Friday, May 9, 2014

மகாஞானி பரமஹம்ஸ ஸ்ரீசதாசிவப்பிரம்மேந்திரர்





ராகம் - சாமா -   தாளம் - ஆதி

பல்லவி:

மானஸ சஞ்சரரே ப்ரஹ்மணி மானஸ சஞ்சரரே

சரணம் 1:

மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே மஹனீய கபோல விஜிடமுகுரே

சரணம் 2:

ஸ்ரீ ரமணி குச துர்க விஹாரே சேவக ஜன மந்திர மந்தாரே 

சரணம் 3:

பரம ஹம்சமுக சந்த்ர சகோரே பரிபூரிட முரளீரவதாரே

விளக்கம்:

என் மனமே, விவரிக்கவியலாத, எல்லைகளைக் கடந்த “பிரமம்” என்னும் பரந்தவெளியில் உன் தியானம் என்னும் பயணத்தைத் தொடங்கு.

நீ  தியானிக்க இருக்கும் பிரம்மத்தில் பகவான் மஹா விஷ்ணுவின்  
திரு முடியானது மகிழ்ந்து நடனமிடும் மயிலின் தோகையினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அனைவருக்கும் மேலானவரின் கன்னங்கள் கண்ணாடியை விட அதிகமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் .
அங்கே தன் சகதர்மினியான மகா லக்ஷ்மியின் ஆன்மாவில் வாசம் செய்யும் இறைவன், அவர்தம் பக்தர்களுக்கு கேட்பது அனைத்தையும் தரும் 
கற்பக விருட்ஷமாக விளங்குகிறார்.

பரமஹம்சர்களாகிய ஞானிகள் இத்தகைய அற்புதமான இறைவனின் நிலவு போன்ற முகத்திலிருந்து சிந்தும் ஒளியைப் தம் கண்களாலும், இந்த அகில உலகங்களையும் பூரணமாக்கும் இறைவனின் புல்லாங்குழலின் இனிய இசையை தம் காதுளாலும் பருகிக் களிகின்றனர்.

என் மனமே, நீயும் இந்த பிரமத்தினுள் உன் பயணத்தைத் தொடங்குவாயாக.
(பரமஹம்சர்கள்: ஹம்சம் என்றால் அன்னபறவை, 
புராணங்களில் அன்னப்பட்சியானது தெய்வீகம், 
தூய்மை மற்றும் விடுதலையைக் குறிக்கிறது. 

எனவே பரமஹம்சர்கள் என்பவர்களை ஆய கலைகளை கற்ற 
முற்றும் துறந்த ஞானிகள் என்று கொள்ளலாம்
பாமரர்கள் உருவ வழிபாட்டில் ஈடுபட்டு உயர்ந்திட 
ஆறு சமயங்களை வகுத்தார் ஆதிசங்கரர். 
மேலும் ஆன்ம முன்னேற்றம் பெற அத்வைதத்தை போதித்தார். 
ஜீவனும் பரமனும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்குவது அத்வைதம். 
இந்த அத்வைத ஞான மார்க்கத்துக்கு பல நூல்களையும் அருளினார்.

அந்த அத்வைதத்திற்கு மேலும் பல நூல்களை இயற்றிய அப்பய்ய தீட்சிதரது வம்சத்தில் வந்த கோவிந்த தீட்சிதர், கும்பகோணத்தில் அரசரின் உதவியைக் கொண்டு பல கோவில்களைப் புதுப்பித்துக் கட்டினார்; புதிதாகவும் அமைத்தார். 

அவருக்கு கோவிந்தபுரம் என்ற கிராமத்தையே அரசர் ஈந்தார்.
அந்த கோவிந்தபுரத்தில் சமாதி யடைந்தவர்- நாம மகிமைக்கு பல நூல்களை எழுதியவரும், காமகோடி பீடத்தின் 58-ஆவது ஆச்சாரியாருமான பகவன்நாம போதேந்திரர். சிவ அவதாரம் எனக் 
கருதப்பட்டவர் திருவிச நல்லூர் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள். 
இத்தனை ஞானியர்களது சமகாலத்தவர்தான் ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரர். 
 நூறாண்டுகள் வாழ்ந்தவர்

 
 ஸ்ரீராகவேந்திரர், ஞானதேவர் போன்று, தான் சமாதியாகப்போகும் நாளை முன்கூட்டியே அறிவித்துவிட்டு சமாதியானவர். 

கரூர் அருகில் நெரூர் என்ற இடத்தில் சதாசிவரது சமாதிக்கோவில் உள்ளது. வைசாக சுத்த தசமி திதியில்  ஆராதனை நடக்கும்.

இதில் வினோதம்  மானாமதுரை, ஓங்காரேஸ்வர், கராச்சி ஆகிய இடங்களிலும் இதே சமயத்தில் அவர் சமாதியடைந்ததாகச் சொல்கிறார்கள். மானாமதுரையிலும் ஓங்காரேஸ்வரத்திலும் குரு ஆராதனை நடக்கிறது. 

பல தலங்களில் வழிபட்டு இறுதியாக ராமேஸ்வர சிவனைப் பணிந்த. பிள்ளைப் பேறில்லாத.60 வயதான சோமநாத யோகி- பார்வதி தம்பதியர் கனவில் சிவபெருமான்   தோன்றி "ஞானச்செல்வன் பிறப்பான்' என்றருளியவாறே மதுரையில் குழந்தை பிறந்தது. 

தங்கள் குலதெய்வ நாமமான கிருஷ்ணன் என்பதை இணைத்து, 
சிவராம கிருஷ்ணன் என்று பெயரிட்டனர்.

குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்த சிவராமன், 
தாயார் பராமரிப்பில் வளர்ந்தார். 

ஐந்து வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு, ஸ்ரீதர அய்யாவாளிடம் பயின்றார். வேதம், புராணம், சாஸ்திரம், வியாகரணம், தர்க்கம், உபநிடதம் போன்றவற்றை மிக விரைவில் அறிந்த தார். சங்கீதமும் கற்றார்
பிள்ளையின் அதீத அறிவாற்றலைக் கண்ட அன்னை, காஞ்சி காமகோடி 
57-ஆவது பீடாதி பதியான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதியிடம் மகனை ஒப்படைத்தார்.

அவரும் சிவராமனின் அறிவுக்கூர்மையை மெச்சிய. நிலையில், மைசூர் மன்னரிடமிருந்து தர்க்க சாஸ்திர விவாதத்துக்கு அழைப்பு வரவே, ஸ்வாமிகள் சிவராமனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

சிவராமனும் ஆழ்ந்து வாதிட்டு மற்றவர்களைத்  தோற்கச் செய்தார்.

 சதாசிவப் பிரம்மேந்திரர்  தனக்கிருந்த அபார தர்க்க அத்வைத மீமாம்ஸக ஞானத்தால், வாதாட வரும் பண்டிதர்களைத் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டு தோற்கடித்தார். 

இதனைக் கண்ட பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், 
"அபார ஞானமுள்ள; பல ஞான நூல்களை எழுதிப் பிரகாசிக்கவும் பிரகாசப்படுத்தவும் வேண்டியவர்- இப்படி விவாதத்தில் நாட்களைக் கழிக்கிறாரே' என்று மனத்தாங்கல் கொண்டு 
"சிவராமா, உன் வாய் மூடாதா?' என்றார்.

அதையே குரு ஆக்ஞையாகக் கருதி, அதன் பின் மௌன ஸ்வாமிகளானார். 

அத்வைத ஞானத்தில் அமிழ்ந்து பல கிரந்தங்களை எழுதினார். 

ஆத்மவித்ய விலாசம், உபநிஷத சாரம், யோக சுதாகரம், பதஞ்சலியோக விளக்கம், பிரம்மசூத்ர பிரகாசம், கைவல்ய அம்ருதபிந்து, 12 உபநிடத வியாக்யானம் போன்றவை புகழ்பெற்றவை..

சிவபக்தியில் ஆழ்ந்து சிவ மானச பூஜை, தட்சிணாமூர்த்தி தியானம், நவரத்னமாலா, ஸ்வானுபூதி பிரகாசிகா போன்ற துதிகளையும் இயற்றினார்.

சங்கீதத்திலும் ஈடுபட்டு 27 கீர்த்தனங்கள் செய்தார். 
"பரமஹம்ஸ' என்பது முத்திரை அடி. இவர் பாக்கள் பல்லவி மற்றும் நான்கு அல்லது இரண்டு வரி சரணங்களுடன் இருக்கும். 
எம்.எஸ். சுப்புலட்சுமி, பால முரளிகிருஷ்ணா போன்றோர் இவற்றைப் பாடியுள்ளனர். 

பஜனை சம்பிரதாயங்களில் அதிகமாகக் கேட்கலாம். 

பஜரே கோபாலம், பஜரே யதுநாதம், மானஸ சஞ்சரரே, கேலதி மேஹ்ருதயே, சிந்தா நாஸ்திகில போன்றவை அதிகமாகப் பாடப்படும். இறைவனின் நாம குணங்களை இவை விவரிக்கும். 

பிரம்மைவாஹம்கில, பூர்ண போதோஹம், ஆனந்த பூர்ண போதோஹம் போன்ற அத்வைத தத்துவம் கூறும் பாடல்களையும் பாடியுள்ளார்.

இவரது பணியில் மனம் நெகிழ்ந்த பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,
சிவ ராமனுக்கு சந்நியாசம் தந்து சதாசிவப் பிரம் மேந்திரர் என்ற பெயரையும் சூட்டினார்.

சந்நியாசம் பெற்றுவிட்டால் சஞ்சாரம் செய்யவேண்டியது கடமையே. அவ்வாறு அவர் சஞ்சரிக்கும்போது, திருச்சி அரண்மனையில் பண்டிதராக விளங்கிய தாயுமானவருக்கு மௌனகுருவாக உபதேசம் அருளினார்.

அத்வைத ஞானத்தில் மூழ்கிவிட்டால் ஆத்ம- பரமாத்ம ஐக்கியம்- சிவோஹம் என்ற நிலைதான். உடலைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

உடல் என்ற ஒன்றுள்ளது என்றுகூட சிந்திக்க மாட்டார்கள்.

எனவே அவர் அவதூத (ஆடை அணியாத) சந்நியாசியாகத் திகழ்ந்தார்.
ஒரு சித்தபுருஷராக விளங்கினார்.

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்ற மனப்பான்மை சித்தர்களுக்குண்டு.

பலசமயங்களில் அவரைச் சுற்றி சிறுபிள்ளைகள் விளையாடிக்
கொண்டிருப்பார்கள். ஒருசமயம் அவர்களில் இரண்டு குழந்தைகள் அவரிடம், "சாமி, பசிக்கிறது' என்றார்கள்.

அவர் எல்லா குழந்தைகளின் கைகளிலும் சிறிது மணலைக் கொடுத்துவிட்டு கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்.

"உங்களுக்கு என்ன தின்பண்டம் வேண்டுமோ, அதை மனதில் நினையுங்கள்' என்றார். பின்னர் கைகளைத் திறந்து பார்க்கச் சொன்னார். 

பிள்ளைகளின் கைகளில் முறுக்கு, சீடை, வடை, இட்லி, மாம்பழம் என்று அவரவர் விரும்பியவை இருந்தன. அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

மற்றொரு சமயம், "மதுரையில் மீனாட்சி கல்யாண உற்சவம் நடக்கிறது; பார்க்கப் போகலாமா?' என்று பிள்ளை களிடம் கேட்டார்.

எல்லாருக்கும் ஆனந்தம். "என்னைக் கட்டிக்கொண்டு கண்களை மூடுங்கள்' என்றார். சிறிது நேரம் கழித்து கண்களைத் திறக்கச் சொன்னார். பிள்ளைகள் கண்திறந்து பார்த்தனர். என்ன ஆச்சரியம். எல்லாரும் மதுரையில் இருந்தனர். மகிழ்ச்சியுடன் விழாவை ரசித்த பின்னர், அதேபோல் அவர்களை பழைய இடத்துக்கு அழைத்து வந்தார்.

தஞ்சையருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் சதாசிவரால் உருவாக்கப்பட்டவள்.

தஞ்சை மன்னரின் மகள் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருக்க, புற்றுமண்ணைப் பிடித்துப் பிரசாதமாகத் தந்தார். மகளின் நோய் தீரவே, தஞ்சை மன்னர் இந்த ஆலயத்தை அமைத்தார்.

சதாசிவர் புற்று மண்ணால் உருவாக்கியதால், இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகுகாப்புதான் சாற்றப்படும்.

புதுக்கோட்டை மன்னர். பிரம்மேந்திரரிடம், "குருவின் நினைவாக வைத்துக்கொள்ள ஏதாகிலும் தர வேண்டும்' என்று கேட்டார். "இந்தா' என்று ஒரு பிடி மணலைக் கொடுத்தார். அது இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் தங்கப்பேழையில் பாதுகாத்துவரப்படுகிறது.

ஒருசமயம், கொடுமுடி காவிரி மணலில் குழந்தைகள் குழிதோண்டி 
விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர் அந்தக் குழிக்குள் அமர்ந்துகொண்டு மூடி விடச் சொன்னார். பிள்ளைகளும் மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். சில மாதங்கள் கழிந்தன. 

ஊர் மக்கள் "சுவாமிகளைக் காணவில்லையே' என்று பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது குழியில் மூடிவிட்டதாக குழந்தைகள் சொல்ல, மக்கள் அங்கு சென்று பிள்ளைகள் காட்டிய இடத்தில் மண்வெட்டி கொண்டு தோண்டினர். 

அப்போது ரத்தம் வெளிப்பட, பயந்து நிறுத்தினர்.
ஸ்வாமிகள் குபீரென்று எழுந்து ஓடிவிட்டார்.
வேறொருசமயம், அவர் வீதியில் நடந்துசென்றபோது, அப்பகுதியை ஆட்சிசெய்த முகம்மதிய மன்னன் "தன் காவலாளியிடம் ஒரு ஆடையைக் கொடுத்து "அணியச் சொல்' என்றான்.
தன்னிலை மறந்து நடந்த அவருக்கு அது கேட்கவில்லை.

எனவே மன்னன், "ஒரு கையை வெட்டு; உணர்வு வந்துவிடும்' என்றான். காவலாளி அவ்வாறே வெட்ட, கை வெட்டுப்பட்ட உணர்வுமின்றி அவர் நடந்துசென்றார்.

இதைக் கண்ட அரசன் "இவர் மாபெரும் சித்தபுருஷர்' என்றுணர்ந்து ஓடிவந்து பணிந்தான். தன் தவறுக்கு மன்னிப்பு வேண்டினான்.

"துண்டுபட்ட கையைப் பொருத்து' என்றார் அவர். அதன்படியே பொருத்த, அது முன்புபோல் ஒட்டிக்கொண்டது. எதுவும் நடவாதவர்போல் அவர் நடக்கலானார்.

கரூருக்கு அருகே தான்தோன்றி மலைமேல் உள்ள  கல்யாண வேங்கடேசப் பெருமாள் கோவில்  சுயம்புமூர்த்தி ...  , "திருப்பதி சென்று காணிக்கை கைங்கரியங்களை செய்ய முடியாதவர்கள் இவ்வாலயத்தில் செய்து, திருப்பதி சென்ற பயனைப் பெற அருளவேண்டும்' என்று சதாசிவரிடம் வேண்ட, அவரும் வேங்கடேசரை வணங்கி, ஆலயத்துக்குப் பல சத்காரியங்கள் செய்து,  ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார்..இன்றும்  பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.
சமாதியடைய வேண்டிய காலம் நெருங்கியதை உணர்ந்த அவர், பக்தர்களை அழைத்து நெரூரில் குழிதோண்டச் சொன்னார். "இது நான் சமாதியாகும் இடம். இதில் நான் அமர்ந்ததும் குழியை மூடவும். நாளை காசியிலிருந்து ஒருவர் சிவலிங்கம் ஒன்றைக் கொண்டுவருவார். அதை இங்கே பிரதிஷ்டை செய்யுங்கள். வில்வமரமும் வளருங்கள்' என்றார்.  வைசாக சுத்த தசமியில் சமாதியடைந்தார்.
DSC_0003.JPG - Chillakallu Ashram Entrance with Sadasiva Brahmendra Swami's Statue
மந்த்ராலய ராகவேந்திரர், பூனா ஞானதேவர்,ஜீவசமாதிகள் 
இன்றளவும்  பக்தர்களுக்கு அருளுவது போல  
சதாசிவப் பிரம்மேந்திரரின் சமாதியும் விளங்குகிறது.
சிருங்கேரி நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு ஏற்பட்ட அத்வைதம் சம்பந்தமாக  சந்தேகங்கள்  நெரூர் சென்று சதாசிவரின் சமாதியருகே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டச்போது  சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் கிடைத்தது. 

அதன்காரணமாக சதாசிவர்மீது, சதாசி நடகம் (8) என்றும், சதாசிவேந்த்ர ஸ்தவம் (45) என்றும் துதிகளை இயற்றினார்.
"மேன்மையான சந்நியாசிகள் அவரை வணங்குகிறார்கள். விநாயகரால் அகற்ற முடியாத விக்னங்களையும் அகற்றும் ஸ்ரீ சதாசிவேந்திரரை வணங்குகிறேன்' என்று துதிக்கிறோம்..!.

Sadashiva brahmendral charithram Smt.Vishaka Hari

தொடர்புடைய பதிவுகள்



26 comments:

  1. சதாசிவப் பெருமானை வணங்குவோம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமையான படங்களுடன் சதாசிவப் பெருமானை பற்றிய சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா...

    ReplyDelete
  3. அடுத்த மாதம் Bangalore - Thiruvannamalai - Karur - Palani -
    Marudhamalai - Bannari - Bangalore என ஒரு சுற்றுலாவிற்கு
    அட்டவணை தயாரித்துவிட்டு, கோயம்புத்தூரில்
    பார்க்க வேண்டிய இடங்கள் என்று பேரூர், நேரூர்
    என்று குறிப்பிட்டிருந்தேன்.

    சதா சிவப் பிருமேந்திரரைப் பற்றி முன்பு ஒருமுறை
    படித்திருந்தேன். தரிசிக்க வேண்டும் என்ற ஆசை
    மனதில் இருந்தது. நேரூரைப் பற்றிய விவரங்களை
    நாளை தேடிக்கொள்ளலாம் என்ற நினைப்புடன்
    உறங்கிவிட்டேன். இன்று காலை உங்களின்
    வலைத்தளத்தை பார்த்ததும் ,
    ஆனந்தமடைந்தேன் !

    பிருமேந்திரரின் ஆசியே கிட்டியது போன்ற உணர்வு .
    சிறப்பான பதிவிற்கும், தகவல்களுக்கும்
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  4. மஹாஞானியாகிய ஸ்ரீசதாசிவப்ரம்மேந்திர ஸ்வாமிகளைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. மஹா பெரியவரின் அரிய புகைப்படத்திற்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  6. மஹா பெரியவரின் அரிய புகைப்படத்திற்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
  7. அறிந்திராத ஒரு மகானை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. படங்கள், பாடல்களுடன் சிறப்பான பதிவு.நன்றி.

    ReplyDelete
  8. ஒரு மேலிடம் அனுப்பியுள்ள பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாட்டான ‘மானஸ சஞ்சரரே’ பாடலைக்கேட்கிறாயா என்று நான் இங்குள்ள மற்றொரு மேலிடத்தினைத் தெரியாமல் நான் கேட்கப்போய் ......

    “ஆஹா, மூக்கான மூக்கல்லவா அவங்களுக்கு ! எனச் சொல்லியவாறே, பாடல் ரஸிகரும் பாடகியுமான இந்த மேலிடம், என் கணனியை பிடுங்கிக்கொண்டு இரண்டு மூன்று முறை அந்தப்பாடலையே திரும்பத்திரும்பக் கேட்டு ஆனந்தமாகத் தானும் கூடவே பாடிக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு Further Comments என்னால் அனுப்ப இயலாது.

    அடுத்தது திருமதி. விசாஹா ஹரியின் கதை வேறு உள்ளது ...... அது எனக்கும் பிடித்தமானது ...... அதனால் முடிந்தபோது தாமதமாக மீண்டும் வருவேன்.

    ஆனால் எப்போது வருவேன் என எனக்கே தெரியாதூஊஊஊஊ. ;)

    >>>>>

    ReplyDelete
  9. இவரது பல பாடல்களை கேட்டதுண்டு. அவரின் வாழ்க்கை வரலாறு இங்கே படிக்கக் கிடைத்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  10. ஸத்குரு மஹான் ஸதாசிவ பிரும்மேந்திராளுக்கு அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

    அவர்களின் ஆராதனை தினத்தையொட்டி இந்தப்பதிவினை மூன்றாம் ஆண்டாக தொடர்ந்து, வித்யாசமான முறையில் தாங்கள் கொடுத்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  11. தொடர்புடைய பதிவுகளுக்கும் சென்று அனைத்தையும் மீண்டும் நினைவு கூர்ந்து மகிழ்ந்து வந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  12. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பல்லாண்டுகள் கைங்கர்யம் செய்து வந்த திருச்சி ஸ்ரீ ஸ்ரீகண்டன் என்பவர் [திருமணமே செய்துகொள்ளாதவர்], ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஸித்தி அடைந்தபின் துறவியானவர் .... அவரும் துறவி ஆன பிறகு ’ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள்’ எனவே அழைக்கப்பட்டார்.

    தன் 67வது வயதில் இதே நாளில் தான் ஸித்தியடைந்தார்.

    அவரின் பிருந்தாவனப்பிரவேஸம் திருச்சி ஆங்கரை கிராமம் காயத்ரி வாய்க்கால் கரையோரம் ஓர் மண்டபத்தில் நடைபெற்றது.

    இன்றும் அங்கு அவரின் அதிஷ்டானம் நன்கு பராமரிக்கப்பட்டு, நித்யப்படி பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அவருக்கும் இன்றும் நாளையும் தான் அமர்க்களமாக ஸ்ரார்த்தம் + ஆராதனை இங்கு திருச்சி டவுனிலும் + அவரின் அதிஷ்டானத்திலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

    திருச்சி டவுனில் நடைபெறும் இந்த ஆராதனை நிகழ்ச்சிகளில் நான் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்வது வழக்கம்.

    >>>>>

    ReplyDelete
  13. தங்களின் படங்களும் விளக்கங்களும் வெகு அருமை.

    அதுவும் அந்தக்கடைசியாகக் காட்டியுள்ள பல்வேறு மஹான்களின் படங்கள் மிக அருமை.

    >>>>>

    ReplyDelete
  14. மீண்டும் பிறகு வருவேனாக்கும் ...... ஜாக்கிரதை !

    >>>>>

    ReplyDelete
  15. சில கேள்விப் பட்டிருக்கிறேன். சில சம்பவங்கள் புதிது. இவரது கீர்த்தனைகள் எனக்குப் பிடிக்கும்.

    ReplyDelete
  16. ”வாழ்க்கையை எளிமையாக்கிக்கொண்டால்
    பொருளுக்காக எப்போதும் அலைய வேண்டிய
    அவசியம் இருக்காது”

    உண்மை. உண்மையோ உண்மை. அதனால் மட்டுமே நான் எந்தப்பதிவர்களின் பதிவுகளுக்கும் அலைவதே இல்லை.

    என் பதிவுலக வாழ்க்கையை மிகவும் இனிமையாகவும் எளிமையாகவும் ஆக்கிக்கொண்டு விட்டேன்.

    தங்கள் தளத்துக்கு மட்டுமே தொடர்ந்து வருகிறேன். அதில் எனக்கு வேண்டிய பொருளும் பொருளுக்குப் பொருளும் எனக்கு சுலபமாகக் கிடைத்து விடுகிறது.

    எனக்கான ஆத்ம திருப்தி அதில் மட்டும் தான் உள்ளது.

    சுகமாக .... பரம சுகமாக உணரவும் முடிகிறது.

    ஆனந்த .... பரமானந்த சுகானுபவம் அதுவே என்பதை எப்போதோ தெரிந்துகொண்டு விட்டேன்.

    >>>>>

    ReplyDelete
  17. ஸதாசிவ பிரும்மேந்திராள் அவர்களின்
    சரித்திரம் ஒரு சமுத்திரம் .......

    அவற்றை அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளது
    படிக்க பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

    எப்பேர்ப்பட்ட மஹான்கள் இந்த நம் புண்ணிய பூமியாம் பாரதத்தில் வாழ்ந்து நமக்கெல்லாம் நல்வழி காட்டியுள்ளார்கள் !

    அவற்றையெல்லாம் அழகாக படங்கள் மூலமும், பதிவுகள் மூலமும், எழுத்துக்கள் மூலமும் அருமையாகவும் பொறுமையாகவும், எளிமையாகவும், சுவையாகவும், கதையாகவும் எடுத்துச்சொல்ல தங்களை விட்டால் யார் இருக்கிறார்கள் ?

    தங்கமானத் தங்களை அடைய நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    ஒவ்வொன்றையும் பொறுமையாகப் பார்க்கவும், படிக்கவும், ரஸிக்கவும், Feedback கொடுக்கவும் கூட, கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
  18. இப்போது இன்று ஸ்ரீ ஸ்ரீகண்ட ஸ்வாமிகளின் ஸ்ரார்த்தம் முடிந்து, வேத பிராமணர்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, ஸ்ரார்த்த அக்ஷதையைப் போட்டுக்கொண்டு, வடை, சொஜ்ஜி அதிரஸம், எள்ளுருண்டை, லாட்டு உருண்டை, திரட்டுப்பால் முதலியன மட்டும் பிரஸாதமாக எடுத்துக்கொண்டு, புறப்பட்டு வீட்டுக்கு வந்தேன்.

    நாளைய தினம் அவரின் ஆராதனை மிகச்சிறப்பாக இங்கு நடக்க உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  19. பல விஷயங்கள் சொல்லிப்போகும் பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. பல விஷயங்கள் சொல்லிப்போகும் பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. பலவிஷயங்கள் சொல்லிப் போகும் பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. இன்று STATE FIRST MARK 1193 வாங்கியுள்ள ஆனந்தி என் நெருங்கிய BHEL நண்பர் திரு. பரமேஸ்வரன் என்பவரின் இரண்டாவது பெண்.

    எங்கள் தெருவில் எங்கள் இல்லத்துக்கு அருகே குடியிருப்பவர்கள்.

    எங்கள் குடும்ப நண்பரும் கூட.

    எவ்ளோ மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது இது. !!!!

    ஆனந்தியின் இந்த சாதனை ஆனந்தத்தில் எல்லை அல்லவா !

    என்னவோ ... அறிவுக்கு இருப்பிடமான அம்பாள் போன்ற தங்களிடம் இதைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். பகிர்ந்து கொண்டுள்ளேன். ;)

    >>>>>

    ReplyDelete
  23. பதிவினை முழுவதும் படித்து முடித்துவிட்டேன். திருமதி விசாஹா ஹரி அவர்களின் உபந்யாசம் மட்டுமே கேட்க பாக்கியுள்ளது.

    அதையும் இன்று இரவு நிம்மதியாக கேட்டு மகிழ்வேன்.

    சிறப்பான இந்தப்பதிவுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    oo oo oOo oo oo

    ReplyDelete
  24. படங்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  25. மனச சஞ்சரரே பாடல் மிகவும் பிடித்த பாடல். அந்த இனிமையான பாடலை இயற்றிய மஹா ஞானியாகிய ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் பற்றி இன்று பல வியப்பான தகவல்களை அறிந்தேன்.

    ReplyDelete
  26. தெரியாத ஒரு மகானைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete