Saturday, February 23, 2013

மகாமகம் திருநாள் ...







அன்னை உமா தேவியார் மாசி மாதத்தில், மக நட்சத்திரத்தில் தக்கனின் மகளாக அவதரித்தாள் என்பதால், மாசி மாதத்தின் பௌர்ணமி நாள் தேவியின் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
புண்ணிய காலங்களில் மிகவும் சிறந்ததாக மகாமகம் கருதப்படுகிறது. 
உலகத்தைப் படைக்க வேண்டி உலகப் பொருட்களின் சாரத்தை ஒரு கும்பத்தில் வைக்க அது நீரில் மிதந்து வரும்போது இறைவன் கும்பத்தை அம்பால் அடித்தபொழுது கும்பத்தின் மூக்கு(கோணம்) உடைந்து வீழ்ந்ததாகவும் அந்த இடமே கும்பகோணம் எனப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
   
பிற தலங்களில் செய்யும் பாவம் காசி தலத்தில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.

சிவபெருமான் வேடன் உருக்கொண்டு, கும்பத்தின்மீது அம்பெய்து  குடம் உடைந்து அமுதம் வழிந்து எட்டுத் திசைகளிலும் பரவியது. 

குடத்தை அலங்கரித்திருந்த பொருட்கள் வெவ்வேறு இடங்களில் விழுந்து லிங்கங்களாகக் காட்சி அளித்தன.

 குடத்தின் வாய்ப்பகுதி விழுந்த இடம் குடவாயில் எனப்பட்டது.

குடத்திலிருந்த அமுதம், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலிவனம் ஆகிய ஐந்து தலங்களிலும் பாய்ந்து  செழுமையாக்கியது.

அதன் பிறகு பிரம்மா படைப்புத் தொழிலைத் தொடங்க சிவபெருமான் அனுமதிக்க, பிரம்மன் மனம் மகிழ்ந்து பூர்வ பட்சத்தில் வரும் அசுவதி நட்சத்திர நாளில் கொடி யேற்றம் செய்து, பெரு மானையும் தேவியையும் எட்டு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்தார்.

ஒன்பதாவது நாள் மேரு மலையைப்போல் உயர்ந்த தேர் செய்து, அதில் பஞ்ச மூர்த்திகளை எழுந்தருளச் செய்தார்.

 பத்தாவது நாளான மக நாளில் பஞ்சமூர்த்திகளை வீதி உலா வரச் செய்து, மகாமகத் தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும் மாசி மக விழாவை ஆரம்பித்து வைத்த அடிப்படையில்தான் மாசி மக விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகிறது.
மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்க ளைத் தரிசிப்பதும் தொடுவதும்
பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; 
பாவங்கள் தொலையும்.  தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம்,
பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி
நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.
சகல பாவங்களும் தீர்க்கும் மாசி மகம்
வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, அவர் கடலில் கட்டிப் போடப்பட்டிருந்தார். 

வருண பகவானது செயல்பாடுகள் இன்றி அனைவரும் துன்புற்ற னர். வருண பகவானை விடுவிக்கும்படி தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர்.  
ஈசன்  வருண பகவானை விடுவித்த தினம் மாசி மக நாள். 

தோஷம் நீங்கப் பெற்ற வருணன் சிவபெருமானை நோக்கி, "மாசி மக நன்னாளில் தீர்த்தம் ஆடி வழிபடுகிறவர்கள் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலனைப் பெற அருள வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டதால் சிவபெருமான் அவ்வாறே வரமருளினார்



22 comments:

  1. மஹா மஹத்திருநாள்.

    முதல் படமே கொள்ளை அழகாக உள்ளது. நல்ல தரிஸனம் காலை 5.15 மணிக்கு.

    மீண்டும் முழுவதும் ரஸித்து விட்டு சனிக்கிழமை மாலையில் வருவேன்.

    இப்போது தான் எனது வெள்ளிக்கிழமை தூக்கமே துவங்க உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  2. Aha......
    What a pretty darshan of Devi...
    So nice dear. Thanks for the post.
    viji

    ReplyDelete
  3. மாசி மகம் பற்றிய அருமையான செய்திகள் படம் எல்லாம் சிவபெருமான் அருள் கிடைத்த மகிழ்வை தருகிறது.

    ReplyDelete
  4. மாசிமகம் படங்கள் தகவல்கள் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  5. மிக நல்ல அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete

  6. மகாமகம் என்ற செய்தியைப் படிக்கும்போது, ஜெயலலிதா சசிகலாவின் கும்பகோண நீராடல் நினைப்பு தவிர்க்க முடியவில்லை. கடந்த மகாமகம் முடிந்த சில நாட்களில் கும்பகோண மகாமகக் குளத்தில் பேரன் பேத்தியோடு மகிழ்ந்ததும் மறக்க முடியாதது. நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மகாமக தகவல்குடன் படங்களும் அருமை. முதல் பட தரிசனம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  8. அழகிய வண்ண வண்ண படங்கள் உண்மையில் பாராட்டுகள் ...

    ReplyDelete
  9. அழகான படங்களுடன் விளக்கங்களும் சிறப்பு.

    ReplyDelete
  10. அருமையான படங்கள் சூப்பரா இருக்கு பதிவு. முதல் படத்தில் அம்மன் அலங்காரம் கண்ணைக் கொள்ளை கொள்ளுது...

    ReplyDelete
  11. அடேங்கப்பா ...... அடேங்கப்பா ......

    கடைசி இரண்டு படங்களிலும் ஜன சமுத்திரங்களாக உள்ளனவே!

    இதில் எப்படிப்போய் பிறர் முதுகில் இடிக்காமல் மூழ்கிக் குளிப்பது?

    பிறர் மேல் முட்டாமல் மோதாமல் எப்படி எழுவது?

    சிவ சிவா !!

    >>>>>>>

    ReplyDelete
  12. கீழிருந்து மூன்றாவது படத்தில் காசு மாலைகளும், மாதுளை முத்துக்கள் போன்ற கல் அட்டிகை மாலைகளும் அழகோ அழகு.

    புஷ்ப மாலைகளோ ப்ரும்மாண்டம்.

    >>>>>>>

    ReplyDelete
  13. கீழிருந்து நாலாவது படத்தில் அம்பாளின் புடவை விசிறி மடிப்பு அழகோ அழகு தான்.

    குட்டியூண்டு அம்பாளுக்கு எவ்ளோ பெரிய புடவை கட்டியிருக்காங்கோ,

    அடேங்கப்பா ....... அடேங்கப்பா.

    >>>>>>>>

    ReplyDelete
  14. புண்ணிய காலங்களில் மிகவும் சிறந்தது மாசி மகம் !

    மகம் ஜகத்தை ஆளும் என்பார்கள், உண்மையே !!

    கும்பத்தின் மூக்கு உடைந்ததால் அது கும்பகோணமா!!!

    அச்சா, நல்ல பெயர் தான்.!

    காசியில் செய்த பாபமும் கும்பகோணத்தில் கரைந்து போகுமா!

    பஹூத் அச்சா!!

    குடத்தின் வாய் உடைந்து விழுந்த இடம் குடவாயில் .... ஆஹா!

    மாசி மக விழாவின் கதையை அழகாகச் சொல்லி வர்ணித்துள்ளீர்கள்.

    குளத்தில் குளித்து பித்ருகடன்கள் தருபவர்கள் நற்கதி அடையட்டும்

    >>>>>

    ReplyDelete
  15. சூப்பரான சுவையான பதிவினைத் தந்துள்ளதற்கு நன்றியோ நன்றிகள்.

    அன்பான பாராட்டுக்கள்.

    இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவினைப்படித்து முடித்ததுமே கும்பகோணம் நேரில் சென்று குளித்து வந்தது போல குதூகலமாக உள்ளது.

    நேரிலேயே சென்று நெசுங்கி வரும் புண்யாத்மாக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ;)

    oooooo

    ReplyDelete
  16. படங்கள் தீர்க்கம். மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  17. படங்களும் தகவல்களும் வெகுசிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. அப்பப்பா! எத்தனை தகவல்கள்!
    மகாமகத்திற்கு இத்தனை சிறப்புகளா என்று வியக்க வைத்தது உங்கள் இந்தப் பதிவு.

    மிகச்சிறந்த பதிவு!

    ReplyDelete
  19. தகவல், படங்கள் எல்லாமே மிக அருமை.

    ReplyDelete