Thursday, July 26, 2012

ஆடி வெள்ளி வளையல் வைபவம்



கற்பூர  நாயகியே கனகவல்லிகாளி மகமாயி கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவகாமிஅம்மாபூவிருந்தவல்லிதெய்வயானிஅம்மா!!

விற்கோல வேத வள்ளி விசாலாக்ஷி,விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி,
சொறகோவில் நான் அமைத்தேன் இங்கு தாயேசுடராக வாழ்விக்கஎன்னை நீயே.

நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும்அம்மா
நெஞ்சினில் உன் திருநாமம்  வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்,
பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்.

ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். 


பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். 


ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் நிகழ்த்தப்படுகின்றன..


ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. 
ஆடி  வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. 

 ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். 
[kalikambal4.jpg]
துரை ஸ்ரீமுத்துநாயகி அம்மன் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், தங்கக் கவசத்தில் காட்சி தரும் அம்மனைத் தரிசிப்பதும் , திருவிளக்கு பூஜையும் ரொம்பவே சிறப்பு ...

ஆடி வெள்ளி- மனம் வளையலையே வலம் வருவதால் 
பெண்கள் மட்டும்  பார்க்க மீண்டும் வளையல் வைபவப் படங்கள்...
-







ஆஸ்திரேலியாவில் மகனின் பட்டமளிப்பு விழா வைபவம்..


27 comments:

  1. ”ஆடி வெள்ளி வளையல் வைபவம்” வெகு அழகான பதிவாக இருக்கும் எனத்தோன்றுகிறது. பொறுமையாகப் பார்த்து விட்டு மீண்டும் வருவோம்.

    ReplyDelete
  2. நாளை வரலக்ஷ்மி விரதம்...
    இன்றே பதிவில் பார்த்ததும் ஆனந்தம்...
    நன்றி...

    ReplyDelete
  3. Apa appappa ethani valayal.....
    Mansu poorithu poividathu Rajeswari.
    Thanks thank a lot for the post. I enjoyed.
    Congragulations to your son and i know how much emotional you will have seeing your sons photo.
    All the best to him.
    viji

    ReplyDelete
  4. நாளை எங்கள் ஊரிலும் அம்மன் கோவிலில் விளக்கு பூஜை.

    அம்மன் வளையல் அலங்காரப் படங்கள் எல்லாம் அற்புதம்.

    ReplyDelete
  5. பட்டம் பெற்ற மகனுக்கும், மகனைப் பெற்ற மஹராஜிக்கும் அன்பான இனிய வாழ்த்துகள். ஆசிகள்.

    ReplyDelete
  6. மீண்டும் இன்றைய வளையல் பதிவு மீண்டும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    கற்பூர நாயகியே கனகவல்லி பாடலுடன் ஆரம்பித்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    நாளை ஆடிவெள்ளிக்கிழமையுடன், வரலக்ஷ்மி விரதமும் சேர்ந்துள்ளது. அத்துடன் தங்களின் இந்தப்பதிவும்
    சேர்ந்துள்ளது மிகவும் ஆனந்தம் அளிப்பதாக உள்ளது.

    ReplyDelete
  7. ஆடி வெள்ளி வளையல் வைபவம் அருமை அக்கா..... தங்கள் மகனின் பட்டமளிப்பு வைபவத்திற்கும் வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  8. பட்டுப்போன்ற பெண்களின் மனம் எப்போதும் வளையல்களையும், பட்டுப்புடவைகளையும், நகைகளையுமே வலம் வருகிறது.

    அதனாலேயே அந்தப்பெண்மணிகளை என்றும் அம்பாளாக பாவித்து ஆண்களின் மனமும் அந்தப்பெண்களையே வலம் வருகிறதோ என நினைக்கத்தோன்றுகிறது. ;)))))

    ReplyDelete
  9. அன்னையை சிறப்பிக்கும் சிறப்புமிகு பதிவினைத் தந்த தங்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. வளையோசையுடன் கூடிய அழகான ஆனந்தமான பதிவு.

    கலைநயத்துடன் வளையல்களை அம்பாளுக்கு வெகு அழகாக, நேர்த்தியாக, கலர்கலராக, மிகுந்த சிரத்தையுடன், அதிகப் பொறுமையுடன், அலங்கரித்துள்ளார்கள்.

    ரசித்துப்பார்த்து மகிழ இரு கண்கள் போதாது. அனைத்துமே மிகவும் சூப்பராக உள்ளன. ;))))))

    ReplyDelete
  11. மேலிருந்து எண்ணிக்கையில் நான்காவதாகவும், வரிசையில் மூன்றாவதாகவும் காட்டப்பட்டுள்ள பெரியதொரு அம்மன் இன்றைய ஹைலைட்டாக அற்புதமாக அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

    அது எனக்கு மிகவும் சந்தோஷம் தரும் படமாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  12. மேலிருந்து எண்ணிக்கையில் நான்காவதாகவும், வரிசையில் மூன்றாவதாகவும் காட்டப்பட்டுள்ள பெரியதொரு அம்மன் இன்றைய ஹைலைட்டாக அற்புதமாக அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

    அது எனக்கு மிகவும் சந்தோஷம் தரும் படமாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  13. கடைசியில் உள்ள மூன்று படங்களிலும் உள்ள மக்கள் கூட்டம் மகத்தானதாக படமாக்கப்பட்டுள்ளன. அனைவருமே பக்தி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். பாராட்டுக்கள்.

    மொத்தமாகக் காட்டப்பட்டுள்ள அனைத்து வளையல்களின் எண்ணிக்கையையே, மிஞ்சிவிடும் போலல்லவா உள்ளது! இந்த மக்களின் எண்ணிக்கை!!

    வழக்கம் போல இன்றைய பதிவும் ஒட்டு மொத்தமாக மிகச்சிறப்பாக, மனதுக்கு மகிழ்வளிப்பதாக, தரப்பட்டுள்ளது.

    தங்களின் அன்றாட மிகக்கடுமையான உழைப்பை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    மனமார்ந்த ... பா ரா ட் டு க் க ள்

    அன்பான ... வா ழ் த் து க ள்

    நெஞ்சார்ந்த ... ந ன் றி க ள்.

    ReplyDelete
  14. அம்மன் பாடல் பாடுவதில் L.R. Eswari அம்மாவை மிஞ்ச இதுவரை எவரும் இல்லை, இனியும் வரப்போவதில்லை! அருமையான பாடலுடன் நல்ல துவக்கம்! தகவல்கள் அருமை! படங்கள் தெய்வீகம்!

    ReplyDelete
  15. அந்த பாடல் வரிகள் முழுவதுமே பகிர்ந்திருக்கலாம் சகோ! எவரையும் சிலிர்க்கச் செய்யும் அருமையான பாடல்!

    ReplyDelete
  16. வளையோசையுடன் கூடிய அழகான பதிவு.

    ReplyDelete
  17. வளையோசையுடன் கூடிய அழகான பதிவு.

    ReplyDelete
  18. அம்மன் படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.வரலட்சுமி விரதத்திற்கு ஏற்ற பொருத்தமான பதிவு.மகனின் பட்டமளிப்பிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. வளையல் அலங்காரங்கள் அத்தனையும் மிக அழகு!!

    ReplyDelete
  20. அழகான வளையல் அலங்காரம்... ரசித்தேன்.

    ReplyDelete
  21. ஆன்மீகத்தோழி வணக்கம்.சுகம்தானே.இறைவனோடு பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது.வாழ்த்துகளி எங்களுக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கிறீர்கள் நன்றி.

    வளையல் அலங்காரத்தோடு அம்மன்...உண்மையில் முதல் முறையாகப் பார்க்கிறேன் !

    ReplyDelete
  22. அழகிய படங்களுடன் அம்மனின் அருள் தரும் பகிர்வு.

    ReplyDelete
  23. பட்டமளிப்பு விழா பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. ஒரு ஆன்மீகப் பதிவின் அடியில் ஒரு பட்டமளிப்பு விழா படம் பேஷ், பேஷ். பட்டம் வாங்கும் மகனுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  25. கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு
    கொண்டாடி வரும் வளையல் ! அம்மா --
    பூவோடு வருமே ! பொட்டொடு வருமே !
    சிங்காரத் தங்க வளையல் !
    வங்கி வளையல் ! சங்கு வளையல் !
    முத்து முத்தான வளையலுங்க

    - பாடல்: வாலி (படம்: படகோட்டி)

    ReplyDelete