Monday, September 5, 2011

ஓங்கி உலகளந்த உத்தமன்


thirukovilur divyadesam
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி கோதை போற்றிய நாயகன் -
முதலாழ்வார்கள் மூவர் மங்களாசனம் செய்த பெருமாள் -
உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.  

உலகளந்த பெருமாள் ஸ்ரீ சக்கரம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

வேணுகோபாலர் க்ஷேத்திர பாலகராக அருளுகிறார்.

கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்றனர்.
[Gal1]
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் 5 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது.தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். 

(முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம். 

இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என கூறுகிறார்கள். கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார்.
வாமணர்
[Gal1]
மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்டதாகவும், அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் நம்பிக்கையின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது.

Sri Trivikramaswamy Temple – Thirukovilur
கோயில்களில், பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பார்! அமர்ந்த கோலத்தில் இருப்பார்! படுத்த வண்ணம் இருப்பார்!

நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைப் போற்றுவோம்!

நடந்தான்-என்றொரு கோலமும் இருக்கிறது.!  காலைத் தூக்கி நடக்கும் பாவனையில்! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!அதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று.

பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கிற கோலம்.

கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல்,
கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.
பொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,
 பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.
- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்!
- அது துவங்கிய இடம்- திருக்கோவிலூர்!

கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
thirukovilur ulagalanthaperumal
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
குழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே
-திருமங்கை ஆழ்வார் பாசுரப்படி வயல்களில் இனிமையான கரும்பும்,புன்னை மரங்களின் குளிர் சோலையும் வரவேற்பது கண்கொள்ளாக்காட்சி..

நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள்,பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு.

கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன.
இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள் ) தொல்லை நீங்கும்.
[Gal1]
மூலவர் சிறப்பு : அரசன் மகாபலி சக்ரவர்த்தியின் ஆணவத்தை அடக்க குள்ளமாக வந்து பின் விசுவரூபமெடுத்து வலது காலில் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலில் பூமியில் நின்றபடியும் அருள்பாலிக்கிறார்.

வழக்கமாக அனைத்து பெருமாள் கோயிலிலும் விஷ்ணு வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் வைத்திருப்பார். 

இங்குள்ள பகவான் மகாபாக்கியசாலியான மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருவது பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஐதீகம்.

தனது வலது கையில் ஒன்று , மூன்றாவது அடி எங்கே என கேட்பது போல அமைந்திருக்கும். 
தூக்கியிருக்கும் விஷ்ணுவின் வலது காலை பிரம்மா ஆராதனை செய்கிறார்..

மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள வாமனராக 
வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். 
[Gal1]
இந்த விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு என்னும் முனிவருக்கு விருப்பம் ஏற்பட்டது.

அவர் பிரம்மாவிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டார்.

பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார் பிரம்மா.

அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பல காலம் இத்தலத்தில் கடும் தவம் இருந்தார்.

அத்தலத்துக்கு வருவோருக்கு அன்னதானத்தையும் அந்த தம்பதியர் அளித்து வந்தனர். 

ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார்.

அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சமில்லை.

மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம், வந்தவருக்கு இல்லை என சொல்லாமல், ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

வீட்டிலோ ஒரு பொட்டு நெல்மணி கூட இல்லை. எனவே, கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத கற்பில் சிறந்த அப்பெண்மணி, நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள்.

 ""நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால், இந்த பாத்திரம் நிரம்பட்டும்,'' என்றாள்.

உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது, அந்தணர் வடிவில் வந்த பெருமாள், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார்.

முதல் ஆழ்வார்கள் மூவர் : பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர்.

ஒரு முறை இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர்.

இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச் செய்தார்.

முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா என கேட்டார். 

அதற்கு முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் என கூறி சென்றார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என வினவினார்.

அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று கூறி அழைத்துக் கொண்டார்.

இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர். 

இப்படியாக மூவரும் நின்று கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

 "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்ட போது, பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.

மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!

அவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்!

இடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!

 
மூன்றடி மண் கேட்ட பெருமாள் என்பதால் இங்கு உலகளந்த பெருமாள் என்று போற்றப்படுகிறார்.

இங்கு ஷேத்திராபதி வேணுகோபால் ஆவார்.

மூலவர் திருமேனி தாருவால்(மரம்) ஆனது.

இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது.

வழக்கத்துக்கு மாறாக பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருவது சிறப்பு.

108 வைணவத் தலங்களில் இங்கு மட்டும் தான் சுயம்பு விஷ்ணு துர்க்கை உள்ளது. 

இது நடுநாட்டுத் திவ்ய தேசங்களில் முக்கியமானது ஆகும்.

192 அடியில் அமைந்த தமிழ் நாட்டின் மூன்றாவது கோபுரம் இங்கு அமைந்துள்ளது.

அசுர குரு சுக்கிராச்சாரியாருக்கு இங்கு உருவம் இருக்கிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் பாடப்பட்டது என்பது 
மிக குறிப்பிடத்தக்க சிறப்பு
Sri Trivikramaswamy Temple – Thirukovilur
அண்ணன் அருகில் தங்கை :பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், விஷ்ணு துர்க்கையைக் காண முடியும்.

ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை  அருள்பாலிக்கிறாள்.

இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

பெருமாளை மட்டுமே பாடும் திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து 
"விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்' என்று புகழ்ந்து பாடுகிறார்.

இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை.
துர்க்கை
[Gal1]
பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில்  40 அடி உயரமுள்ள  கருடன் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். 

இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். 

கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் தனிசன்னதியில்  அருள்பாலிக்கும் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணரை தரிசித்த 
பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.  

மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார்.

பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும்,
அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன.

புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது "தென்பெண்ணை' என்ற பெயரில் ஓடுகிறது.

 "வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்' என்ற பழமொழி உண்டு.

மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.

அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார்.

வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.

அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார்.

வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான்.

விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார்.

இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான்.

அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
:
பங்குனி மாதம் - பிரம்மோற்ஸவம் -15 நாட்கள் நடைபெறும்.

பஞ்சபர்வ உற்ஸவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறும் திருவிழா  மிக சிறப்பான விழா ஆகும்.

 மாசி மாதம் - மாசி மக உற்சவம் - இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு.

புரட்டாசி - பவித்திர உற்சவம் - நவராத்திரி உற்சவம் சித்திரை - ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம் வைகாசி - விசாக கருட சேவை,

மார்கழி - பகல் பத்து , இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி) இவை தவிர வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமாளை வணங்குவார்கள்.


47 comments:

  1. அருமையான தகவல்கள் ...
    புத்தகம் போட தேவையான
    தகவல்கள் .....படங்கள் சூப்பர் ....

    ReplyDelete
  2. பெருமளுக்கு தேகளீசன் பெயர் ஏற்பட்ட காரணம் பற்றிய விவரம் அருமை.
    அழகிய படங்களுடன் அருமையான பதிவு.
    // காலைத் தூக்கி நடக்கும் பாவனையில்! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!//
    இன்னொரு பெருமள்,காஞ்சிபுரத்தில் சேவை சாதிக்கிறார்.

    ReplyDelete
  3. //ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர்.

    இப்படியாக மூவரும் நின்று கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

    "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்ட போது, பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர்.//

    ஏற்கனவே படித்து,கேட்டு தெரிந்து கொண்டுள்ள இந்த சம்பவத்தில், எனக்கு தோன்றிய வேறொரு பொருள்:

    நமக்கு மனம் மட்டும் விசாலமாக இருந்தால் போதும். எவ்வளவு பேர்கள் வந்தாலும் adjust செய்து நம்முடன் accommodate செய்து கொள்ளமுடியும்.

    குறுகிய மனம் உள்ளவர்களுக்கு எவ்வளவு தான் அரண்மனை போல வீடு வாசல் இருந்தாலும், விருந்தினராக வரும் ஒரே ஒருவரைக்கூட தன்னுடன் அண்டவிட முடியாது.

    ReplyDelete
  4. கடைசியில் காட்டப்பட்டுள்ள காஞ்சீபுரம் உலகளந்த பெருமாளை, ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மஹாபெரியவா தரிஸனத்திற்குப் போகும் போதெல்லாம், கண்டு களித்து, அவரின் பளபளப்பான ஜொலிக்கும் கறுத்த மேனியைக்கண்டு மெய்சிலிர்த்துப் போய் நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தத நினைவலைகளைக் கிளறிவிட்டு விட்டது தங்களின் இந்தப்பதிவு.

    பதிவுக்கு பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  5. யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
    அருமையான தகவல்கள் ...
    புத்தகம் போட தேவையான
    தகவல்கள் .....படங்கள் சூப்பர் .../

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  6. RAMVI said...
    பெருமளுக்கு தேகளீசன் பெயர் ஏற்பட்ட காரணம் பற்றிய விவரம் அருமை.
    அழகிய படங்களுடன் அருமையான பதிவு.
    // காலைத் தூக்கி நடக்கும் பாவனையில்! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!//
    இன்னொரு பெருமள்,காஞ்சிபுரத்தில் சேவை சாதிக்கிறார்.//

    அருமையான அழகிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...நமக்கு மனம் மட்டும் விசாலமாக இருந்தால் போதும். எவ்வளவு பேர்கள் வந்தாலும் adjust செய்து நம்முடன் accommodate செய்து கொள்ளமுடியும்.

    குறுகிய மனம் உள்ளவர்களுக்கு எவ்வளவு தான் அரண்மனை போல வீடு வாசல் இருந்தாலும், விருந்தினராக வரும் ஒரே ஒருவரைக்கூட தன்னுடன் அண்டவிட முடியாது./


    கண்கூடான உண்மை ஐயா.
    விருப்பம் இருந்தால் புளியமர இலையில் இருவர் இருக்கலாம் என்றும் சொல்வார்கள்.
    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கடைசியில் காட்டப்பட்டுள்ள காஞ்சீபுரம் உலகளந்த பெருமாளை, ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மஹாபெரியவா தரிஸனத்திற்குப் போகும் போதெல்லாம், கண்டு களித்து, அவரின் பளபளப்பான ஜொலிக்கும் கறுத்த மேனியைக்கண்டு மெய்சிலிர்த்துப் போய் நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தத நினைவலைகளைக் கிளறிவிட்டு விட்டது தங்களின் இந்தப்பதிவு.

    பதிவுக்கு பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk
    எங்களையும் உடன் அழைத்துச் செறு தரிசிக்கவைத்தது போல் அருமையான கருத்துரைகளுக்கும், பாராட்டுரைகளுக்கும், வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  9. விண்ணளந்த பெருமானின்
    அருள் கிடைக்கச் செய்த
    அருமையான பதிவு சகோதரி.
    ஓணம் திருநாளம் வரும் நாட்களில்
    இப்படியான பதிவு பக்தியூட்டுகிறது.

    ReplyDelete
  10. திருக்கோவிலூர் பெருமாள் தரிசனம் சிறப்பு. எப்போதோ சென்றிருக்கிறேன், மூலவரை பார்க்க மீண்டும் செல்ல வேண்டும் என்று நினைவு வந்துவிட்டது.

    ReplyDelete
  11. பெருமானின் அவதராங்களில் ஒன்று...

    அறிய தகவல்கள் தேடினாலும் கிடைக்காத புகைப்படங்கள்...

    பதிவுக்கு மிக்க நன்றி..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. Fantastic Post. I have also visited Tirukoilur some year back. But I do not know such matters. Best Wishes.

    Venkat.

    Visit www.hellovenki.blogspot.com and post your comments

    ReplyDelete
  13. ஒரு முறை சென்றிருக்கிறேன்.பதிவைப் படித்துப் படங்களைப் பார்த்ததும் அதை விட திருதி ஏற்பட்டது!

    ReplyDelete
  14. இந்தப் பதிவின் மூலம் பல அறிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்..

    பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  15. மிக மிக நுணுக்கமான அறியாத பல தகவலகளும்
    அதி அற்புதமான படங்களும் பதிவுக்கு
    வீரியம் ஊட்டிப் போகின்றன
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பெருமாளின் சிறப்புக்களை சிறப்பாக்கித் தந்துள்ள பதிவு மிகவும் பயனான பலவிடயங்களைச் சொல்லியதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு. என் அப்பாவின் சொந்த ஊர் திருக்கோவிலூர் தான். சிறு வயதில் இந்த உலகளந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். உங்கள் பதிவு எனக்கு பெருமாளையும், அப்பாவின் நினைவுகளையும் தூண்டியது.

    ReplyDelete
  18. எமது பண்பாட்டு விழுமியங்களை வெளிக்கொண்டுவரும் உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. இதுவரை சென்றதில்லை.ஆவலை உருவாக்கிவிட்டது பதிவு.

    ReplyDelete
  20. அருமையானதொரு ஆன்மீக பகிர்வு பதிவிட்டுள்ளீர்கள்... வந்து படிக்கிறேங்க..

    ReplyDelete
  21. சீசனுக்கு ஏற்ற மாதிரியான பதிவுதான்.

    ReplyDelete
  22. பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில்சக்கரமும் ஏந்தி இருப்பது சிறப்பு.. தகவலுக்கு நன்றி ராஜி. பகிர்வு அருமை.

    ReplyDelete
  23. கோவில் பிரகாரப் படங்கள் மனத்தைக் கவர்கின்றன. மறுபடி பக்திப் பதிவுக்கு வந்தாச்சா...!

    ReplyDelete
  24. விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார்//

    பிறகு மகாபலி விஷ்ணுவிடம் ஒரு வரம் கேட்டார்... வருடத்திற்கு ஒரு நாள் என் மக்களை கண்டு வர அனுமதி தர வேண்டும் என...விஷ்ணுவும் அதே போல் வரத்தைக்கொடுக்க... மகாபலி வருடத்திற்கு ஒருமுறை கேரள மக்களை பார்ர்க்க வருவதாக இன்றளவும் நம்ப படுகிறது....அதை தான் ஓணப்பண்டிகையாக கொண்டாடுகின்றனர்...... அருமையானதொரு ஆன்மீக பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  25. மகேந்திரன் said...
    விண்ணளந்த பெருமானின்
    அருள் கிடைக்கச் செய்த
    அருமையான பதிவு சகோதரி.
    ஓணம் திருநாளம் வரும் நாட்களில்
    இப்படியான பதிவு பக்தியூட்டுகிறது.//

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  26. சாகம்பரி said...
    திருக்கோவிலூர் பெருமாள் தரிசனம் சிறப்பு. எப்போதோ சென்றிருக்கிறேன், மூலவரை பார்க்க மீண்டும் செல்ல வேண்டும் என்று நினைவு வந்துவிட்டது.//

    சாகம்பரியின் அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  27. # கவிதை வீதி # சௌந்தர் said...
    பெருமானின் அவதராங்களில் ஒன்று...

    அறிய தகவல்கள் தேடினாலும் கிடைக்காத புகைப்படங்கள்...

    பதிவுக்கு மிக்க நன்றி..
    வாழ்த்துக்கள்...//

    அருமையான கருத்துரைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  28. Anonymous said...
    Fantastic Post. I have also visited Tirukoilur some year back. But I do not know such matters. Best Wishes.

    Venkat.//

    கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  29. சென்னை பித்தன் said...
    ஒரு முறை சென்றிருக்கிறேன்.பதிவைப் படித்துப் படங்களைப் பார்த்ததும் அதை விட திருதி ஏற்பட்டது//

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  30. வேடந்தாங்கல் - கருன் *! said...
    இந்தப் பதிவின் மூலம் பல அறிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்..

    பகிர்வுக்கு நன்றிகள்..//

    அரிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  31. Ramani said...
    மிக மிக நுணுக்கமான அறியாத பல தகவலகளும்
    அதி அற்புதமான படங்களும் பதிவுக்கு
    வீரியம் ஊட்டிப் போகின்றன
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    அற்புதமான அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  32. Nesan said...
    பெருமாளின் சிறப்புக்களை சிறப்பாக்கித் தந்துள்ள பதிவு மிகவும் பயனான பலவிடயங்களைச் சொல்லியதற்கு வாழ்த்துக்கள்!//

    சிறப்பான அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  33. கோவை2தில்லி said...
    நல்ல பகிர்வு. என் அப்பாவின் சொந்த ஊர் திருக்கோவிலூர் தான். சிறு வயதில் இந்த உலகளந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். உங்கள் பதிவு எனக்கு பெருமாளையும், அப்பாவின் நினைவுகளையும் தூண்டியது./

    தந்தையின் நினைவுப்பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  34. அம்பலத்தார் said...
    எமது பண்பாட்டு விழுமியங்களை வெளிக்கொண்டுவரும் உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  35. shanmugavel said...
    இதுவரை சென்றதில்லை.ஆவலை உருவாக்கிவிட்டது பதிவு./

    சென்று தரிசித்து அருள் பெறுங்கள். நன்றி.

    ReplyDelete
  36. பாலா said...
    சீசனுக்கு ஏற்ற மாதிரியான பதிவுதான்./

    திருவோண திருவிழா சிறப்பு பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  37. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில்சக்கரமும் ஏந்தி இருப்பது சிறப்பு.. தகவலுக்கு நன்றி ராஜி. பகிர்வு அருமை.//

    சும்மா அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  38. ஸ்ரீராம். said...
    கோவில் பிரகாரப் படங்கள் மனத்தைக் கவர்கின்றன. மறுபடி பக்திப் பதிவுக்கு வந்தாச்சா...!//

    வந்தாச்சு!!

    கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  39. மாய உலகம் said.../

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  40. வாமனாவதாரக்கதை எப்போழுதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. வெளித் தோற்றத்தைக் கண்டு மயங்கக்கூடாது என்பதை தெளிவாக உணர்த்தும் கதை.

    ReplyDelete
  41. 987+3+1=991 ;)))))

    அழகான என் பின்னூட்டங்களுக்கு ஆத்மார்த்தமான தங்களின் பதில்கள், மிகவும் மகிழ்ச்சியளித்தன. நன்றிகள்.

    ReplyDelete