Friday, December 20, 2013

*ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீபத்ம சக்கரம்



பதம பிரியேபதமினி பத்ம ஹஸ்தே 
பத்மாலயே பத்ம தளாய தாகூ
விஸ்வப் பிரியே விஷ்ணு மனோனுகூலே 
த்வத்பாத பதமம் மயி ஸந்நிதத்ஸ்வ
தாமரை மலரை விரும்புபவளே,பத்ம நிதியை உடையவளே,
தாமரை மலரை கையில் ஏந்த்யிருப்பவளே,
தாமரை மலரில் வாழ்பவளே,
தாமரை மலர்போன்ற கண்களை உடையவளே,
உலகத்தார் அனைவராலும் விரும்பபடுபவளே,
மகா விஷ்ணுவின் மனதிற்கு உகந்தவளே,
செந்தாமரை மலர் போன்ற உன்பாத கமலங்களில் என் தலையை வைத்து நமஸ்கரிக்கின்றேன் அனுகிரஹம் செய்வாயாக!

- தினமும் சொல்லி வந்தால் நம் வீட்டில் மகாலட்சுமி  வாசம் செய்வாள் என்பது ஐதிகம்.

உலகில் தோன்றிய தாவரங்களில் தெய்வாம்சம் பொருந்தியவற்றுள் முதலிடம் வகிப்பது தாமரை. 

ஸ்ரீமகாலட்சுமி தாமரையை விரும்புபவள். தாமரையில் உறைபவள். 
 அன்னை லஷ்மி தாமரையை தன் திருக்கரங்களில் தரித்தவள். 
தாமரையின் நிறம் கொண்டவள். 
மகாலட்சுமியை குறித்து சொல்லப்படும் ஸ்ரீசூக்தத்தில் பத்மப் பிரியே, பத்மஹஸ்தே, பத்மாக்ஷி, பத்மஸம்பவே என்று அழைக்கப்படுகிறாள். 
பாரதியார் "கமலமே திருவே' என்று மஹாலட்சுமியைப் போற்றுகிறார்.
பத்மம் என்று தாமரை மலரைக் குறிப்பிடுவர். 


சௌந்தர்யபுரம் எனும்  கிராமத்தில் அருள்மிகு அம்புஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில்  தாயாராக அம்புஜவல்லி வீற்றிருக்கிறார். 
தாயார் சந்நிதி எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 
ஸ்ரீபத்ம சக்கரம். சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது
திருமால் அர்ச்சாமூர்த்தியாய் ஆதிகேசவன் என்ற திருநாமம் 
கொண்டு அருளும் தலங்கள் சிறப்பு வாய்ந்தவை. 
மூலவராக ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் 
ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்புரிகிறார். 
ஆண்டாள், ஆழ்வார் ஆசார்ய பெருமக்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. 
கோயிலின் எதிரில் இரண்டு காளிங்கநர்தன கிருஷ்ணனோடு 
கூடிய நாகங்களையும் காணலாம்.

தனிச்சிறப்பான பெருமைகள் கொண்ட தாமரை மலர் இதழ்கள் போன்று செதுக்கப்பட்டுள்ள அஷ்டதள பத்ம சக்கரம் தாயார் சந்நிதி எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பீடத்துடன் சுமார் 2 அடி உயரத்தில் இரண்டு புறமும் சிங்கங்கள் சூழ நான்கு ஜ்வாலையுடன் கூடிய அமைப்பில் சுதர்ஸன சக்கரம் போன்றே காட்சியளிப்பது அற்புதம். இதனை வழிபடுவதால் 
அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்ட யோகங்கள்,
அஷ்ட சித்திகள் பெறலாம் என்பது நம்பிக்கை.

மஹாசம்ப்ரோக்ஷணம் வார்ஷிகோத்ஸவம் (ஆண்டு விழா) 
சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், நாம சங்கீர்த்தனம் ,
ஸ்ரீபத்ம சக்கரத்தைப் பற்றிய உபன்யாசமும் நிகழகின்றன..!

தென்னாங்கூர் திருத்தலத்திற்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ளது சௌந்தர்ய்புரம்..! 
 காஞ்சிபுரம் - வந்தவாசி தடத்தில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். செங்கல்பட்டிலிருந்தும் செல்லலாம்.






16 comments:

  1. அருமையான படங்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகானப் படங்களுடன் சிறப்பான பகிர்வு..

    ReplyDelete
  3. வணக்கம் தோழி...!
    பயமும் பக்தியுமாக மூலஸ்தானதினுள் நுழைவது போல் இருந்தது.
    அபாரம் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளேன். எனக்கு தேவையான தாகம் தீர்க்கும் மருந்து இங்கு தான் உள்ளது போல் இருக்கிறதே. உங்களின் துணையோடு நான் பக்தி பாடல் புனைய முடியும் என்று நம்புகிறேன். அழகான படங்கள் மெய் சிலிர்க்கிறது
    வருகிறேன் தொடர்ந்து...
    பாராட்டுகளும்....! தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களும்....!

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் காலை தரிசனம்..நன்றிம்மா!!

    ReplyDelete
  5. பத்மம் என்று அழைக்கப்படும் தாமரையைப்பற்றி ஏராளமான தகவல்களைத் தாராளமாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    தாமரையைப்போன்றே மிக அழகான பதிவாக அமைந்துள்ளது.

    தங்கள் வலைத்தளத்தின் சின்னமும் செந்தாமரையல்லவா! அதனால் மேலும் மகிழ்ச்சியானதோர் நெருங்கிய உறவினை உணர முடிகிறது.

    >>>>>

    ReplyDelete
  6. பத்ம ப்ரியே ..................

    பாடலும் விளக்கமும் வெகு ஜோர்

    >>>>>

    ReplyDelete
  7. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    கடிகாரத்தினுள் தாமரை விரிந்திருக்க, அதில் உள்ள மணி முள், நிமிடமுள், நொடி முள் அனைத்துமே தாமரைத்தண்டாகக் காட்டியுள்ள படம் மிகச் சிறப்பாக உள்ளது.

    அதில் காட்டியுள்ள நேரமாகிய 11.30க்குத்தான் தங்களின்பதிவினை இன்று என்னால் பார்க்கும் பாக்யம் கிடைத்தது. அதனால் என் வருகையில் எதிர்பாராத தாமதமாகி விட்டது.

    >>>>>

    ReplyDelete
  8. கடிகாரத்திற்கு மேலுள்ள ஆறாவது படம் .... [நீர் முத்துக்கள் கோர்த்த] சுமார் 10 + 10 தாமரைகள் [FRESH FLOWERS WITH BEAUTIFUL + WONDERFUL COLOURS] மிகவும் பிடித்துள்ளது. ;)))))

    >>>>>

    ReplyDelete
  9. செளந்தர்யபுரம் கோயில் பற்றிய அழகான பல செய்திகள் அறிய முடிந்தது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    o o o o o

    ReplyDelete
  10. தாமரை தானிங்கு தையலே நீயென்பேன்!
    தாமகிழ நீவரம் தான்!

    மிக அழகான படங்களும் அதன் விளக்கமும்!
    அருமை! நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

    எனது தற்போதைய பதிவினை நீங்கள்
    பார்க்க வேண்டுகிறேன் சகோதரி!...
    மிக்க நன்றி!

    http://ilayanila16.blogspot.de/2013/12/blog-post_17.html

    ReplyDelete
  11. தாமரையின் புகழ் பாடும் பதிவு. மகாலக்ஷ்மியின் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்.

    ReplyDelete
  12. சௌந்தர்யமான பகிர்வுகள்...பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  13. வணக்கம்
    பதிவு சிறப்பாக உள்ளது.படங்களும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. அந்த மாகலாக்ஷ்மியின் கடாட்சம் எல்லோருக்கும் கிடைக்கட்டுமாக.
    அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  15. அழகான படங்கள்......

    ரசித்தேன்!

    ReplyDelete
  16. ஸ்ரீபத்மசக்கரம் பற்றி தெரிந்து கொண்டேன். பெருமாள் பெரும்பாலான பெருமாள் கோயில்களின் சுவர்களில் இவற்றை வரைந்து இருக்கக் காணலாம்.

    ReplyDelete