ஆடி மாதத் தொடக்கத்தில் காவிரியில் வெள்ளம் வரத் துவங்கும்.
ஆடி பதினெட்டு அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும்.
மகாபாரதத்தில் பதினெட்டு பர்வங்கள்,
பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள்,
சித்தர்கள் 18 பேர்கள்,
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள்,
குடிமக்கள் 18 வகை,
நெல் முதலான தானியங்கள் 18
எனப் பலவும் அந்த அடிப்படையிலேயே அமைந்ததை அனுசரித்துத்தான், நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக் கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள்.
உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் காவிரி அன்னைக்கு ‘
ஆடி பதினெட்டு’ என்று விழாவும் எடுத்தார்கள்.
நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, அத்துடன் சிறிதளவு மண்ணோ - எருவோ கலந்து, தண்ணீரும் தெளித்து வைப்பார்கள். விழாவுக்குள் ஆடி பதினெட்டு விழாவில் முளைத்து, வளர்ந்து இருக்கும். முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி...
ஆடி பதினெட்டு அன்று முளைப் பாலிகையைக் கையில் ஏந்தியபடி, பெண்கள் ஆற்றங்கரையில் வட்டமாக கும்மி அடிப்பார்கள்.
சர்க்கரை, பச்சரிசி ஆகியவற்றுடன் தண்ணீரை கலந்து, பிள்ளையார் முன்னால் வைப்பார்கள்.
மஞ்சள் தடவிய நூல் சரடை முதிய சுமங்கலியிடம் பெற்று அணிந்துகொள்வார்கள்..
ஒன்றாகக் கூடிக் கும்மி, கோலாட்டம் என ஆடுவார்கள். ஆடி முடித்ததும் ஆற்றில் இறங்கி, அவரவர் தாம் கொண்டு வந்த முளைப் பாலிகைகளை சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள்.
மதுரையில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவுக்குக் கொடியேற்றும் உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் பட்டு. முளைக்கொட்டு உற்சவம் நடக்கும்.
எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம் !!.
மதுரை சுற்றியுள்ள மக்கள் அனைவருமே மீனாக்ஷியைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டு முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.

அம்மனுக்கு 21 என்ற கணக்கிலேயே எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வதால் இதையும் 21 விதமான விதைகளைக் கொண்டு செய்வதும் உண்டு.
ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப்படும்.
பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தரும் அன்னையின் முன் பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக முளைப்பாரிகளை வைத்திருப்பார்கள்.

கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைக்கப்படும்.






கருகமணி, காதோலை ஆகியவற்றையும் ஆற்றில் விடுவார்கள். ‘


ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்ய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார்.

கோவிலிலிருந்து யானையின்மேல் மங்கலப் பொருட்களான புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழம், தாம்பூலம், கருகமணி ஆகியவற்றைக் கொண்டு வரும் மங்கலப் பொருட்களை பெருமாள்முன் சமர்ப்பித்து பூஜைசெய்து, பின் காவேரித் தாயாருக்கு பூஜை செய்து காவேரி நதியில் சமர்ப்பிப் பார்கள்.








