Sunday, May 15, 2011

பொன்மழை பொழிக...பொழிக..!!



[mahalaxmi+animated.jpg]"


கொடுக்கிற தெய்வம், கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' 
என்பது   பழமொழி ..!


உலகில் ‘தமக்கென வாழார் பெரியார்’ எனும் சொலவடைக்கேற்ப மற்றையவர்கள் உய்வு பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடே வாழும்  நல்லோர். , உயர்ந்தோர், முனிவர்கள், யோகிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று பலப்பல கால கட்டங்களில் போற்றி வணங்கி நாம் உய்வு பெற்று வருகிறோம். 

இத்தகைய உயர்ந்தோரை, மஹான்கள், அவதார புருஷர்கள், தெய்வாம்சங்கள், மற்றும் நடமாடும் தெய்வங்கள் என்றே போற்றுகிறோம். 

 உயர் கடவுளர்கள் என்று வணங்கப்படும் தெய்வங்களுக்கு உள்ள எல்லாப் பண்புகளும், குண நலன்களும், இவர்களிடம் ஓரளவுக்கேனும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் பண்புகளில் ஒன்றுதான் பிறர் நலன் பேணுதல்.

வருங்காலங்களில் குபேரனுக்குரிய நாள் நட்சத்திரம், 
சங்கரர் கனகதாராவைப் பாடிய நாள், 
வித்யாரண்யர் குருபூஜை, 
நிகமாந்த தேசிகர் குருபூஜை, 
கோடிகன்னிகாதானம் தாதாச்சாரியார் குருபூஜை 
என்றெல்லாம் கொண்டுவந்து அந்தந்த நாட்களிலும் தங்கம் வாங்கிப் பூஜையில் வைக்கச்சொல்வார்கள்.
விண்ணைத் தொடும் பொன் விலை: பவுன் ரூ. 16, 440-மக்கள் கவலைgold coins for diwali
சங்கரர், வித்யாரண்யர், நிகமாந்த தேசிகர், தாதாச்சாரியார் ஆகிய நால்வருக்காகவும் ஸ்ரீலட்சுமி பொன்னை மழையாகக் கொட்டச் செய்தாள். 

ஆதிசங்கரர் சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி தர்மத்தை கடைபிடித்துவந்தார். 

ஒருநாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று, "பவதி பிக்ஷ¡ந்தேஹி" என்று சொல்லவேண்டும். 

ஏதாவது பிக்ஷை போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும்.  அந்த ஒருவேளையிலும்கூட மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். 


வீட்டின்முன்னால் சென்று குரல் கொடுத்தார். அந்த வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்ய நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது. நெல்லிக்கனியை உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்.



ஆதிசங்கரர் . இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது. மூன்றாவது குரலுடன் போய்விடுவார்.  ஓர் இளம் சன்னியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும். 

ஆகவே நெல்லிக்கனியை ஆதிசங்கரருக்குப் போட்டுவிட்டாள். 

இதனைக் கண்ட ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம் வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார்.
mahaalaksmi.JPG (400×300)
உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். 

வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை 
ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார்.



இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார்.

 இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உறுதி மொழிகிறார் முற்றும் துறந்த மஹான் ஆதி சங்கரர். தன் பக்தர்களுக்காக லக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார்.

 நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி. 

அந்தப் பாடலைப் பூர்த்தி செய்தபோது அங்கு பொன்மழையாகக் கொட்டியது. 

ஸ்ரீவைஷ்ணவத்தின் வடகலைப் பிரிவின் முக்கிய கர்த்தா
நிகமாந்த தேசிகர்
பிள்ளை லோகாச்சாரியார் என்பவர் தென்கலையின் முக்கிய கர்த்தா. இருவருமே  ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஓர் இளைஞக்குத் திருமணம் செய்துகொள்ள ஆசை. பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு. 

தேசிகாச்சாரியாரைப் பிடிக்காதவர்கள்  அவருக்கு ஏதாவது மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி அவமானப்படுத்தவேண்டும் என்று எண்ணிஅந்த இளைஞணைத் தூண்டிவிட்டு தேசிகாச்சாரியாரிடம் பொருள் கேட்கச்சொன்னார்கள். 
தேசிகாச்சாரியாரிடம் கையில் ஒன்றுமில்லை. ஆகவே அந்த இளைஞனுக்காக அவர் ஸ்ரீலட்சுமியைத் தோத்திரம் செய்தார். 

'ஸ்ரீஸ்துதி' என்னும் அந்த தோத்திரத்தைப் பாடியவுடன் பொன்மழை பெய்தது....  



வித்யாரண்யர்: வேதம், தந்திரம், ஆகமம் முதலிய பல சாஸ்திரங்களைக் கற்றவன். தன்னுடைய வறுமையைப் போக்கிக்கொண்டு மிகப் பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை வந்துமுறைப்படி ஸ்ரீலட்சுமியை உபாசனை செய்த தவத்தின் இறுதியில் ஸ்ரீலட்சுமி தேவியிடம் செல்வம் கேட்டான். 
இந்தப் பிறவியில் அவனுக்கு அந்தப் பேறு கிடையாது என்று சொல்லிவிட்டாள். 
"இன்னொரு பிறவியில்தான் கிடைக்குமா?"
"நிச்சயம் கிடைக்கும்". உடனே அவனுக்குள் ஒரு மின்னலடித்தது.
சன்னியாசத்திலேயே பலமுறைகள் இருக்கின்றன. 
ஆதிசங்கர்ர் எடுத்துக்கொண்டது ஆபத்சன்னியாசம்.

வித்யாரண்யர் மானச சன்னியாசத்தைத் தனக்குள் சங்கல்பித்துக்கொண்டான். 

"தாயே! இப்போது நான் சன்னியாசம் மேற்கொண்டுவிட்டேன். சன்னியாசம் என்பது புதியதொரு பிறவிதான் என்று சாஸ்திரப்பிரமாணம் இருக்கிறது. ஆகவே இப்போது நான் இன்னொரு பிறவி எடுத்து விட்டேன். இப்போது நீ எனக்கு செல்வத்தைக் கொடுக்கவேண்டும்." 

உடனே ஸ்ரீலட்சுமியின் அருளால் அந்த இடத்தில் பொன்மழை பெய்தது. அந்தப் பொன்னை அள்ளிக்கொண்டுபோக முயற்சித்த அந்த இளைஞனைப் பார்த்து ஸ்ரீலட்சுமி கேலியாகச் சிரித்தாள். 

ஏனப்பா சன்னியாசிக்கு எதற்கு இந்தப் பொன்னெல்லாம்?" 

அத்தனை செல்வத்தையும் துருக்கர் ஆக்கிரமிப்பால் சிதைந்து போய் சீரழிந்திருந்த இந்து தர்மத்தையும் இந்து சமுதாயத்தையும் நிலைநிறுத்த உறுதி எடுத்து செய்வதற்கு இந்துக்களின் சாம்ராஜ்யம் மீண்டும் தோன்றவேண்டும். அரச வம்சங்கள் வேண்டும். புராண கால விஸ்வாமித்திரன் தன்னுடைய தபோவலிமையால் திரிசங்குவுக்காக சொர்க கலோகத்தையே சிருஷ்டி செய்ததுபோல இந்துக்களுக்காக பேரரசு, சமுதாய வாழ்வியல், அரச பரம்பரை எல்லாவற்றையும் சிருஷ்டி செய்துவிட்டார்.
 
இந்து சாஸ்திரங்கள் அழிந்துபோகாமல் இருக்கும் வண்ணம் தம்முடைய தம்பியுடன் எல்லாவற்றுக்கும் எழுத்துப் படிவம் கொடுத்து அவற்றுக்கு உரைகள் எழுதினார். 

காட்டில் திரிந்துகொண்டிருந்த ஐந்து சகோதரர்களைக் கூடிவந்து அவர்களை வைத்துப் புதியதொரு அரசபரம்பரையைத் தோற்றுவித்தார்.

 ஒரு விஜயதசமியன்று அஸ்திவாரம்போட்டு அடுத்த விஜயதசமியன்று உலகிலேயே மிக அழகான, மிகப்பெரியதான, மிகப்பாதுகாப்பான தலைநகரமாக   விஜயநகரப் பேரரசை வித்யாரண்யர் தோற்றுவித்ததற்கு அஸ்திவாரமாக இருந்தது.....பொன்மழை.

தாதாச்சாரியார்: கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாக இருந்தவர், 'கோடி கன்யாதானம் தாதாச்சாரியார்'. 

இஷ்டதெய்வமாக திருமகளை வழிபட்ட வைஷ்ணவர் 

உபாசனையால் தினந்தோறும் ஸ்ரீலட்சுமியால் அவருக்கு கொடுக்கப் பட்டப் பொற்காசு கொண்டு  பல்லாயிரக்கணக்கான ஏழைக் கன்னிப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆகவேதான் அவரைக் 'கோடி கன்யாதானம் தாதாச்சாரியார்',  என்று அழைத்தார்கள். 

அவருடைய செல்வாக்கால்தான் கிருஷ்ணதேவராயரும் திருவேங்கடநாதனின் தீவிர பக்தனாக விளங்கினார். 

திருமலைக் கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர்தான் மிக அதிகமான திருப்பணிகளையும் செய்திருக்கிறார். 

தண்ணீர் பற்றாகுறை தீரும் வண்ணம் பல ஊர்களில் அவர் குடிதண்ணீர்க் குளங்களை அவருடைய செலவில் வெட்டுவித்திருக்கிறார். 

அவற்றில் பல, இன்றும் இருக்கின்றன. அவற்றை தாதாச்சாரியாரின் பெயராலேயே 'தாதன் குளம்' என்று அழைப்பார்கள். 

இன்னும் பல அறங்களை அவர் செய்திருக்கிறார். அவர் கோடிகன்யாதானமும் பல அறச்செயல்களும் செய்திருக்கிறார். அதற்கு உதவியது.....பொன்மழை.

அமிழ்தினும் இனிய தமிழில் தெய்வீக அவதாரமான சங்கரரின் தங்கம் வர்ஷிக்கும் துதியை அனைவருக்கும் தங்க மழை பொழிய பிரார்த்தித்து.....


"சிலிர்த்துப் பறக்கும் எழில் பொன் வண்டுகளைப்போன்று
மலர்ந்து விரிந்தன தமால மலர் மொட்டுக்கள்
திருமாலின் மலர் மார்பினில் அமர்ந்த தேவி நின்
மலர் விழிப் பார்வை எனக்கு மங்களங்கள் சேர்க்கட்டும் (1)


நீலத் தாமரையில் வண்டு அமர்வதும் பறப்பதும் போல்
நீல விழி வண்டுகள் மாதவன் மலர் முகம் நோக்க
பாற்கடலில் உதித்த மந்தஹாச மலர் முகத்தாள் நின்
பார்வை எனக்கு செல்வச் செழிப்பினை அருளட்டும் (2)


அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே
முரன் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட
நீலோற்பவ மலரின் விழி முகத்தாள் நின்
நீல விழி பார்வை எனக்கு சௌபாக்யத்தை அளிக்கட்டும் (3)


எல்லையில்லா இன்பத்தில் கார்வண்ணன் இமைகள் மூட
எல்லையில்லா காதலினால் நின் இமைகள் மூட
மறக்க அளவில்லாக் கருணையே உருவாய் அமைந்த தேவி நின்
கோல விழி பார்வை எனக்கு கோடி செல்வம் அளிக்கட்டும் (4)


மது அரக்கனை அழித்த மாலவன் மருவும் தேவி
மாதவன் மார்பினில் ஒளிரும் கௌஸ்துப மணி நீயே
மான் விழி பார்வை மாலுக்கே வளம் சேர்க்கும் நின்
மகத்தான பார்வை எனக்கு மங்களத்தை அளிக்கட்டும் (5)


கார்மேக வர்ணனின் கண்ணனின் பரந்த மார்பில்
ஒளிர் வீசிடும் மின்னல் கொடியென ஒளிரும் தேவி
பார்க்கவ மகரிஷியின் பார்காக்கும் திருமகளே
நின் பார்வை எனக்கு பல வளங்கள் சேர்க்கட்டும் (6)


பொங்கும் மங்களம் தங்க அரக்கனை சம்ஹரித்த
மகாவிஷ்ணு மார்பினில் மகிழ்வுடன் உறைபவளே
நின் காதற் பார்வை காமனுக்கு பெருமை சேர்க்க
நின் அருட் பார்வை எனக்கு அருளும் பொருளும் அருளட்டும் (7)


வேள்வியோ கடும் தவமோ புரிய இயலாத என்னை
கேள்வியே கேளாமல் சுகமான வாழ்வைத் தந்து
தோல்விகள் இல்லாத வெற்றிகள் எனக்கருள்வாய் நின்
தளிர் பார்வை எனக்கு தாராளமாய் நிதி அருளட்டும் (8)


கருணை மழைக்காக ஏங்கும் சாதகப் பறவை என்னை
வறுமை என்னும் வெப்பம் தாளாது துடிக்கும் முன்னே
பெருமை பொங்க உலகில் வாழவைப்பாயே நின்
குளிர் பார்வை எனக்கு குறையா செல்வம் பொழியட்டும் (9)


முத்தொழில் புரியும் முகுந்தனின் துணைவியே
காத்தலில் அலை மகள் நீ படைத்தலில் கலைமகள் நீ
அழித்தலில் மலைமகள் நீ எத்தொழில் புரிந்திடவும் நின்
எழில் பார்வை எனக்கு தொழில் மேன்மை அளிக்கட்டும் (10)


வேத வடிவானவளே ஞானஒளி தந்தருள்வாய்
நாத வடிவானவளே நற்கல்வி தந்தருள்வாய்
வேத நாதம் அனைத்தும் அருளிடும் வேதவல்லியே நின்
கடைக்கண் பார்வை எனக்கு கலை மேன்மை அளிக்கட்டும் (11)


எழில் தாமரை ஒத்த முகமதியாளே வணக்கம்
திருப்பாற்கடல் உதித்த திருமகளே வணக்கம்
அமுதமும் அம்புலியும் உடன் பிறப்பானவளே நின்
அருட்பார்வை எனக்கு ஆயகலைகள் அருளட்டும் (12)


பொற்றாமரை வீற்றிருக்கும் கொற்றவளே வணக்கம்
கற்றார் உளம் வீற்றிருக்கும் திருமகளே வணக்கம்
கமல மலரில் உறையும் லட்சுமி தேவியே வணக்கம்
கவலையெலாம் போக்கும் அலைமகளே வணக்கம் (13)


பெருமா மகரிஷியின் தவ செல்வியே வணக்கம்
திருமால் மார்பில் திகழும் தேவ தேவியே வணக்கம்
கமல மலரில் உறையும் லட்சுமி தேவியே வணக்கம்
கவலையெல்லாம் போக்கும் அலைமகளே வணக்கம் (14)


தாமரையில் கொலுவீற்றிருக்கும் ஒளிவடிவே வணக்கம்
மூவுலகும் தொழும் களஞ்கியமே வணக்கம்
தேவருலகம் வணங்கும் தெய்வ வடிவே வணக்கம்
நந்த கோபாலன் கோகுல நாயகியே வணக்கம் (15)


கமல விழி மலரே காண்போர்க்கு அருள் விருந்தே
ஐம்புலன்களின் ஆனந்தமே ஐஸ்வர்யம் அளிப்பவளே
என்றும் தொழுவோர்க்கு ஏற்றங்கள் தரும் தேவி
என்றென்றும் எனக்கே செல்வ வளங்கள் தந்தருள்வாய் (16)


கண்ணாளன் திருமாலின் மலர் மார்பில் உறைபவளே
வெண்பட்டு சந்தனம் மலர் மாலை அணிபவளே
எண்ணற்ற செல்வம் எளியோர்ர்க்கு அருள்பவளே
கண் மலர்ந்து தேவி செல்வங்கள் நீ அருள்வாய் (17)


கடைக்கண் பார்வை வேண்டி நிதம் தொழுவோர் கோடி
கடைக்கண் மட்டுமின்றி கமலவிழி பார்வையால்
கடையனாய் இருந்தோர்க்கு கணக்கற்ற செல்வம் தந்தாய்
கடயேனைக் காத்தருள் கனிந்துருகி வணங்குகின்றேன் (18)


அஷ்டதிக் கஜங்களால் கங்கை நீரால் அபிஷேகம்
அஷ்ட ஐஸ்வர்யம் வேண்டி தங்கக் குடத்தால் அபிஷேகம்
அஷ்ட லெக்ஷுமியே உன்னை வணங்குகிறோம் நாளும்
கஷ்டங்கள் களைந்து இஷ்ட செல்வங்கள் நீ அளிப்பாய் (19)


கமல மலர் உறைபவளே மலரிதழ் விழியாலே
மாதவன் துணையாக மார்பில் உறை ஓவியமே
ஏழைக்குள் முதல்வனாய் எளிமையுடன் வாழுகின்றோம்
ஏழையை காத்து என்றும் இனிய வாழ்வினை நீ அளிப்பாய் (20)


வேதஸ்வரூபினியை மூவுலகும் தொழும்
நாதஸ்வரூபினியை நாள்தோறும் வணங்கி
ஸ்வர்ணமாரி பொழியும் ஸ்ரீதேவி மந்த்ரமிதை
சொல்பவர்க்கு திருமகள் திருவருள் புரிந்திடுவாய் (21)
 -ஸ்ரீ கனகதரா ஸ்தோத்ரம் சம்பூர்ணம்"


DMT vision

14 comments:

  1. ஆஹா ஆன்மீக படைப்பு அருமை!

    ReplyDelete
  2. உங்கள் பதிவு சேவை என்னை ஆச்சிரியபட வைக்கிறது...மங்கலகரமான பதிவு.

    Hi friend, To see my todays' special post in my blog


    http://zenguna.blogspot.com/

    ReplyDelete
  3. ஆன்மீக மணம் கமழும் பதிவு. திவ்வியமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. கடைசியில் இருக்கும் அனிமேஷன் எதற்காக? ஏதேனும் உட்பொருள் இருக்கிறதா?

    ReplyDelete
  5. மிக மிக அருமை . இணைப்பில் உள்ள "ART" மிகவும் நன்று!!.பத்மாசூரி.

    ReplyDelete
  6. ஆன்மீக மணம் செறிய வீசும் அருமையான பதிவு.

    ReplyDelete
  7. படங்களுடன் பதிவு அருமை. பொறுமையாக இவ்வளவும் டைப் செய்யும் உங்களுக்கு மறுபடி ஒரு சபாஷ்!

    ReplyDelete
  8. வருங்காலங்களில் குபேரனுக்குரிய நாள் நட்சத்திரம், சங்கரர் கனகதாராவைப் பாடிய நாள், வித்யாரண்யர் குருபூஜை, நிகமாந்த தேசிகர் குருபூஜை, கோடிகன்னிகாதானம் தாதாச்சாரியார் குருபூஜை என்றெல்லாம் கொண்டுவந்து அந்தந்த நாட்களிலும் தங்கம் வாங்கிப் பூஜையில் வைக்கச்சொல்வார்கள்.//
    உண்மை

    ReplyDelete
  9. கன்கதாரா ஸ்தோத்திரம் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. ஸ்ரீலக்ஷ்மியின் படங்கள், கனகதாரா ஸ்தோத்ரம், மற்ற கதைகள், விளக்கங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன.

    கடைசியில் மிகப்பெரிய அழகிய கோலம்போல மங்கலகரமாக காட்டப்பட்டுள்ளது, அதைக் காண்பவர் வீட்டிலெல்லாம் லக்ஷ்மி கடாக்ஷமும், தங்க நெல்லிக்கனிகளும் கொட்டுவதுபோல தோற்றமளிக்கிறது.

    பாராட்டுக்கள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  11. Aha!
    Miha arumai.
    kanakadara slokathin Tamil akkam arumaiullum arumai.
    Very good write up dear.
    Nice pictures.
    viji

    ReplyDelete
  12. படங்களும் பதி்வும் பக்திமயமா இருக்கு தோழி !

    ReplyDelete
  13. ;)

    கேஸவா
    நாராயணா
    மாதவா
    கோவிந்தா
    விஷ்ணு
    மதுசூதனா
    திருவிக்ரமா
    வாமனா
    ஸ்ரீதரா
    ஹ்ருஷீகேஷா
    பத்மநாபா
    தாமோதரா
    -oOo-

    ReplyDelete