Thursday, December 26, 2013

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர்




ஸ்ரீ பரம சிவனின் பக்தரும்,சம்ஸ்க்ருதத்தில் 104 நூல்களை எழுதி
“அபர சங்கரர்” என்று புகழ் பெற்றவருமாகிய அப்பைய தீக்ஷிதர்,
ஊமத்தைக் காயை உண்டு உன்மத்த (சித்த மயக்கத்தில்) நிலையிலும் கூட சிவனை மறக்காமல் பாடி எழுதப் பட்ட நூல்தான் “உன்மத்த பஞ்சாசத்”, ஆத்மார்ப்பண ஸ்துதி என்று புகழ்பெற்ற 50 ஸ்லோகங்கள். ..!
http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_27.html

மணிராஜ்: அஞ்சுவது யாதொன்றுமில்லை ...என்கிற பதிவில் 

பகிர்ந்திருக்கிறது .. சுட்டியை சுட்டிச்சென்று பார்வையிடலாம் ..!


 தீக்ஷிதர் சாஸ்திரங்கள் மட்டுமல்லாது அலங்காரத்திலும்,
சமத்காரத்திலும்  புகழ்பெற்றவர்
ஒரு சமயம் தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது நரசிம்ம வர்மன் என்கின்ற மஹாராஜா தனது ஆஸ்தானத்திற்கு அப்பய்ய தீக்ஷிதரையும், தாத்தாசார்யர் என்ற  பண்டிதரையும் வரவழைத்து அவர்களோடு பல க்ஷேத்ரங்களைத் தரிசித்து வந்தார்.

அப்போது ஒரு கோயிலில் ஹரிஹரபுத்ரனான ‘சாஸ்தா’ (ஐயப்பன்) தனது முகவாய்க் கட்டை மீது வலதுகை ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டு ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற விக்ரஹத்தைப் பார்த்தார்.
உடனே அந்த ஊரில் வயது முதிர்ந்த ஒரு பெரியவரைப் பார்த்து இந்த விக்ரஹம் இப்படிக் கவலையோடு இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டார்.

அதற்கு அவர்,  பிற்காலத்தில், அனைத்து விதத்திலும் தகுதி வாய்ந்த பெரியவர் ஒருவர் இங்கே வருவார். அவர் சாஸ்தாவின் யோசனை எதைப் பற்றி என்ற ரகசியத்தை எடுத்துரைப்பார். அப்போது இந்த சிலையும் மூக்கின் மேலுள்ள விரலை எடுத்துவிட்டு எல்லாக் கோவில்களிலும் இருப்பது போல் ஆகிவிடும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்.

பிறகு எத்தனையோ பெரியவர்கள் இங்கே வந்து சாஸ்தாவின் கவலைக்கு பல காரணங்களைக் கூறிவிட்டார்கள்.

ஆனால் எதுவும் சரியான காரணமாக இல்லாததால்
சாஸ்தா விரலை எடுக்காமலே உள்ளார். என்றார்கள்

உடனே ராஜா, தாத்தாச்சாரியாரிடம் இதன் காரணத்தை
விளக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தாத்தாசாரியாரும் இதற்கு சம்மதித்து ஒரு செய்யுள் இயற்றினார்.

விஷ்ணோஸ் ஸுதோஹம் விதினா ஸமோஹம்
தன்யஸ்த தோஹம் ஸுரஸேவிதோஷம் |
ததாமி பூதேச ஸுதோஹ மே தை:
பூதைர் வ்ருதச் சிந்தயதீஹ சாஸ்தா ||

பொருள்: “நான் விஷ்ணுவுக்கு (மோஹினீ ரூபமாய்) இருந்தபோது பிறந்த பிள்ளை. பிரம்மாவுக்குச் சமமானவன். எனவே நான் மிகச் சிறந்தவன். தேவர்கள் என்னைப் போற்றுகிறார்கள். ஆனாலும் என்னைச் சுடுகாட்டில் வாழும் பூதகணங்கள் சூழ்ந்த பரமசிவனின் பிள்ளை என்று சொல்கிறார்களே என்ற வருத்தத்துடன் சாஸ்தா இருக்கிறார்” 
என்று ஐயப்ப சுவாமி வருத்தம் கொள்வது போல் ஸ்லோக வாக்யம் போகிறது. 
சாஸ்தாவே இதை சொல்வது போல் ஸ்லோகத்தை அமைத்துள்ளார்.
இதிலேயே தாதாச்சர்யாருக்கு சிவ சம்பந்தமான விஷயங்களில் நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது தெரிய வரும்.

இந்த விளக்கம் சரியாக இல்லாததால் சாஸ்தாவின் 
கை விரலில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
உடனே, ராஜா அப்பய்ய தீக்ஷிதரை நோக்கித் தாங்கள் விளக்கம் தர வேண்டும் என்றார். தீக்ஷிதரும் ஒரு ஸ்லோகம் சொன்னார்.
அம்பேதி கௌரீமஹ மாஹவயாமி
பந்த்ய: பிதுர்மாதர ஏவ ஸர்வா: |
கதந்து லக்ஷ்மீதி சிந்தயந்தம்
சாஸ்தாரமீடே ஸகலார்த்த ஸித்யை ||

பொருள்: “நான் பரமசிவனுக்கும் விஷ்ணுவுக்கும் (மோஹினி) பிறந்தவன். ஆகவே எனது தந்தை சிவனைத் தரிசிக்கும் போது அருகிலுள்ள பார்வதீ தேவியை ‘அம்மா’ என்று அழைப்பேன். ஆனால், எனது தாயான விஷ்ணுவைத் தரிசிக்கின்ற போது அருகிலுள்ள அவர் மனைவியான லக்ஷ்மீ தேவியை என்ன சொல்லி அழைப்பேன்? என்று கவலையில் ஆழ்ந்துள்ள சாஸ்தாவை எனது எண்ணங்கள் நிறைவேறப் போற்றுகின்றேன்!”என்று பாடினார்.

உடனே விக்ரஹமாயிருந்த ‘சாஸ்தா’ தனது கைவிரலை முகவாய்க் கட்டையிலிருந்து எடுத்து விட்டாராம்

மகான் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் அவதார ஸ்தலம்
http://www.youtube.com/watch?v=U_UwUrf7RPE




19 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    மிகச்சிறப்பாக உள்ளது படங்களும் அழகு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  2. அறியாதன அறிந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. மயக்க வைக்கும் பதிவும் படங்களும்! அருமை சகோதரி!

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு . அப்பய்ய தீக்ஷிதர் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது...சாஸ்தாவின் யோசனைக்குண்டான கேள்வியை மிகச்சரியாக எடுத்துரைத்திருக்கிறார்...

    குழந்தையாக இருக்கும் சிவனின் படம் மிகவும் அருமை..

    ReplyDelete
  5. கேள்வி மட்டும் தானே சொன்னார், சாஸ்தாவுக்கு விடை கிடைத்ததா இல்லையா?

    ReplyDelete
  6. அருமையான விளக்கம் சாஸ்தாவின் யோசனைக்கு.
    புதிய தகவல்.
    படங்கள், செய்திகள் அருமை.

    ReplyDelete
  7. அழகிய படங்களுடன் அறிந்திராத நல்ல விடயமும் அருமை!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  8. ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் பற்றிய பல விபரங்கள் அறிய முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  9. படங்களில் மேலிருந்து கீழ் 2 மற்றும் 3 திறக்க மறுக்கின்றன. மற்ற படங்கள் எல்லாமே வழக்கம்போல அழகாக காட்சியளிக்கின்றன,

    கடைசியாகக் காட்டியுள்ள இரு உள்ளங்கைகளுக்குள் சிவன் புதுமை. அருமை. நன்று.

    >>>>>

    ReplyDelete
  10. பொதுவாக வைஷ்ணவர்களில் பலரும் சிவனை தெய்வமாக ஏற்றுக்கொள்வது இல்லை என்பதை, தாத்தாச்சாரியார் அவர்கள் தன் பாடலில் உணர்த்தியுள்ளார்கள்.

    சிங்கம் துரத்தினாலும் சிவன் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள் என வைஷ்ணவர்களைப்பற்றி சொல்லுவார்கள். ஆனால் எல்லோரும் அப்படியல்ல. சிலர் விதிவிலக்காக உள்ளனர்.

    என்னுடன் பணியாற்றிய ஓர் நண்பர் [‘இராமானுஜம் என்ற வைஷ்ணவர்’] என்னுடன் கூடவே ஒவ்வொரு பிரதோஷத்திற்கும், எங்கள் வீட்டருகே உள்ள சிவன் கோயிலுக்கு என்னுடன் வருகை தந்து ரிஷப வாஹன ஸ்வாமி புறப்பாட்டை தரிஸனம் செய்து மகிழ்வார்.

    >>>>>

    ReplyDelete
  11. ’அம்பேதி கெளரீமஹ’ ...... என்று தொடங்கிடும் அப்பய்ய தீக்ஷிதர் பாடலையும், அதன் பொருளையும் எழுதியுள்ளது, படிக்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. இப்போது எல்லாப்படங்களும் 2 + 3 உள்பட நன்கு காட்சியளிக்கின்றன.

    முதல்படமும் கடைசிபடமும் ஜோராக உள்ளன.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    o o o o o

    ReplyDelete
  13. மிக நல்ல விஷயங்களைத் தொடர்ந்து அழகான வண்ணப்படங்களோடு வெளியிட்டு மக்களின் மனக்கவலை தீர்க்கும் மருந்தாகத் தங்கள் வலைப்பதிவுகளை ஆக்கி வருகிறீர்கள். இதற்கு எப்படி நன்றி கொள்வது என்று தெரியவில்லை!

    ReplyDelete
  14. படங்களும் பகிர்வும் அருமை...

    ReplyDelete
  15. அருமை......

    படங்கள் அத்தனையும் அழகு.

    ReplyDelete
  16. அறியாத தகவல்... அருமையான விளக்கம்... படங்கள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. நிறைய புதிய தகவல்களை தினம் தினம் அளித்துக்கொண்டிருக்கும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். மேலும் வெறும் தகவல்களாக மட்டுமல்லாமல், அற்புதமான படங்களையும் இடம்பெறச்செய்து கண்களுக்கு விருந்து அளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அப்பய தீட்சிதர் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரது வரலாறு தெரியாது. இன்று அவருடைய புலமை பற்றிய விவரத்தினை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete