Wednesday, June 18, 2014

ஸர்வம் குஹ மயம் ஜகத்.




வேலுண்டு வினையில்ல; மயிலுண்டு பயமில்லை; 
சேவலுண்டு ஏவலில்லை; குகனுண்டு குறைவேயில்லை!
"மலையேறி வந்து தன்னைத் தரிசிப்பவர்களுக்கு  வாழ்வின் உச்சியை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே! ஆறுமுகப்பெருமானே! 
இளங்குமரனே! சிவபெருமானுக்கு குருவாய் வந்த குகனே! கந்தப்பெருமானே! சேனாதிபதியே! வெற்றி வேலவனே! மயில்வாகனனே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! அசுரனை அழித்தவனே! எப்போதும்  காத்தருள வேண்டும்.
சிவன், பிரம்மன் மட்டுமல்ல; மாமன் விஷ்ணுவும் முருகனைப் பணிந்தவரே. விஷ்ணுவின் சக்கரம் திருத்தணிகை முருகன் மார்பில் பதிந்து விட்டபோது, அதை பெருமாள் பணிந்து கேட்க, முருகன் எடுத்து அளித்தானாம். இன்றும் தணிகேசனின் மார்பில் சக்கரம் பதிந்த அடையாளம் இருக்கி றது. அதை சந்தனத்தால் மூடுகிறார்கள். 
 முருகனை  நம்பிக்கையுடன் வணங்கிட, புனித கங்கை போன்று ஆறாக அருள் மழை பெய்து, அவகுணங்களை அடியோடு அழித்து, ஞானானந்த பிரகாசத்தில்  ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்ந்து; குகமயமாக ஸர்வம் குஹ மயம் ஜகத்.என வழிபடவேண்டும்..
பரமசிவன் தட்சிணாமூர்த்தியாக- ஞானமௌன குருவாக மதிக்கப்படுகிறார்.

பிரம்மன் வேதத்தையே கையில் கொண்டிருந்தாலும் அருணாசலத்தில் பொய் உரைத்ததால் குருவாக- வணங்குவதில்லை. . 

சதுர்வேத புருஷன் என்று மார்தட்டினாலும், "ஓம்' என்னும் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல முடியாமல் முருகனால் சிறையிலிடப்பட்டார். 

"நீ அறிவாயோ' என சிவன் கேட்க, "கேட்கும் முறையில் கேட்கத் தயாராயிருந்தால் சொல்வோம்' என்று, தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன்- சிவகுருநாதன்- தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்றவன் முருகன்! 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மு என்றால் முகுந்தன்- அதாவது விஷ்ணு.

ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.

கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன்.
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.

ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.

தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்- அதனால் முருகன். 

விசாகம், கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவன் முருகன் என்கிற  சிறப்பு உண்டு...
செல்வச்செழிப்பான பரம்பரையில் தோன்றிய  
முருகனின் தாய் பார்வதியோ மலைராஜன் இமவானின் மகள். 

தந்தை ஈசனோ நிதிக்கு அதிபதியான குபேரனின் தோழன். 

மாமன் மகாவிஷ்ணுவோ கோவர்த்தனகிரியை குடையாய்
எடுத்து பசுக்களைக் காத்த பராக்கிரமசாலி. 

அத்தை லட்சுமியோ செல்வச் செழிப்பில் திளைப்பவள். 

பெற்றோர் மட்டுமல்ல. பெண் கொடுத்த மாமன்
மூவுலகங்களையும் ஆளும் தேவேந்திரன். 

 பழநியிலே ஆண்டியாய் இருந்து  கிடைத்ததை தனக்கென 
வைத்துக் கொள்ளாமல் அடியார்களின் நலன் கருதி 
அவர்களுக்கே கொடுத்து விடுகிறான் கந்தன். 
அதனால் தான் மற்ற படைவீடுகளை விட பழநியில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தன்னிடம் இருப்பது எதையும் மறைக்கும் மனமில்லாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக முருகன் இங்கு வீற்றிருப்பதால், இந்த ஆண்டியைத் தரிசிக்க பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்திலேயே அதிக வருமானம் கொண்ட தலமாகவும் இருக்கிறது.
கந்தனின் அவதார சமயம்... சிவ- பார்வதியுடன் கங்கையும் அக்னியும் அங்கிருந்தனர். ஒரே சமயத்தில் நான்கு பேரும் குழந்தையை அழைத்தனர். அவன்தான் சிவஞான பண்டிதனாயிற்றே! 
சிவன் தந்தை; அக்னி வளர்ப்புத் தந்தை.
பார்வதி தாய்; கங்கை வளர்ப்புத் தாய்.

 ஸ்கந்தன், விசாகன், சாகன், நைகமேயன் என நான்கு உருவம் கொண்டு சிவனிடம் ஸ்கந்தனும், பார்வதியிடம் விசாகனும், அக்னியிடம் சாகனும், கங்கையிடம் நைகமேயனுமாகத் தாவிச்சென்று அனைவரையும் மகிழ்வித்தானாம்.

கைத்தமலை வீற்றிருந்தருளும் கருணை தெய்வம்..
முருகப்பெருமானுக்குரிய பெயர்களில் "விசாகன்' என்பதும் ஒன்று. விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால் இப்பெயர் உண்டானது. "வி' என்றால் பறவை (மயில்) என்றும், "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' என்றும் பொருள். 
உலகத்தின் புறஇருளைப் போக்க நீலக்கடல் மீது சூரியன் உதிப்பதுபோல, அகஇருளைப் போக்க நீலமயில் மீது முருகப்பெருமான் காட்சி தருகிறார். 

முருகனுக்குரிய ""வேலுமயிலும்'' என்ற தமிழ் மந்திரத்தில் 
மயில் இடம்பெற்றுள்ளது. ""வேலுண்டு வினையில்லை! 
மயிலுண்டு பயமில்லை!!'' என்பது முருகனடியார்களின் அருள்வாக்கு. 

வேதங்களே மயிலாகி ஞானவடிவேலனைத் தாங்குவதாக வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது
அருணகிரிநாதர் திருப்புகழில் ""சிங்கார ரூப மயில் வாகன நமோ நம'' என்று முருகப்பெருமானைப் பாடுகிறார்
பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் போன்ற மகான்கள் முருகப்பெருமானை வழிபட்டபோதெல்லாம், மயில் எதிர்வந்து காட்சி தந்ததையும், தோகை விரித்தாடியதையும் தரிசித்திருக்கிறார்கள்.. 
மயிலை தரிசித்தால் முருகப்பெருமானின் அருள்மழையில் நனையலாம் என்பது முருகனடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 
"மயில் விருத்தம்' என்ற நூலில் முருகப்பெருமானின் வாகனமான மயிலைப் போற்றி வழிபட்டோருக்கு சீர்மிகு வாழ்வும், செல்வமும், வேண்டிய வரங்களும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் கூறியுள்ளார். 
பத்துநாட்கள் நடக்கும் வசந்தவிழா கருவறையில் நீர்தேக்கி இறைவனை குளிர்விப்பர். சிறுபருப்பில் தயாரிக்கப்பட்ட பாயாசம், நீர்மோர், அப்பம் போன்ற குளிர்ச்சியான பொருட்களை நைவேத்யம் செய்வர். வெப்பம் தணிக்கும் இந்த விழாவிற்கு "உஷ்ணசாந்தி உற்சவம்' என்று பெயர்
திருச்செந்தூரில்  செந்திலாண்டவர் தங்கச்சப்பரத்தில் வசந்தமண்டபத்திற்கு எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

அப்போது வசந்தமண்டபத்தில் 11 சுற்றுகள் சுற்றுவார். வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்திமத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாதஸ்வரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல்பாட்டு ஆகிய 11 பாராயணங்கள் ஒவ்வொரு சுற்றிலும் இடம்பெறும்.

க்ஷோடச (16 வகை) தீபராதனைக்குப்பின், சுவாமி வீதிவலம் புறப்படுவார். 
முதல்படைவீடாகிய திருப்பரங்குன்றத்திலும் பால்குடம் சிறப்பாக நடக்கும். சண்முகப்பெருமானுக்கு அதிகாலை முதல் மதியம் வரை பாலபிஷேகம் தொடர்ந்து நடக்கும். விசாகநாளில் முருகனைத் தரிசித்தோர் முருகப்பெருமானை ஆண்டு முழுவதும் தரிசித்த புண்ணியம் பெறுவர். 

யானை வாகன முருகன் மயிலுக்குப் பதிலாக யானை வாகனத்துடன் கூடிய முருகன், தோல் நோய் தீர்க்கும் தெய்வமாக நாகப்பட்டினம் நகரிலுள்ள குமரன் கோயிலில் அருள்பாலிக்கிறார்.தோல்நோய் உடையவர்கள் குமரன் கோயிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக நம்பிக்கை.  
.  
நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில்நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர்த்தினார். 

அந்த சிலையை எடுத்து அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்இங்கு குபேரர் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது
 விரதம் இருந்ததால் குடம் பாலில் ஒரு துளி தயிர்பட்டால் அந்த குடம் பாலும் தயிராகி, அந்த தயிரை கடைந்து வெண்ணையாக்கி, வெண்ணையை உருக்கி நெய்யாக்கி, அது பாலைவிட நல்ல விலை போவது போல, இறைவன்  அருளால் அந்த பக்தனுக்கு வாழ்வே சிறப்பாகும் – எந்நாளும் வசந்த காலமாகவே மாறிவிடும்.


வயலூர் முருகன் தேர்

15 comments:

  1. சிறப்பான படங்கள் + விளக்கங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள்...... விசாகன் எனும் பெயர் இப்போது தான் கேள்விப்படுகிறேன்... அப்பெயருக்கான விளக்கமும்.

    ReplyDelete
  3. வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை!..
    இனிய பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. முருகனின் அத்தனை சிறப்புகள்,தகவல்கள், அழகான படங்களுடன் அருமையான பகிர்வு. நன்றி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மு
    ரு
    கு

    விளக்கம் முறுகலான ஜாங்கிரி போல இனிக்குது.

    >>>>>

    ReplyDelete
  6. அழகழகான படங்கள் முருகனைப்போலவே !

    காணொளியும் கண்டோம்.

    >>>>>

    ReplyDelete
  7. ஒவ்வொன்றையும் பற்றி அற்புதமான அசத்தலான விளக்கங்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. தாய், தந்தை, மாமன், அத்தை, பெண் கொடுத்த சம்பந்தி மாமன் எல்லோரும் இவ்வாறு சிறப்பான பெரும் புள்ளிகளாக இருப்பினும் பழநியின் ஆண்டியாய் முருகன் என்னும் விளக்கம் பழநி பஞ்சாமிர்தமாக ஜோர் ஜோர் !

    >>>>>

    ReplyDelete
  9. விரிந்த செந்தாமரைத் தடாகத்தில் மிதந்திடும் அந்த 5+1 = 6 குழந்தைகள் அபாரமாக ஜொலிப்பதாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. வி+சாகன் = விசாகன் [மயில் வாஹனன்] விளக்கம் புதுமை மற்றும் இனிமை.

    >>>>>

    ReplyDelete
  11. பால் > தயிர் > வெண்ணெய் > நெய்
    என மறைமுகமாகப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி சொன்ன பாங்கு அழகோ அழகு.

    >>>>>

    ReplyDelete
  12. வயலூர் முருகன் தேர் உள்பட எல்லாமே ஜோர் !

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ;) 1309 ;)

    oooo oooo

    ReplyDelete
  13. விசாகன் என்னும் பெயருமா அந்த
    விநாயகனின் மூத்தோனுக்கு.!!

    அரிய தகவல்.
    அறியவே இன்பம்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  14. இந்துக் கடவுள்களில் ஏனோ முருகனைப் பிடிக்கும். விசாகன் எனும் பெயரும் அவனுக்குண்டு என்று இதுவரை தெரியாது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. முருகனுக்கு இன்னுமொரு பெயர் விசாகன் என்று இன்று தான் தெரிந்தது. நன்றி அம்மா.

    ReplyDelete