Thursday, July 19, 2012

ஆடி வெள்ளி வழிபாடு




வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம் 
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம் 
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம் 
பார்ஸேவே பங்கஜஸங்க்க   பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி: 

அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும்  சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.
கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை

ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் சிறப்புப்பெறுகின்றன..

ஆடி வெள்ளியன்று லஷ்மியை வழிபட்டால் செல்வச்செழிப்பு உண்டாகும்..

னிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளோடு வரும் பொருள் வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்ட லக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள்..

விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலக்ஷ்மி ...

ஆடி வெள்ளி அன்று வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று சிறு பெண் குழந்தைகளை அம்மனாகப் பாவித்து அமுதளித்து. ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.

குத்துவிளக்கை லக்ஷ்மியாக பாவித்து அலங்கரித்து பொன் ஆபரணங்கள் -வீட்டில் உள்ள நகைகளை அணிவித்து, மரப்பலகையில் மஞ்சளால் கோலமிட்டு அதன் மேல் பட்டுத் துணி விரித்து அதில் பச்சரிசியை சிறிதளவு தூவி அதில் அலங்கரித்த குத்து விளக்கை -மஹாலஷ்மியாக ஆவாஹனம் செய்து அமரச் செய்து மன நிறைவுடன் பூஜித்து அருள் பெறலாம்...

அஷ்ட லட்மியின் அருள் இருந்தால், நாம் திட்டமிட்ட படியே 
வாழ்க்கையை நடத்த இயலும்.

ஒவ்வொரு ஆடி மாதமும், ஆடிவெள்ளியன்று - முதல் வெள்ளி

அல்லது ஆடி மாதத்தின் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை - 
அம்மனை ஆவாகணம் செய்து வழிபடுவது சிறப்பு..
ஆடி வெள்ளியன்று மகாலக்ஷ்மியை வழிபட்டால் நிறைந்த 
செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த 
வரலட்சுமி விரதம் வழிபடுகிறோம்... ...

21 comments:

  1. ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அழகான பதிவு. ;)))))

    ReplyDelete
  2. ஆடி வெள்ளி பற்றியும் அம்மனின் சிறப்பு பற்றியும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அக்கா... அருமையான படங்கள் ... குத்துவிளக்கை அம்மனாக பாவித்து பூஜைகள் செய்வது பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அக்கா.....

    ReplyDelete
  3. மேலிருந்து கீழாக இரண்டாவது படத்தில், அழகிய செந்தாமரையில் அமர்ந்திருக்கும் கஜலக்ஷ்மி எனக்கு மிகவும் பிடித்தமான வெகு அருமையான படம். ;)))))

    ReplyDelete
  4. குத்து விளக்குக்கு அழகாக விசிறி மடிப்புடன் பாவாடை அணிவித்து, தங்க ஆபரணங்களுடன், மல்லிகைப் புஷ்ப மாலையிட்டுக் காட்டியுள்ளது நல்ல அழகோ அழகு.

    சின்ன்ஞ்சிறு பெண் போலே, சிற்றாடை உடையுடுத்தி....... பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ;)))))

    ReplyDelete
  5. கடைசி படத்தில் பல்வேறு பழமாலைகளுடன் உள்ள அம்பாளும் மிகவும் ரசிக்கத்தக்கதாகவே உள்ளது.

    ஏனோ, தாங்கள் அடிக்கடி எங்களுக்கெல்லாம் தரிஸனம் செய்து வைத்து வரும் வடமாலை + பழ்மாலை ஹனுமார் ஞாபகத்திற்கு வந்தார்.

    ReplyDelete
  6. வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம்
    செள்பாக்யதாம் பாக்யதாம் .......

    என்ற வரிகளுடன்
    வந்துள்ள இந்தப்பதிவு
    மொத்தத்தில் மிகவும்
    அருமையாக உள்ளது.

    பதிவினைப் பார்க்கப்பார்க்க

    மலர்ச்சியாக

    மகிழ்ச்சியாக

    நெகிழ்ச்சியாக

    குளிர்ச்சியாக

    ஜில்லென்று உள்ளது.

    நாளை ஆடி வெள்ளிக்கிழமையாவது
    அம்மனின் அருளால் நல்ல நாளாகப்பிறந்து எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டிடுவோம்.

    ReplyDelete
  7. ஆடி வெள்ளி வழிபாடு பற்றி தெரிந்து கொண்டோம். படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி

    ReplyDelete
  8. ஆடி வெள்ளியின் சிறப்பும், அம்மனின் வழிபாட்டு முறைகளும், அம்மனின் அருள் வழங்கும் படங்களும்,மனதுக்கு இதமளிக்கிறது.

    ReplyDelete
  9. அருமை அருமை., கண்களுக்கு நிறைவான புகைப்படங்கள்.!

    சுக்ரவார் என்பது ஹிந்தி என்று அறிகிறேன் சரிதானே சகோ!

    ReplyDelete
  10. அருமையான பதிவு.

    முதல் மற்றும் ஆறாவது படங்களில் லட்சுமியிடம் இருந்து கொட்டும் தங்கக்காசுகள் வீணாய்ப்போகின்றனவே. கொஞ்சம் பிடித்து எங்களைப்போன்ற ஏழைபாளைகளுக்குக் கொடுக்கக் கூடாதா?

    ReplyDelete
  11. அருள்மழையில் நனைந்தோம்.

    ReplyDelete
  12. ஆடி வெள்ளியும் அதுவுமா நல்ல தரிசனம்..

    ReplyDelete
  13. Just now i finished my pooja and eaqurly opening your site......
    You are not disappointed me.
    I was expecting......
    I felt happy.
    Thanks for the post Rajeswari.
    viji

    ReplyDelete
  14. ஆடிவெள்ளியின் சிறப்பை அழகிய படங்களுடன் பகிர்ந்துள்ள விதம்
    அருமை!..வாழ்த்துக்கள் சகோதரி இன்றைய நாள் எல்லோருக்கும்
    பொன்னாளாக அமையட்டும்!..மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  15. வெள்ளிக்கிழமை அழகாக அம்மன் தரிசனம் அதுவும் கொட்டும் தங்க காசுகள் காண கண்ணிரண்டு போதாது.

    ReplyDelete
  16. நடப்பு வருடமான இந்த 2012 ம் ஆண்டின், தங்களின் வெற்றிகரமான, 225 வது பதிவாக, இந்த ”ஆடி வெள்ளி வழிபாடு” அமைந்துள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியினைத் தருகிறது.

    என் மனமார்ந்த இனிய அன்பு வாழ்த்துகள். ;)))))

    பிரியமுள்ள,
    vgk

    ReplyDelete
  17. ம‌கால‌க்ஷ்மியின் க‌ருணை வ‌ழியும் க‌ண்க‌ள்...!

    வ‌ளைய‌ல்க‌ளால் ஆன‌ அல‌ங்கார‌மும் ப‌ழ‌ங்க‌ளால் ஆன‌ அல‌ங்கார‌மும் வெகு அழ‌கு! குத்து விள‌க்கின் ஜோடிப்புக‌ளும் வெகு ஜோர்!

    ReplyDelete
  18. very good. thanx a lot for let us know about sukravara velli vratham.

    May mahalakshmi bless you

    ReplyDelete
  19. ஆடி வெள்ளிக்கிழமை அற்புதப்பகிர்வுக்கு நிறைவான வாழ்த்துகள்..

    ReplyDelete