Wednesday, August 3, 2011

அன்னையின் அருந்தவம்


[gomathiamman.jpg]
 எல்லாப் பிறவியிலும் வரும் ஒரே அன்னை தன் குழந்தைகளின் புத்தி தெளிய வேண்டி, தன் பாகத்தையே விட்டுக் கொடுத்த திருமதி ஒரு வெகுமதி அன்னை கோமதி!

சிவனும் விஷ்ணுவும் ஒன்று. இருவரும் சரி பாதி என்பதை உணர்த்தும் தலமாக, நெல்லை மாவட்டம் சங்கரநாராயணர் கோயில் விளங்குகிறது.
ஹரி-ஓம்-நம சிவாய!
File:Skoil1.jpg

உமாதேவியார் சிவபெருமானிடம், ‘விஷ்ணுமூர்த்தியுடன் தாங்கள் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தை உலகுக்கு அருள வேண்டும்’ என வேண்டினார்.

 சிவபெருமானும் மனமுவந்து, ‘அகத்திய முனிவர் தவமியற்றிய பொதிகை மலைப்பகுதியில் புன்னை விருட்சமாகப் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால்,விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்’ என்றார்.

 ஈசன் திருவடி வணங்கிய உமாதேவியார், புன்னைவனத்துக்குப் புறப்பட்டார். தேவியாரைப் பிரிய மனமின்றி, ‘உடன் வருவோம்’ என வேண்டிய தேவர்களை, ‘நீங்கள் புன்னைவனத்தில் விருட்சமாகத் தோன்றி, தேன் மிகுந்த மலராகவும் கனியாகவும் மகிழ்விப்பீராக’ எனக் கூறி உடன் அழைத்தார்.

 தெய்வப் பெண்களை பசு (ஆ) வடிவெடுத்து பால் கொடுத்து மகிழ்ச்சி தாருங்கள்’ என்றார்

உமாதேவி. ‘ஆ’ வடிவெடுத்து தெய்வப் பெண்கள் உமாதேவியுடன் வந்ததால், அவரை ‘ஆவுடையாள்’ என்கிறோம்.

  முனிவர்கள், தேவர்களை ஆதி சைவராகி பூஜிக்கும்படி பணித்தார்.

 புன்னைவனமாகிய சங்கரன்கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் முனிவர்கள், தேவர்கள், தெய்வப் பெண்களுடன் தவமியற்றினார். 
தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பௌர்ணமியில் புன்னை வனத்தில் ‘சங்கரநாராயணராக’, உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சியருளினார்.

[sankaranarayanar.jpg]
உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என சிவபெருமான் கூறினார்.
‘இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திரு-உருவைக் கொள்ள-வேண்டும்’ என அம்பாள் பிரார்த்தித்தாள்.

ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.

 சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும் 
ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார். 
மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் உமாதேவியார் கோமதி அம்மனாக வீற்றுள்ளார்.
இந்தப் புராண நிகழ்வை நினைவுகூரும் விழாவாக ஒவ்வோர் ஆண்டும் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுகிறது.  

விழாவின் முக்கிய நிகழ்வான தபசுக் காட்சியும், சங்கரநாராயணராக ஈசன் காட்சியருளிய வைபவமும் நிகழ்கிறது.

 தன் வலக் காலை உயர்த்தி, இடக் காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தபசுக் காட்சி அருள் புரியும் காட்சி ஆடித் தபசு மண்டபத்தில் அன்னை தவம் நடித்துக் காட்டப்படுகிறது! 

ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! 
சங்கர நாராயணர் அன்னை முன் தோன்றி வரம் அருளும் காட்சி!


அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

 அம்பாளின் வேண்டுதலின்படி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் சிவபெருமான் அம்பாளுக்குக் காட்சியருள்வார். 

ஆடித் தபசு கொடியேறிய பின் ‘ஆடிச்சுற்று’ என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். 

அதிக எண்ணிக்கையில் சுற்ற விரும்புவோர் ஆடி மாதம் முழுவதும் காலை, மாலை என சுற்றி வருவர். 

ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

ஐம்பூதங்களில் இந்தக் கோயில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்கிறது. இதனால், இக்கோயிலில் உள்ள ‘புற்றுமண்’ வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். 

மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் சுகம் காண்பார்கள்.

 உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்!   சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!


கோமதி அம்மன் சந்நிதி முன்பு ஸ்ரீசக்கரம் எழுதி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இங்கே பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கி தவம் செய்தால் அவை நீங்கும். 

 உடல் உபாதைகளுக்காக நூற்றுக்-கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்ச்சைகளைச் செலுத்துகிறார்கள்.



 இங்குள்ள நாகச்சுனையில் மூழ்கி சுவாமி, அம்பாளை வழி-பட்டால் குட்டம், குன்னம் போன்ற நோய்கள் நீங்கும். 

வீட்டிலும் கனவிலும் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் தென்பட்டாலும், விபத்து போன்றவற்றில் காயம், உறுப்புகளில் பிரச்னைகள் ஏற்பட்டால், இக்கோயிலில் விற்கப்படும் உலோகத்தினால் செய்யப்பட்ட தகட்டால் ஆன பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் உருவம், மனித கை, கால், மார்பு, தலை போன்ற உறுப்புகளின் தகட்டை வாங்கி உண்டியலில் செலுத்தி வணங்குவதன்மூலம் பாதிப்புக்கள் நீங்கும், நிவர்த்தி கிட்டும் .

, மிகப் பழமையான ஸ்படிக லிங்கம் வெள்ளிப்பேழையில் உள்ளது. இதற்கு தினமும் அபிஷேகம் நடக்கும். 

இங்குள்ள சங்கரநாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. 

அதிகார நந்தி சுயஜாதேவியுடன் காட்சியருள்கிறார். 

 சங்கரநாராயணர் கோயில் மகாமண்டபத்தில் யோகநரசிம்மர், கார்த்தவீரியன், தசகண்ட ராவணன், ஹிரண்ய சம்ஹாரமூர்த்தி, வீணாகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், ரிஷபாரூடர், உபதேச தட்சணாமூர்த்தி, ஐம்முக பிரம்மா, மன்மதன், செண்பக வில்வ வாராஹி, ஸிம்ஹாசனேஸ்வரி, மகிஷாசுரமர்த்தினி, கபாலி, ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹாரமூர்த்தி, தட்ச சம்ஹாரமூர்த்தி, மயூராரூடர், த்ரிவிக்ரமர், ஹம்சாரூடர் என பல அரிய தெய்வ உருவங்களும் உள்ளன

 பரிகாரம் செய்ய விரும்புவோர்,  வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.
[sankaralingaswamigal.jpg]
ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! 

உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே  விட்டுத் தந்த அன்னைக்கு  தனித்தேரில் சிறப்பாக வலம் வருகிறாள்
[sankarankoil.jpg]
அரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவன் வாயில திருநெல்வேலி 
"அல்வா" தந்து விளங்க வைக்கும் அன்னையின் தபசு 







21 comments:

  1. தபசுக்கோலத்தை தரிசிச்சேன்..

    ReplyDelete
  2. படங்கள்...
    செய்திகள்...
    எல்லாம் அருமை...

    ReplyDelete
  3. எனக்கு மிக மிகப்பிடித்த விசுவின் திரைப்படமன “திருமதி ஒரு வெகுமதி” யை, கோமதி அம்பாளுடன் இணைத்துச் சொல்லியுள்ளது அழகாக உள்ளது.

    அரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவன் வாயில "அல்வா" தந்து விட்டீர்களே கடைசியில் (நெல்லை மாவட்ட திருநெல்வேலி அல்வா அல்லவா) OK OK அதிலும் தங்கள் தனித்திறமை அந்த அல்வா போலவே இனிப்பாக.

    படங்களும், ஆடித்தபசுவின் விளக்கங்களும் அருமையோ அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  4. Nice.,
    Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

    ReplyDelete
  5. படங்களுடன் தகவல் அருமை..

    ReplyDelete
  6. சக்தியுள்ள கோவில் இது ...இங்குள்ள புற்று மண் ஒரு முறை நண்பர் ஒருவர் கொடுத்தார் ...

    ReplyDelete
  7. ஆடி தபசு காட்சியை சிறு வயதில் பார்த்தது. இப்போது மறுபடியும் அன்னையின் திருவிழா காட்சிகளை உங்கள் படங்கள் மூலம் மீண்டும் தரிசித்தேன்.
    நன்றி .

    ReplyDelete
  8. ஆடித்தபசு பற்றிய செய்திகள் அற்புதம்.:)

    ReplyDelete
  9. நாள்தோறும் செய்யும்
    ஆன்மீகத் தொண்டு
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. படங்களும் ,பதிவும் அருமை

    ReplyDelete
  11. சங்கர நாராயணன் கோவில் ஆடி தபசும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஆடி அமாவாசை யாத்திரையும் தெற்குபூமியின் ஆடிமாத சிறப்புகள்.

    ReplyDelete
  12. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஆடித்தபசு அருங்காட்சிகள் அருமை.

    ReplyDelete
  14. ஆன்மீக தரிசனம்...அழகு. நன்றி

    ReplyDelete
  15. அருமையான விவரங்கள். ஆயிரங்கால் (?) மண்டபம் படம் அழகு.

    ReplyDelete
  16. சங்கரன்கோவிலுக்கு முன் எப்போதே போயிருக்கிறேன்.அதை மீண்டும்கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்!

    ReplyDelete
  17. //அரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவன் வாயில "அல்வா"//

    ஆஹா, நெல்லை இருட்டுக்கடை அல்வா சாப்பிட்ட மாதிரி இனிக்கிறது.

    ReplyDelete
  18. ;)
    சர்வ மங்கள மாங்கல்யே
    சிவே சர்வார்த்த சாதிகே !
    சரண்யே த்ரயம்பிகே கெளரி
    நாராயணீ நமோஸ்துதே !!

    ReplyDelete