Monday, December 16, 2013

மார்கழித் திங்கள் ..மதி கொஞ்சும் நன்னாள்..





"காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்ய தீஸ்வரி
நந்தகோப சுதம் தேவி பதிம் மே குருதே நம:'

பிருந்தாவனத்தில் கோபியரான கன்னிப்பெண்கள், அதிகாலையிலேயே யமுனையில் நீராடி என்று தேவியைத் துதித்து, கண்ணனையே கணவனாக அடையவேண்டினர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. 
ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை-பார்வதியை வழிபட்டனர். 
பரமாத்மாவைக் கணவனாக அடைய விரும்பினர். 
கார்த்தியாயினி துதியைச் சொல்லி தேவியை வழிபட்டு நல்ல 
கணவனை அடையலாம் ..!

"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து 
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்  
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி   நான்' - 
ஆண்டாள் அற்புத மொழி

மார்கழி நோன்பு நோற்ற மகிமையால் ."மதுசூதனன் வந்து தன் கைத்தலம் பற்றி' மணம் புரிந்துகொண்டதாக கனவு பற்றி ஆண்டாள் பாடிய 11 பாடல்களில் திருமணச் சடங்குகள் எல்லாவற்றையும் பாடியிருக்கிறாள்.

வாரணம் ஆயிரம்  என்னும் சுட்டியை சுட்டி பதிவில்  பார்க்கலாம் ..
http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_4692.html

பெரியாழ்வார் மணக்கோலத்தில் தளிர்நடையுடன் கோதை உள்ளே செல்ல, அவளது பௌதீக உடல் அரங்கனுக்குள் ஐக்கியமாகிறது. 

ஆண்டவனையே தன் பக்தியினால் மணந்து ஐக்கியமானதால் அவள் ஆண்டாளாகிறாள். 

ஆண்டாள் ஆடிப்பூரத்தில் உதித்தவள். (பார்வதி, காமாட்சி ஆகியோரின் அவதார நட்சத்திரமும் பூரமே). ஆண்டாள் பூமாதேவி அம்சம் சிறுவயதிலிருந்தே அரங்கன்மீது பக்திகொண்டு, அவரை மணாளனாக அடைய விரும்பி வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. 

எனவேதான் இந்த மார்கழி நோன்பு- கோதை நோன்பு உன்னதம் பெறுகிறது.மார்கழி "பீடு' உடைய மாதம்- பெருமைக்குரிய மாதம்.

சிறப்பான மார்கழி மாதம்  புண்ணியம் தரும் ஆன்மிக மாதம். 

மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்' என்பது கண்ணன் வாக்கு. 


நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த வைகாசியையோ, ராமர் அவதரித்த சித்திரையையோ, திருமலைவாசனுக்குகந்த புரட்டாசியையோ, தான் அவதரித்த ஆவணியையோ கண்ணன் குறிப்பிடவில்லை. 


எல்லாக் காலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளினார். 


காலம் ஒரு கடவுள். காலமாக இருப்பவனும் கடவுள். இவரிவர்களுக்கு இன்னது, இப்போது நடக்கும் என்று காலங்களை நிர்ணயித்து விதிப்பவனும் கடவுள். 


 திருவாய் மொழி, மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசுகின்ற திருவாசகமாக அமைந்தது 


சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு  சிறந்தது. 

வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப்பொருத்தமான மாதம் என்பது   சிறப்பு. 

தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. 
உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. 
இத்திருநாள் மார்கழியின் ஒருநாள். 

மார்க்க சீர்ஷம்   மார்கழி என்று மாறியது. 
மார்க்க சீர்ஷம் என்றால் தலையாய மார்க்கம்.  தனுர் மாதம்.

அதிக அளவு பிராண வாயு கலந்த ஓசோன் மார்கழி மாதம்  முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தரையில் படியும். அப்போது அதிகாலை நீராடினால்- நீரிலும் ஓசோன் கலந்திருப்பதால் உடலுக்கு நல்லது. திறந்தவெளியில் நடமாடுவதால் காற்றில் உள்ள ஓசோன் உடலில் படியும்.

இதனால்தான் முன்னோர்கள் மார்கழி நீராடல், அதிகாலை பஜனை செய்தல், பெண்கள் வீதியில் கோலமிடல் என ஏற்படுத்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆலயம் செல்ல வேண்டும் என வகுத்துள்ளனர். 

[DSCN0251[1].JPG][DSCN0251[1].JPG]

ஒருபிடி சாணத்தில் பிள்ளையாரைப் பிடித்து பூக்கின்றபோதே காய்க்கின்ற பூசணிப்பூவை, வழிபடுகின்றபோதே அருளுகின்ற பிள்ளையாரின் திருமுடிமேல் சூட்டுகிறோம் ..!

பிள்ளையார் அனைவருக்கும் அருள்வதற்கு பிரசன்னமாகிறார். 

கோலத்தின் வெண்மை-பிரம்மன்; 
சாணத்தின் பசுமை-விஷ்ணு; 
செம்மண்ணின் செம்மை-சிவன். 

முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் 
மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. 
எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம். அனைத்தும் மார்கழியின் சிறப்புகள்.

ஆலயங்களில்  திருப்பாவை, திருவெம்பாவை தெய்வீகப் பாடல்களின் இன்னிசை அதிகாலை ஒலிபரப்பப்படும்
ஆண்டாள்,  அருளிய திருப்பாவை, மாணிக்கவாசகரின் தித்திக்கும் திருவெம்பாவை போன்ற பாவை நூல்களை  மார்கழியில் தினமும் பாராயணம் செய்யத் தொடங்குவார்கள்..!

திருப்பதியில் மார்கழி மாதம் முழுவதும்  
தமிழ் வேதமான திருப்பாவை ஒலிக்கும் ..! 
ஆவுடையார் கோவில், மதுரை, சிதம்பரம், திருநெல்வேலி, குற்றாலம் முதலிய  சிவத்தலங்களில் மாணிக்கவாசகர்-திருவெம்பாவை உற்சவம், மார்கழியில் சிறப்பாக பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். 

மாணிக்கவாசகருக்கு சிறப்பு அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகங்களுடன் பவனி ஊர்வலமும் உண்டு. பத்தாம் நாள் நடைபெறுவதே திருவாதிரை.
ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தாரில் நீராட்டு, 
தைலக்காப்பு விழா மார்கழியில் நடைபெறுகிறது. 

http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_13.html

ஸ்ரீஆண்டாள் வைர மூக்குத்தி சேவை -- இந்தப்பதிவில் 

வைர மூக்குத்தி சேவைய  கவிச்சக்ரவர்த்தி கம்பருடன் 

இணைந்து  தரிசிக்கலாம்  


20 comments:

  1. Respected Madam,

    VERY VERY GOOD MORNING !

    HAVE A VERY NICE DAY !!

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ,,வாழக வளமுடன் ...

      இனிய காலை வணக்கங்கள்...

      Delete
  2. Respected Madam,

    VERY VERY GOOD MORNING !

    HAVE A VERY NICE DAY !!

    >>>>>

    ReplyDelete
  3. தங்களின்
    வெற்றிகரமான
    1 1 2 5 ஆவது
    பதிவுக்கு என்
    மனம் நிறைந்த
    பாராட்டுக்கள்,
    அன்பான இனிய
    நல்வாழ்த்துகள். ;)

    ;)))))))))))))))))))))))))))))

    >>>>>

    ReplyDelete
  4. தங்களின் சாதனைப் படிக்கட்டுக்களை நினைக்க நினைக்க மனதுக்கு மிகவும் சந்தோஷம் + ஆனந்தம் ஏற்பட்டு, மகிழ்ச்சியில் என் மனம் பூரித்தும் விடுகிறது.

    இதன் பின்னனியில் உள்ள தங்களின் கடும் உழைப்பும், ஈடுபாடும், ஆர்வமும், துடிப்பும் என்னால் நன்கு உணர முடிகிறது !!!!!!!!!!!!!!!

    தங்களின் இன்றைய இந்தப்பதிவினை பொறுமையாக படித்துவிட்டு, மீண்டும் கருத்துச்சொல்ல பிறகு வருவேனாக்கும் !

    Bye for Now !

    >>>>>

    ReplyDelete
  5. ”மார்கழித் திங்கள் ....
    மதி கொஞ்சும் நன்னாள் ....”

    பதிவின் தலைப்பினிலேயே

    பதிவரின் ’மதி’யைக்கண்டேன்

    படிக்கப் படிக்க இனித்தது .......

    பக்திப் பரவஸம் கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
  6. படங்கள் அத்தனையும் வழக்கம் போல
    அழகோ அழகு ! இனிப்போ இனிப்பு !!

    ஆண்டாளே அழகு தானே !

    கலியுக ஆண்டாள் தந்துள்ள பதிவும்
    கற்கண்டாக இனிக்கத்தானே செய்யும் !!!!!!! ;)

    >>>>>

    ReplyDelete
  7. ஆங்காங்கே சுட்டிகள் கொடுத்துள்ளது அந்தப்பழைய பதிவுகளுக்குப்போய் தரிஸிக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

    அப்படியே பலரின் பின்னூட்டங்களையும் மீண்டும் ஓர் முறை படித்ததில் மேலும் மகிழ்ச்சியே.

    அதுவும் அந்த வைர மூக்குத்திப் பதிவினில் எட்டுக்கல் பேஸ்திரியாக முதல் எட்டுப் பின்னூட்டங்களும் என்னுடையதாக அமைந்துள்ளதில் எனக்கு ஏராளமான மகிழ்ச்சி.

    தங்களின் ஒரே ஒரு பதிலால் அந்த என் எட்டுக்கல் வைர மூக்குத்தி மேலும் ஜொலிக்கக்கண்டேன் ;)))))

    >>>>>

    ReplyDelete
  8. கோலங்கள் அனைத்தும் மிகவும் ரஸித்தேன்.

    கோலமிட்ட கைகளுக்கு எந்தன் ஸ்பெஷல் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    எனினும் எனக்கு மிகவும் பிடித்தமான கோலம்:

    //எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம்; அனைத்தும் மார்கழியின் சிறப்புக்கள்//

    என்ற சிகப்பு எழுத்துக்களுக்குக் கீழே இடதுபுறம் முதலில் உள்ள வெள்ளைக்கோலம் தான்.

    அந்த வெள்ளைக்கோலம் என் மனதை கொள்ளை கொண்டதே ;)))))

    >>>>>

    ReplyDelete
  9. மார்கழி மாதப்பிறப்பன்று, ஆண்டாள் பற்றிய மிகச்சிறப்பான பதிவினைக்கொடுத்து, ஆண்டாள் தன் தோழிகளை மார்கழி நீராட அழைப்பதுபோல, தாங்களும் தங்கள் பதிவினைப் படிக்கவும் பார்க்கவும் அழைத்துள்ளது போல உணர்ந்தேன்.

    நீங்கள் எங்கே எனக்கு மெயில் கொடுத்து அழைக்கிறீர்கள் ? ;(((((

    அவ்வாறு அழைப்பதுபோல கனாக்கண்டேன் தோழி !!!!!! ;)))))


    >>>>>

    ReplyDelete
  10. மனம் நிறைந்த பாராட்டுக்கள்,

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்,

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    மார்கழிக் குளிருக்கு இதமாக, தொடர்ந்து தினமும் இதுபோல கொடுத்து அசத்துங்கோ ! ;)))))

    ooo ooo ooo

    ReplyDelete
  11. அருமையான படங்கள் + சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. எப்போதும்போல இப்போதும் அழகியப் படங்களுடன் அருமை.கோலங்களும் சிறப்பாக உள்ளது.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கோலங்களும் படங்களும் கொள்ளை கொண்டன.....

    மார்கழி 1 சிறப்பு பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. மார்கழி மாதத்தின் அருமை பெருமைகளையும்
    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளைப் பற்றியும் கூறிய அழகான பதிவு!..

    ReplyDelete
  15. மார்கழி மாதத்தின் பெருமைகளை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். அனைத்துப் படங்களும் அருமை. அதிலும் குறிப்பாக பெருமாளுக்கு தீபாராதனை காட்டும் படம் கண்ணுக்கு விருந்து. நன்றி.

    ReplyDelete
  16. மார்கழிச் சிறப்பு, கோலங்கள் மிக அற்புதம்.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. மார்கழிக் கோலங்கள் வெகு அழகு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் புகைப்படங்கள் அருமை.
    இனிய மார்கழி மாத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. கோலங்களும் படங்களும் மிக அருமை.

    ReplyDelete
  19. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete