Wednesday, April 20, 2011

அப்பாவிப் பறவை டோடோ..

Dodo SafariDodo Safari
Dodo SafariDodo Safari




மொரீஷியஸ் சின்னத்தில் இருக்கும் பறக்கமுடியாத பறவைகளுள் ஒன்றான டோடோ பறவையின் இனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதற்கு மனித இனமே முக்கிய பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதுமொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக்கொண்டது.
டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது



பழங்காலத்தில் மொரீசியஸ் தீவில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த இந்தப் பறவைகளுக்கு வில்லனானவர்களே மனிதர்கள்தான்.


1598-ஆம் நூற்றாண்டில் மொரிசியஸ் தீவில் வந்து இறங்கிய போர்ச்சுகீசிய மாலுமிகள் ஒரு புதுவிதமான பறவை இனம் ஒன்றைக் கண்டார்கள். 




அப்பறவையின் மூக்கு வாத்து போலவும், உடல் கோழியைப் போலவும் இருந்ததாம். சாதாரணமாக இருபது கிலோ வரை எடை இருக்குமாம்.
பொதுவாக பறவைகளானாலும் சரி அல்லது விலங்குகளானாலும்சரி புதிய மனிதர்களைக் கண்டால் மிரட்சியுடன் பார்ப்பது அல்லது விலகி ஓடுவதுதான் வழக்கம். ஆனால் மொரீசியசில் இருந்த இந்த அப்பாவிப் பறவையோ பழக்கப்பட்ட கோழிக்குஞ்சு போல மனிதர்களையே சுற்றிசுற்றி வந்தது
அப்பறவையின் பலவீனமே யாரைக்கண்டாலும் வெகுளியாய் அருகே வந்து விளையாடும். அதன் அன்பை முட்டாள் தனமாக கருதிய மாலுமிகள் தங்கள் மொழியில் அப்பறவையை முட்டாள் பறவை என அழைத்தனர். அதாவது அதற்கு டோடோ என பெயரிட்டனர்.
நாமாக இருந்திருந்தால் கொஞ்சம் இரைபோட்டு பழக்கப்படுத்தி கூடவே வைத்திருப்போம். ஆனால், அந்தத் தீவில் குடியேறியவர்களுக்கோ கொழுத்த புறா போன்று, சுமார் 20 கிலோ எடையுடன் இருந்த டோடோவைப் பார்த்ததும் நாவில் நீர் ஊறியிருக்கவேண்டும். தீக்கோழி போல விரைவாக ஓடும் என்று நம்பப்பபட்டபோதிலும்கூட அந்தப் பறவை இந்த புதிய ஆக்கிரமிப்பாளர்களான மனிதர்களைக் கண்டு ஓடவில்லை. அதுதான் அவற்றிற்கு வினையாயிற்று.
டோடோ என்ற பெயருக்கு அப்பாவித்தனம், வஞ்சகரை எளிதில் நம்பி ஏமாறுவது, விரைவில் அழிந்துபோவது என பல்வேறு வகைகளில் பொருத்தம் கொள்ளலாம். ‘டோடோ போல சாகாதே!’ என்பது இன்றும் ஆங்கிலத்தில் புழக்கத்திலிருக்கும் ஒரு வழக்குச்சொல்.
எளிதில்சிக்கிக்கொள்ளும் டோடோ பறவையை மனிதன் தனது உணவுக்காக தொடர்ந்து வேட்டையாடத் தொடங்கினான். 1681-ஆம் ஆண்டு கடைசியாக மிச்சப்பட்ட ஒரே டோடொ பறவையும் இறந்துபோனது.
மனிதன் கண்ணில்ப்பட்ட நூற்றாண்டுக்குள்ளாகவே, ஒட்டு மொத்த ஒரு பறவை இனமே அழிந்து போனது தான் பெரும் சோகம்.
டோடோ பறவையினம் அழிந்த பிறகுதான் இன்னொரு உண்மை சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளுக்குப் புரிந்தது.
மொரிசியஸ் தீவில் பிரமாண்டாமாக நின்று கொண்டிருந்த ‘கல்வாரியா’ என்னும் மர இனமும் மெல்ல அழியத் தொடங்கியது. அதற்கு முக்கியக் காரணம் டோடோ பறவை கல்வாரியா மரத்தின் பழங்களை விரும்பி உண்ணக் கூடியவை. அவ்வாறு உண்டு தன் வயிற்றில் செரித்து வெளியேறும் கழிவுகளில் கலந்து விழும் கல்வாரியா மரத்தின் விதைகள் மட்டுமே காடுகள் முழுவதும் மீண்டும் முளைக்கும் தன்மையைப் பெற்றிருந்தன.
மனித மண்டையோட்டைப்போல கடினமான உறையுடைய விதைகளை உடையது என்பதால் அந்த மரத்திற்கு இப்பெயர். இந்த மரத்தின் பழங்களை டோடோ தின்றுவிட்டு கொட்டைகளைத் துப்புவது வழக்கம். டோடோக்களின் வயிற்றினுள் புகுந்து வந்த கல்வாரியா விதைகள் மட்டுமே முளைக்கும்திறன் பெற்றவையாக இருக்கும்; மற்ற விதைகள் முளைக்காது. டோடோக்களின் வயிற்றில் சுரந்த ஏதோவொரு சுரப்பு அந்த விதைகளை பக்குவப்படுத்தி, ஓடுகளை இளக்கி பின்னர் முளைக்கச்செய்திருக்கிறது.
calvaria-tree-copy.jpg (520×346)
இப்படியொரு ஆச்சரிய உறவு பறவைக்கும், மரத்திற்கும் இருந்திருக்கிறது. இதை அறியாத மக்கள் டோடோ பறவையை வேட்டையாடிவிட, அதைத் தொடர்ந்து  அதனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கல்வாரியா மர இனமும் பெருமளவில் அழிந்தது.
டோடோக்கள் அழிந்துபோனதால் உடனடி இழப்பைச் சந்தித்தவை இந்த மரங்களே.
பிற்காலத்தில் வான்கோழிகளுக்கு இம்மரப் பழங்களைச் சாப்பிட கொடுத்து, அதன் விதைகளில் சில முளைப்புத் திறனைப் திரும்பப் பெற்றன. மொரிசியஸ் தீவில் இம் மரங்கள் மீண்டும் பெருக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனவாம். ஆனால் அழிந்த டோடோப் பறவையை இப்போது ஓவியங்களாகத் தான் பார்க்க இயலுகிறது.


இயற்கை ஒன்றுக்கொன்று நுன்னிய தொடர்பு கொண்டது. நாம் எதை அழித்தாலும் அதற்கு எதிர்விளைவு இருக்கிறது. டோடோ பறவையும், கல்வாரியா மரமும் இதற்கு உதாரணம்.
ஆக, சூழலில் உள்ள எந்தவொரு உயிரும் அழியும்போது ஏதோவொரு உயிரினம்தானே அழிகிறது என்ற பொறுப்பற்றதனத்துடன் நாம் விலகிப்போகமுடியாது; கூடாது. நமது வாழ்வும் எதோவோர்வகையில் அந்த உயிருடனும் பின்னிப்பிணைந்தே இருக்கிறது. அற்பமானவை என்று உலகில் எதுவுமே இல்லை.
இந்த உலக வளத்தையெல்லாம் அள்ளித்தின்று தீர்த்துவிடும் கோரப் பசியோடு
நவீன அறிவியல் வலைகளோடு நாமும் டோடோக்களைப்போல அழியப்போகிறோமா?

23 comments:

  1. அட!பறக்க முடியாத பறவையா?

    ,டோடோவைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. //இந்த உலக வளத்தையெல்லாம் அள்ளித்தின்று தீர்த்துவிடும் கோரப் பசியோடு நவீன அறிவியல் வலைகளோடு நாமும் டோடோக்களைப்போல அழியப்போகிறோமா?//

    நீங்கள் இதுபோல ஏதாவது சொல்லி என்னை பயமுறுத்தாதீர்கள் Please.
    நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு தினமும் இப்போது வேத வாக்காக உள்ளன.

    அந்த அப்பாவிப்பறவை டோடோ மனிதர்களை நெருங்கி நட்புடன் அன்பைப்பகிர்ந்து கொள்ள நினைத்தது போலவே, நானும் இன்று, உங்கள் வலைப்பூவைச்சுற்றிசுற்றியே வலம் வந்து வருகிறேன்.

    என்றும் என்னை உற்சாகப்படுத்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.

    என்றும் அன்புடன் உங்கள் டோடோ vgk

    ReplyDelete
  3. //டோடோ என்ற பெயருக்கு அப்பாவித்தனம், வஞ்சகரை எளிதில் நம்பி ஏமாறுவது, விரைவில் அழிந்துபோவது என பல்வேறு வகைகளில் பொருத்தம் கொள்ளலாம். ‘//

    நல்லதையே சொல்லுங்கள்.
    நல்லதே நடக்கட்டும்.

    திக்கற்றவருக்கு கடவுளே துணை.
    எங்களுக்கு என்றும் இராஜராஜேஸ்வரியே துணை!

    //இயற்கை ஒன்றுக்கொன்று நுன்னிய தொடர்பு கொண்டது. நாம் எதை அழித்தாலும் அதற்கு எதிர்விளைவு இருக்கிறது. டோடோ பறவையும், கல்வாரியா மரமும் இதற்கு உதாரணம்.ஆக, சூழலில் உள்ள எந்தவொரு உயிரும் அழியும்போது ஏதோவொரு உயிரினம்தானே அழிகிறது என்ற பொறுப்பற்றதனத்துடன் நாம் விலகிப்போகமுடியாது; கூடாது. நமது வாழ்வும் எதோவோர்வகையில் அந்த உயிருடனும் பின்னிப்பிணைந்தே இருக்கிறது. அற்பமானவை என்று உலகில் எதுவுமே இல்லை//

    படித்ததும் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

    ReplyDelete
  4. இன்னைக்கு வரை டோ டோ பற்றி தெரியாத டோ டோ வாக இருந்திருக்கிறேனே...

    ReplyDelete
  5. இதுவரை கேள்விப்படாத விஷயம்..
    படங்களுடன் விரிவாக தந்து அசத்தியுள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. பெரும்பாலான அழிவுகளுக்கு மனிதந்தானே காரணம். இது மட்டும் எப்படி விதிவிலக்காகும்.நல்ல பதிவு வாழ்த்துக்கள் சிறுகதைகள் படிக்க மாட்டீர்களா.?

    ReplyDelete
  7. மனிதன் எதைத்தான் விட்டு வைத்தான் ?
    டோடோ பற்றி அறிந்திருக்கிறேன். கல்வாரிக்கும் டோடோவுக்கும் உள்ள தொடர்பு அரிய தகவல்.

    ReplyDelete
  8. இதுவரைக்கும் நான் கேள்விபடாத; தெரியாத பறவை. அரிய தகவல்கள். ரொம்பவே மெனக்கெட்டிருக்கீங்க.. தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. யோசித்து பார்த்தால் நம் பாதங்களின் கீழே பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ள எத்தனையோ பெயர் தெரியாத உயிரினங்களின் படிமங்கள் நம்மைத்தான் டோடோ என்று சொல்லுகின்றன.

    ReplyDelete
  10. கல்வாரியா மரம் நம்மூரு அடையாறு ஆலமரத்தை நினைவு படுத்துகிறது!

    ReplyDelete
  11. அட நம்மூரூ ஆலமரம், அங்க கல்வாரியா மரம்.

    ReplyDelete
  12. புது விஷயம் இந்த டோ டோ பறவை.ஆனால் இந்தப் பறவைகளை நான் இங்கு வெயில் காலங்களில் காண்கிறேன் !

    ReplyDelete
  13. What wounderful writings and message dear.
    I cannot resist myself calling me dodo.
    viji

    ReplyDelete
  14. Dear thozi,

    You have depicted a rare information to us.How have we to maintain ecology,everyone must know.From now on,will our mankind follow vegetarianism?

    ReplyDelete
  15. :( இன்னும் எதையெல்லாம் மனிதன் கூண்டோடு அழிக்கப்போகிறானோ ?

    ReplyDelete
  16. " சூழலில் உள்ள எந்தவொரு உயிரும் அழியும்போது ஏதோவொரு உயிரினம்தானே அழிகிறது என்ற பொறுப்பற்றதனத்துடன் நாம் விலகிப்போகமுடியாது; "
    நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே .அரிய தகவல்கள் .அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .

    ReplyDelete
  17. "Vaerenna Solla...Ithai pola one-na???Miha Arumai...Ungal Ezhuthu Valamai...,Thodarum Ungal payanam MihapPuthumai...Vazhthukkal Enrenrum..."

    ReplyDelete
  18. மனிதன் இயற்கையை காப்பாற்றுகிற முயற்சி, பிற விலங்குகளை காக்கும் முயற்சியெல்லாம் சும்மா தன்னை தானே மென்மையாகவும் உயர்வாகவும் காட்டி கொள்வதற்காக செய்யும் மனோதத்துவ மாயை என்றே சொல்வேன். உண்மையைச் சொன்னால் மற்ற விலங்குகள் போல நாமும் நம்மால் அழிய போகிறோம். இது நடந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு கோஷம் எழுப்பினாலும், நம்மால் இயற்கையை அழிக்க தான் முடியும். இது தான் evolution theory. தனி மனிதனது மரணத்தை எப்படி யாராலும் தவிர்க்க முடியாதோ, அதை போல நமது இன அழிவும் தடுக்க முடியாத ஒன்று.
    Anyway nice blog.

    ReplyDelete
  19. டோடோ நிறைந்த தகவல்களுடன்.

    ReplyDelete
  20. படங்களைப் பகிர்வதற்கு மிகவும் நன்றி.

    Mrs.பழமைபேசி

    ReplyDelete
  21. \\\அற்பமானவை என்று உலகில் எதுவுமே இல்லை \\\ உண்மை...

    ReplyDelete