Thursday, December 8, 2011

அனுக்கிரஹ மகாலஷ்மி





மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே!
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே

 அன்னைஅபிராமியை மணியின் ஒளியாக தரிசிக்கவைப்பார் அபிராமிபிட்டர்.

“அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அச்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றித்தொழும் அருமையான கார்த்திகை முழு நிலவு நாள்..

இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட வந்த வைதிக மாமணி என்று
சேக்கிழார் பெருமான் “நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
திருஞான சம்பந்தரை சிறப்பித்துக் கூறுவார்..
Prize winning flower arrangement (Onam pookkalam) (*shutterbug_iyer*) Tags: india flower festival traditional contest kerala software poo professionals onam arrangements pookkalam nikonstunninggallery indiancolourful cocncordians
மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக அகலகில்லேன் இறையும் என்று மஹா விஷ்ணுவின் வக்ஷ்ஸததிலே உறையும் அலர் மேல் மங்கை 
மகாலஷ்மியின் அனுக்கிரகம் பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றினால் சுகத்தோடு அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்..

வீட்டுக்கு வருகின்ற குலமகளான மருமகளை விளக்கேற்ற வந்தவள் என்று அழைப்பதும் கிரக லக்ஷ்மி என்று போற்றுவதும் நம் பண்பாடு..
பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குபவளாக இருக்கிறாள் 

இதானாலேயே அவள் இல்ல விளக்கு அதாவது குடும்பத்தில் உள்ள தேக்கம் என்ற இருளை போக்கி வளர்ச்சி என்ற வெளிச்சத்தை கொண்டு வருபவள் என்று அழைக்கப்படுகிறாள் .
அருட்பிரகாச வள்ளலார் கடவுளை ஜோதி வடிவமாக கண்டார் 
நாயன்மார்களும் ஆழ்வார்களும் கூட நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நிர்மல பொருளான இறைவனை ஜோதியன் என்றே அழைக்கிறார்கள்

சனாதன தர்மமான நமது இந்து மதத்தில் ஜோதி வழிபாடு என்ற திருவிளக்கு வழிபாடு இதனால் சிறப்பு மிக்க இடத்தினை பெறுகிறது

அக்னி வளர்த்து யாகம் செய்வது கூட ஒரு வித ஜோதி வழிபாடுதான் 
தீப வழிப்பாட்டை தத்துவ நோக்கில் அறியாமை என்ற இருளை நீக்க ஞானம் என்ற தீபம் ஏற்றப்படுகிறது என்று பலவாறு சிறப்பித்து ஞானிகளும் அருளாளர்களும் அருளியிருக்கிறார்கள் 
குத்து விளக்கு என்ற பொருளுக்கும் ஆழ்ந்த கருத்தமைந்த பின்னணி உள்ளது 

குத்து விளக்கின் அடிப்பாகம் மலர்ந்த தாமரை பூவை போல அகன்று வட்டமாக இருப்பதனால்  திருப்பாற் கடலில் பாம்பணை மேல் பள்ளிகொண்டுள்ள திருமாலின் திருநாபியில் முளைத்த தாமரை பூவில் அமர்ந்திருக்கும் படைப்பு கடவுளான பிரம்ம தேவனை குறிக்கிறது ...
விளக்கில் உள்ள கலை நயம் மிக்க சித்திர வேலைப்பாடுகள் கணபதி முருகன் ராமன் கிருஷ்ணன் லஷ்மி அனைத்து அனுக்ரஹ தெய்வங்களைக் குறிப்பதாகும் .

 தெய்வப் பசு காமதேனுவின் உடலில் சகல தேவதைகளும் வசிப்பது போல திருவிளக்கான குத்து விளக்கிலும் சர்வ தேவர்களும் தேவதைகளும் காட்சி தந்து தத்துவ வடிவமாக குடி கொண்டிருக்கிறார்கள் ..
[IMG_0336[9].jpg]

ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அமையும் நாளில் மேற்கொள்ளப் படுகின்ற திருக்கார்த்திகை விரதம் மேன்மை மிக்கது..
 திருக்கார்த்திகைத் திருநாளைத் தீபத்திருநாள் என்றும் விளக்கீடு என்றும் கூறுகின்றோம். 

உலக உய்வின் பொருட்டு முருகப் பெருமான் தோன்றிய தினமாக இந்நாள் கொண்டாடப்படுகின்றது.

சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப் பிழம்புகள் சரவணப் பொய்கையில் சென்று விழுந்தபோது அவை குளிர்ச்சி பெற்று ஆறு குழந்தைகளாகத் தோற்றம் பெற்றதாகவும், அந்த ஆறு குழந்தைகளையும் உமாதேவியார் கட்டியணைத்தபோது ஆறு திருமுகங்களும் பன்னிருகைகளும் கொண்ட முருகப் பெருமான் தோற்றம் பெற்றதாகவும் புராணங்கள் பகர்கின்றன.
Arunachaleswarar Temple
"அருவும், உருவுமாகி, அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய் 
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாக 
கருணை கூர்முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டும் 
கொண்டு ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய' 
என்ற பாடல் முருகப் பெருமானின் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

உலக நன்மைக்காக முருகப் பெருமான் தோன்றிய திருநாளாகக் கொள்ளப் படும் நன்னாளை ஆலயங்களிலும், இல்லங்களிலும் தீப ஒளியேற்றிக் கொண்டாடுவது நெடுங்காலமாக இந்துக்கள் கைக்கொள்ளும் வழிபாடாகவும்
 ஆசாரத்துடன் விரதமும் இருந்து வழிபாடு செய்யப்படுகின்றது.

சர்வாலய தீபம், குமராலயதீபம் என்று இரண்டாக இத்தீபத்திருநாள் வகுக்கப்பட்டுள்ளது. 

சர்வாலய தீபம் இந்துக்கள் தமது இல்லங்கள் தோறும் தீபமேற்றுவதாக அமைகின்றது.

சர்வாலய தீபதினத்தன்று இல்லங்கள் தோறும் தீபமேற்றி, ஒளிபரப்பி வழிபாடு செய்வது ஒவ்வொரு இல்லமும் இறைவன் உறையும் ஆலயமாக விளங்க வேண்டும். 

தீமை தரும் நோக்கங்களோ, சிந்தனைகளோ, செயற்பாடுகளோ அற்ற புனிதம் ததும்பும் இல்லங்களாக இறைவன் குடியிருக்கும் கோயிலைப் போன்று சிறப்புடன் விளங்கவேண்டும் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்துவதாகச் சர்வாலய தீபம் விளங்குகின்றது.

பக்தியுடன் கூடிய பண்பு மிகும் நெறியில் வாழ்வின் பாதையை ஒழுங்கமைத்துக் கொள்ளும் போது அஞ்சேல் என்று அபயமளிக்கும் முருகப் பெருமானின் கருணைமிகுகாவலும் கிட்டிவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுவதால் தன்னம்பிக்கையும் தானேவந்து சேர்ந்து வாழ்வை எழுச்சியுறச் செய்யும்.

முருகனைச் சரணடைந்தால் பெறும் பாக்கியம் எதுவென்று பாரதியார் இவ்வாறு கூறியுள்ளார். "வேலைப்பணிந்தால் விடுதலையாம்! வேல் முருகன் காலைப்பணிந்தால் கவலைபோம்' என்கிறார் அவர்.
  
மனக்கவலை மாற்றும் மாமருந்து திருமுருகன் திருவடியே என்பதைப் பாரதியார் எடுத்துக்கூறியுள்ளார்.

மன இருள் அகற்ற இறையருள் எங்கும் பிரகாசிக்க வேண்டி நடைபெறும் வழிபாடாக குமாராலயதீபம் ஏற்றப்படுகின்றது. 

 கார்த்திகை நட்சத்திரத்தினத்திற்கு அடுத்து வரும் ரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாள் திருமாலுக்குரிய சிறப்பு தினமாக அமைகின்றது. 

அன்றைய தினத்தை விஷ்ணு ஆலயதீபத்திருநாளாகக் கொண்டாடுவது இந்துக்களின் மரபு. 

காக்கும் தெய்வமான திருமாலின் கருணை மிக்க காப்பு வேண்டி அன்றைய தினம் வழிபாடு இடம் பெறுகின்றது.
தீப ஒளியேற்றி வழிபடும் திருக்கார்த்திகை தினத்திலே அக்கினி பகவானுக்குரியதாகக் கொள்ளப்படும் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் தீபமேற்றி சிறப்பான வழிபாட்டுடன் கொண்டாடப் படுகின்றது.

நம்மக்களின் இயற்கையின், பஞ்சபூதவழிபாட்டின் சான்றாக இது அமைகின்றது.

திருவண்ணாமலையில் தீபத்திற்கு நெய் காணிக்கையாய் தேவஸ்தானத்தில் அளிக்கும் போது அளவிட்டு நம்கையில் சிறிது பொடித்த கற்பூரத்தை கொடுத்து
நெய்யில் போடச் செய்கிறார்கள்..

காரணம் கேட்டேன்.. கற்பூரம் போட்ட நெய் விளக்கிற்கு மட்டுமே பயன்படுத்தப்படமுடியுமாம்...

நெய் காணிக்கையாளரின் முகவரிக்கு மலைமேல் எரிந்த தீபத்தின் மையை சிறிய பிளாஸ்டிக்குப்பியில் அடைத்து,  அனுப்பிவைக்கிறார்கள்..

மையை தினமும் குளித்தபின் நெற்றியில் அணிந்துகொண்டால் கண்திருஷ்டி நீங்கி செல்வவளம் சேரும் என்பது ஐதீகம்.. 

அல்லல்கள் வாட்டிவதைக்கும் இக்கால கட்டத்திலேயே சூரனை அடக்கி உலகில் நிம்மதி நிலவச் செய்யத் தோன்றிய முருகப் பெருமானின் அருள் நாடி விரதமிருந்து அபயம் கேட்டு.
""யாமிருக்கப் பயமேன். அஞ்சேல்' என்று அபயம் தந்து ஆறுதல் தரும் முருகப் பெருமானை அச்சமில்லா பெருவாழ்வை அடைய இருண்ட, கொடிய குணங்கள் யாவும் நீங்கி அருளொளி எங்கும் பரவிப் பிரகாசிக்க அருளுமாறு தீபமேற்றி வழிபடுவோம். 
இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும்.  காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும் என நமது முன்னோர்கள் நமக்கு பழக்கப்படுதியிருக்கிறார்கள்.
பெருமை வாய்ந்த கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை நாளில் நமது இல்லங்களில் ஒளி வீசும் தீபங்களை ஏற்றி மன சஞ்சலங்களையும், நோய்களையும், நமது துன்பங்களையும், பய இருளையும் போக்கி வாழ்வில் வளம் பல பெற பிரார்த்திப்போம்..
[deepam_out[5].jpg]

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUchOUXLLy9VL9zezabLJVLZyrv3ZeLRrKEYo6sltGyKeKpTv-z4rAHECrKT6sOWj6Q8-h5w5uBXuh7JHudEh8m5B4EfcDT_bT7TOdhfhqrLHcikSKd6fWSB0deBYm7PRcz21r3DyFwtWG/s1600/DSCF3992-1.jpg


கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்-images.jpg
695134vc3pcgb7rh1.gifPhoto Sharing and Video Hosting at Photobucket
.திருக்கார்த்திகை பரணி உத்சவம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnrzNKWfAxIWKvrWJMVQVjB6Xvw9bODTSaPHgeM2UY9jjPNocUeRUS9IM8SpmwM6oe8ry_pzDIKyh1PBKOnufwmnJn8K0_j9YpxsKksltSzIHe88q09aSezjO994Ectx4NK-ZaBETN-ZU/s1600/candles+wedding+indian+decor.jpgPhoto Sharing and Video Hosting at Photobucket
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAJsu30p2YhsDunIUPbBAvbr1TViRp-sI-kq8i_rmwFAcwxvRfh0P1rABTBzXx7WLdkf6ZE4aW7D2pDV3qI3cCcVKmkXYVPWH0btrycWqhTQFuCPrgw5BS3LVbnKFRXlcHoCCtbfXhyphenhyphen5E/s1600/maha-deepam.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtTHDFQluC4gMoxQpr3mA6d0CB5YR_l-Pw6r9fZs4LYfaP3-Ffe55UjCJYACBidi4K1pqe3uZiOGxs2bRsVoG1lm6-oHkfoFL1QwlWQ3ERsgZQi950HJnhflqUNAME0GLEGIi50eSuh_s/s1600/photoblog2.jpg









Photo Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at Photobucket

Lamp

32 comments:

  1. மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அனுக்கிரஹத்துடன் மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. எஸ்.வி.சுப்பையா அபிராமி பட்டராக நடித்த அந்தப்படம் நினைவுக்கு வருகிறதே! எவ்வளவு அருமையான பாடல். அமாவாசையன்று, தன் பக்தனுக்காக தன் காதில் உள்ள அணிகலனை எடுத்து வீசி நிலவொளியைத் தந்தாளே!

    ஆஹா! மறக்க முடியுமா அதை.

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த தாமரை இதழ்களையே மெத்தையாக்கி (என்னைத் தாலாட்ட வருவாளோ ... நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ ... பாட்டுப்போல)
    அதன் நடுவே எங்களையெல்லாம் அந்த தீபம் போல பிரகாஸிக்கத் தந்த பதிவே இது என்று சொல்லுவது போலல்லவா அமைத்துக் கொடுத்து விட்டீர்கள்!;)))) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி!

    ReplyDelete
  4. அடுத்து வரும் அந்தப்பூக்கோலம் தான் எத்தனை அழகு .... அடடா. கோலமிட்ட மங்கையரைக் கும்பிடத் தோன்றுகிறதே!

    ReplyDelete
  5. குலமகள் .. மருமகள் .. விளக்கேற்ற வந்தவள் .. கிருக லக்ஷ்மி .. அடுத்த தலைமுறையை உருவாக்கித்தரும் இல்ல விளக்கு .. தேக்கம் என்ற இருளை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டு வருபவள் ... ஆஹா அருமையோ அருமை. இத்தகைய சிறப்புக்களை ஒருங்கே பெற்றுள்ள தங்களை மருமகளாக அடைந்த தங்கள் மாமியார் மிகவும் கொடுத்து வைத்தவர்கள், தான் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

    அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். உங்களுக்கு என் தீபத்திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க வாழ்கவே!

    ReplyDelete
  6. முகம் பார்க்கும் கண்ணாடி முன் படைத்துள்ள அனைத்து மங்கலப்பொருட்களும், அருமையோ அருமை. விஷு வென்று புத்தாண்டு துவக்கத்தில் கேரளா+பாலக்காடு பகுதிகளில் இப்படி வைத்து, காலையில் அதன் முன் தானே கண் திறப்பார்கள்!. ;))))

    என்னிடம் புது நோட்டுக்கள், புது காயின்கள் நிறைய மலையாளிகள் இதற்காகவே சொல்லி வைத்து வாங்கிச் செல்வார்களே .... அது ஒரு பொற்காலம்!

    ReplyDelete
  7. இன்னொரு பூ மஞ்சத்தில், ஐந்து முக குத்து விளக்குடன், எனக்கு மிகவும் பிடித்த நேந்தரங்காய் சிப்ஸ்ஸை வைத்துக்காட்டியதில், என் பற்களும் நாக்கும் இப்போது நமநம என்கிறதே1 நான் இப்போது உடனடியாகக் கடைக்குப்போகணுமே!

    அழகழகான முறையில் கலை அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள விளக்குகளைப்பாதுகாக்க சிப்பாய்கள் போல சுற்றிலும் அழகான நம் அகல் விளக்குகள் அருமையான அணிவகுப்பு தான்.

    ReplyDelete
  8. இந்த முறை வியாழக்கிழமையே மஹாலக்‌ஷ்மி தரிசனம் தந்தமைக்கு நன்றி, ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் அபாரம்

    ReplyDelete
  9. 1.மேடம்! அது மணியே! மணியின் ஒலியே இல்லையா? ஒளியேவா?

    2.திருக்கார்த்திகை பரணி உத்சவம் லிஸ்டில் முதல் ஃபோட்டோவில் இருப்பது உடையவரா? அல்லது மணவாள மாமுனிகளா?

    ReplyDelete
  10. அடுத்த படத்தில் காமாக்ஷி விளக்கு பிரகாசிக்குதே செம்பருத்திப்பூக்களுடன்.

    சென்ற வாரம் வந்து போன என் பெரிய பிள்ளை என்ன செய்தான் தெரியுமா? நேராக மங்கள் மங்கள் தங்க மாளிகைக்குச் சென்றான். மிகவும் முரடான நல்ல அழுத்தமான வெள்ளிக்காமாக்ஷி விளக்கொன்றை
    (600 கிராம் வெயிட் உள்ளது) மோத முழங்க வாங்கி வந்து, காட்டிவிட்டு ஊருக்குக்கொண்டு சென்று விட்டான்.

    அதில் ஒரு பக்கம் அஷ்ட லக்ஷ்மி பின்புறம் நீங்கள் காட்டியுள்ள கஜ லக்ஷ்மி. கால் கிலோவுக்கு மேல் ஒரே நேரத்தில் நெய்யை ஊற்றலாம் போல குழிவான இடம். சூப்பராக இருந்தது.


    அடுத்த முறை வரும்போது அதற்கு ஜோடியாக இன்னொன்று வாங்கணும் என்று சொல்லிப்போய் இருக்கிறான்.
    இதன் விலையே 40000 க்கு மேல்.

    அவன் எது செய்தாலும் இப்படித்தான் விசால எண்ணத்துடன் செய்வான். அதில் இன்று நெய் முழுவதுமாக ஊற்றி ஏற்றி போட்டோ பிடித்து இங்கு எனக்கும் வந்து விட்டது.

    இதைப்பார்த்ததும் எனக்கு அந்த நினைவு வந்து விட்டது. [...... ஏதோ உள்ள சீமாட்டி வாரி முடிகிறாள் என்பார்கள். அது போலவே தான் இதுவும்]

    நமக்கு ஏழைபாழைகளுக்குத் தான் அகல் விளக்கு உள்ளதே ... கவலையே இல்லை. எந்த விளக்கானால் என்ன! வெளிச்சம் கிடைக்க வேண்டும் அது தானே முக்கியம்! என்று நினைப்பவன் நான்.

    குழந்தைகளின் விருப்பத்திற்கும் குறுக்கே நிற்க மாட்டேன். அவர்கள் எது செய்தாலும் OK சொல்லிவிடுவேன்.

    ReplyDelete
  11. அந்த பூக்கோலமும் குத்து விளக்கின் தாத்பர்யமும் அருமை.

    again பொரி உருண்டை? ஹ்ம்....!

    ReplyDelete
  12. தெய்வப்பசு காமதேனுவையும், வேலைப்பாடுகள் அமைந்த விளக்கினையும் ஒப்பிட்டுச்சொல்லியுள்ளது மிகவும் அருமையான விளக்கம் தான்.

    உங்களால் மட்டுமே இதுபோன்ற ஆதாரத்துடன் கூடிய புதுப்புது விளக்கங்கள் தர முடியும்.

    காமதேனும் நீங்களே, கற்பக விருக்ஷமும் நீங்களே, அழகான விளக்குகளின் தீபமும் நீங்களே, எங்களைப்போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் சாதாரணமானவர்களுக்கு.

    தங்கள் இந்த அருந்தொண்டை மெச்சி மகிழ்கிறேன்.

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தெய்வப்பசு காமதேனுவையும், வேலைப்பாடுகள் அமைந்த விளக்கினையும் ஒப்பிட்டுச்சொல்லியுள்ளது மிகவும் அருமையான விளக்கம் தான்.

    உங்களால் மட்டுமே இதுபோன்ற ஆதாரத்துடன் கூடிய புதுப்புது விளக்கங்கள் தர முடியும்.

    காமதேனும் நீங்களே, கற்பக விருக்ஷமும் நீங்களே, அழகான விளக்குகளின் தீபமும் நீங்களே, எங்களைப்போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் சாதாரணமானவர்களுக்கு.

    தங்கள் இந்த அருந்தொண்டை மெச்சி மகிழ்கிறேன்.//


    ரசனையுடன் ஜொலிக்கும் கருத்துரைகளால் பதிவினை மிளிரச்செய்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...//

    //நமக்கு ஏழைபாழைகளுக்குத் தான் அகல் விளக்கு உள்ளதே ... கவலையே இல்லை. எந்த விளக்கானால் என்ன! வெளிச்சம் கிடைக்க வேண்டும் அது தானே முக்கியம்! என்று நினைப்பவன் நான்.

    குழந்தைகளின் விருப்பத்திற்கும் குறுக்கே நிற்க மாட்டேன். அவர்கள் எது செய்தாலும் OK சொல்லிவிடுவேன்./////

    திருவரங்கத்து நம்பெருமாள் அரங்கனே வெள்ளி பூணார்...
    வெண்கலம் ஆளார்..

    அரங்கனுக்கே தினப்படி பொன்வட்டில் என்று புது மண்பாத்திரத்திரத்தில்தானே நைவேத்தியம்??

    முரட்டு வெள்ளி விளக்கைவிட
    சாத்வீக மண் அகல் தங்கத்திற்கு ஒப்பானது...

    தங்கமான மனத்துடன் ஏற்றுவதால் தங்கத்தைவிட மண் அகல் மதிப்புமிக்கது..

    ReplyDelete
  15. A.R.ராஜகோபாலன் said...
    இந்த முறை வியாழக்கிழமையே மஹாலக்‌ஷ்மி தரிசனம் தந்தமைக்கு நன்றி, ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் அபாரம்//

    அபாரமான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  16. raji said...
    1.மேடம்! அது மணியே! மணியின் ஒலியே இல்லையா? ஒளியேவா?

    2.திருக்கார்த்திகை பரணி உத்சவம் லிஸ்டில் முதல் ஃபோட்டோவில் இருப்பது உடையவரா? அல்லது மணவாள மாமுனிகளா?//

    1..மணியின் ஒளியே தான் சரி என்று எங்கள் அபிராமி அந்தாதி வகுப்பில் சொல்லிக்கொடுத்தார்கள்.

    மணியின் கண் ஒளி இருக்கிறது என்று இலக்கண வகுப்பிலும் படித்திருக்கிறோமே!.

    மணி என்றால் காதால் கேட்கும் ஒலி மட்டுமல்ல...
    கண்களால் பார்க்கும் ஒளிக்கும் மணி என்றுதான் பொருள்..

    2 Azhwar Thirunagari Sri Manavala Mamunigal

    ReplyDelete
  17. raji said...
    அந்த பூக்கோலமும் குத்து விளக்கின் தாத்பர்யமும் அருமை.

    again பொரி உருண்டை? ஹ்ம்....!/

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    again பொரி உருண்டை? ஹ்ம்....!/

    இது வேறு பொரி.. வேறு பொரி உருண்டை..

    ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள்.. சரியா!!

    ReplyDelete
  18. சர்வாலய தீபத்தத்துவ விளக்கம் அருமை.

    கற்பூரம் போட்ட நெய் விளக்கேற்ற மட்டுமே பயன் படுமாம். ஆஹா!
    அதுவும் தங்கள் கையால் கற்பூரமிட்டுக் கொடுத்தது என்றால் நேராக அது அந்தக் கர்ப்பக்கிரஹத்துக்கே எடுத்துச்செல்லப் பயன் படுமே! ;))))

    இன்று காட்டியுள்ள பொரி உருண்டையில் வெல்லமே போடவில்லை. அவ்வளவாக ருசி இல்லை. நல்ல மண்டை வெல்லமாக பாகு வெல்லமாக உப்புக்கரிக்காத வெல்லமாக வாங்கி, பாகு காய்ச்சி நெல்பொரியைப்போட்டுக்கிளறி சூடு ஆறி அவலாகப் போகும் முன், எனக்கு முன் தகவல் கொடுக்கவும். உடனே ஓடோடி வருவேன் [பறந்து வருவேன்]. தங்கள் கையால் பிரஸாதமாக வாங்கிச் சாப்பிட.

    பட்டுரோஜாக்களின் நடுவே எரியும் தீபமும், மற்ற தீபங்களும் பதிவுக்கு நல்ல ஒளியைத்தந்து பிரகாஸிக்க வைத்துள்ளன.

    அந்தப்பனை விரியும் அழகும், புறப்பாட்டு ஸ்வாமியும், மின்னொளியில் ஒளிரும் கோபுரங்களும் வழக்கம் போல நல்ல அழகுடன் தந்துள்ளீர்கள்.

    12 ஜோதிர்லிங்கங்களும் சூப்பர்.


    கீழிருந்து 4 வது படத்தில் உள்ள நிறைய அகல்கள் போன்றவர்கள் உங்களின் அபிமான வாசகர்களாகிய நாங்கள்.

    அதில் ஒளிரும் பிரகாஸம் போன்றவர்கள் நீங்களும் உங்களின் அன்றாடப்பதிவுகளும்.

    வேறென்ன என்னால் பெரியதாகச்சொல்லிப் பாராட்ட முடியும் தெய்வாம்சம் பொருந்திய என் அன்புக்குரிய அம்பாள் போன்ற உங்களை! ;))))


    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 8th December ஆகிய இன்று உங்களைப் பாராட்டினோம் என்ற மகிழ்ச்சியே எனக்குப்போதும்.

    நன்றி, நன்றி, நன்றி.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  19. மகாலட்சுமி கடாட்சம் கிட்டியது சகோதரி...
    படங்கள் மிக அருமை..

    ReplyDelete
  20. மகேந்திரன் said...
    மகாலட்சுமி கடாட்சம் கிட்டியது சகோதரி...
    படங்கள் மிக அருமை..//

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  21. ஓக்கே!ஒத்துக்கறேன்.வேறதான்.ஆனா பாக்க மட்டும்தானா? :-)

    ReplyDelete
  22. Aha what a post Rajeswari.
    Without going to any temple you made me visit Thiruvannamalai and Deepa darsham by sitting at home.
    Really i enjoyed well dear.
    The animated Deepa darshan made by heart filled with joy.
    Thanks a lot dear.
    Some how i missed some of your posts and now i am going through all.
    Keep doing Rajeswari.
    viji

    ReplyDelete
  23. அருட்பிரகாச வள்ளலார் இறைவனை ஜோதி வடிவம் என்று சொல்லிருக்கிறார். அது போல் பிரம்ம குமாரிகள் இயக்கம் இறைவனை ஒளி வடிவம் என்று கூறுகிறார்கள்... ஆத்மா ஒளி வடிவம் என்று சொல்கிறார்கள்.. பரமாத்மாவும் ஒளிவடிவம்... கற்பூரம், தீபம், கிருஸ்துவ கோவிலில் மெழுகுவர்த்தி,இப்படி ஒளியை இறைவனாக வணங்குகிறோம் எனபதை ஸ்ரீ அருட்பிரகாச வள்ளலார் அவர்களும் ஜோதி வடிவாய் ஜொலித்திருப்பதாக பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோ!

    ReplyDelete
  24. குத்துவிளக்கு பற்றிய விளக்கம் தெரிந்துகொள்ளமுடிந்தது நன்றி சகோ!

    ReplyDelete
  25. பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  26. அருமையான படங்களுடன் மஹாலட்சுமின் அனுக்கிரஹம்....

    ReplyDelete
  27. திரும்பத்திரும்ப பார்த்தாலும் சலிக்காத படங்கள்.நன்று.

    ReplyDelete
  28. இந்த திருக்கார்த்திகை திருநாளில் மறுபடியும் மறுபடியும் உங்கள் தளத்திற்கு வந்து வீட்டில் எல்லோரும் பார்த்தார்கள். அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள். நன்றி அம்மா!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete
  29. கதை,கவிதை சொல்லும் அழகிய படங்கள்.

    ReplyDelete
  30. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. 1524+11+1=1536 ;)))))

    பக்கம் பக்கமாக வேலை மெனக்கட்டு பன்னிரண்டு பின்னூட்டங்கள் கொடுத்துள்ளதற்கு, ஏதோ எதிர்மரியாதை போல இரண்டே இரண்டு பதில்கள்.

    இருப்பினும் ஏதோ அன்றைக்கு அதுவாவது கிடைத்துள்ளதே ! மகிழ்ச்சி தான். குறையொன்றும் இல்லை தான். மிக்க நன்றி.

    ReplyDelete
  32. ஆஹா, 8th December அன்று அனுக்கிரஹ மஹாலக்ஷ்மியின் பதிவைப் படித்ததில், மாங்கு மாங்குன்னு பின்னூட்டமிட்டதில், மஹாலக்ஷ்மி அம்பாளின் பதில்கள் அனுக்கிரஹமாகக் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    1536+1=1537 ஆக்கும். ஹுக்கும் ! ;)

    ReplyDelete