பிற்கு வியப்பூட்டும்
ReplyDeleteபாதாளக் கோயில்கள் அற்புதம்!..
அரிய தகவல்கள்! அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!
திருச்சி தாயுமானவர் சன்னதிக்குப் போய் வரும் வழியில் மட்டுவார் குழலம்மை சன்னதி அருகே ஒரு பாதாள சன்னதி பார்த்த நினைவு. சுவாமி பெயர் நினைவில்லை. ஸ்ரீ காளஹஸ்தியில் பாதாள சன்னதியில் தரிசனம் செய்ததுண்டு. நினைவுகள் சில நேரங்களில் ஏமாற்றுகின்றன. . வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎத்தனை அருமையான விஷயங்கள்...
ReplyDeleteபாதாளத்தில் நின்று நம்மை பாதாளத்தில் தள்ளாமல் காக்கும் தெய்வங்களை அழகாக புகைப்படத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதுவரை அறியா அரிய தகவல்கள் சகோதரியாரே
ReplyDeleteநன்றி
தரிசித்து மகிழ்ந்தேன். புனேயில் பாதாள லிங்கம் ஒன்று உள்ளது.
ReplyDeleteநன்றி ,மேடம்
சிறப்பான பகிர்வு அம்மா...
ReplyDeleteபாதாள கோவில்கள் தரிசனம் பெற்றேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.