Wednesday, August 29, 2012

உத்தமத் திருநாள் திருவோணம்



“ஓங்கி உலகளந்த உத்தமன்…’ என்று ஸ்ரீவில்லிபுத்தூரின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளான ஆண்டாள், வாமனரைப் போற்றுகிறாள்
“உலகளந்த உம்பர் கோமானே…’அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி…’ என்றும் அவன் மூன்றடி நிலம் கேட்டதால், இவளும்  மொத்தமுள்ள 30 பாடல்களில்,மூன்று பத்தில் மூன்று அடிகளை வைத்து சிறப்பித்திருக்கிறாள்.
பெருமாளின் தசாவதாரத் திருக்கோலங்களில் எல்லா அவதாரங்களும் கத்தியும், ரத்தமும் கொண்டதாக இருக்க, வாமன அவதாரத்தில் மகாபலியை வதம் செய்யாமல், அவளை பாதாள லோகத்துக்கு அனுப்பி ஆட்கொண்டார். 

எந்த சப்தமும் இல்லாமல், தன் பணியை முடித்து விட்டார். 

அதனால், அவர் உத்தமன் என்கிறாள் ஆண்டாள்.

 வாமன அவதாரத்தில் உலகையே அளந்து, “இந்த உலகம் முழுவதும் என்னுடையது!’ என்றான். 
நரசிம்ம அவதாரத்தில் ஆணவம் கொண்டவன் கொல்லப்பட்டான். 
வாமன அவதாரத்தில் ஆணவம் கொண்டவன் ஆட்கொள்ளப் பட்டான்.
இந்த உலக உயிர்களும், “இந்த உலகம் தனக்குரியது!’ என நினைத்து, ஆணவம் கொண்டிருக்கிறது. 
அந்த ஆணவம் நீங்கி, உத்தமனாக வாழ திருவோணத் திருநாளில் அந்த உத்தமனை வணங்குவோம்..
ஆவணி மாதத்தில் திருவோணம் நட்சத்திர நாளில்  வரும் ஓணத்திருவிழா தான், பின்னால் வரும் மற்ற விழாக்களுக்கு எல்லாம் துவக்க விழா!
திரு ஓணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பெரியாழ்வார் திருமொழி!
எல்லா நிலங்களையும் தன்னிடத்தே அளந்த திருவுடைய மாயோன் மாவலியின் பொருட்டும், உலகின் பொருட்டும் மூன்றடி மண் இரந்து பெற்ற இறைவன், இந்தத் திருவோண விண்மீனில் தான் தோன்றினான்! 
இதே திருவோண  விண்மீனில் தான் அத்தனை உலகையும் உயிரையும் அளந்தான் உலகளந்த உத்தமன்! 

திருவடிகளால் அத்தனை படைப்புகளும் தோய்க்கப் பெற்ற நாளும் இதுவே!
மாயோனாம் திருமாலின் தோற்றங்கள் பலவும் இந்தத் திருவோண -பருந்து  -விண்-மீன் நாளிலே தான் நிகழ்வதாக ஐதீகம்...
இன்றும் ஆண்டுக்கொரு முறை மாவலி, தன் நாட்டினையும் மக்களையும், இதே ஓணத்தன்றே பார்க்க வருவதாக  நம்பிக்கை பொருட்டே மலையாள  நாட்டில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது!
File:Onam Pookalam 2011 bangalore.jpgFile:പുക്കളം4.jpgFile:Athachamayam 3.JPG

7 comments:

  1. ”உத்தமத் திருநாள் திருவோணம்.”

    அழகான படங்களுடன்
    அற்புதமான விளக்கங்களுடன்
    அருமையான பதிவு.

    பாராட்டுக்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. ஓணத்துக்கு அசாதாரணமாக அதிகப் பதிவுகள்.!

    ReplyDelete
  3. அசத்தலான படங்கள்!

    ReplyDelete
  4. ஆஹா! பூக்கள் மீது 2 பூக்கள். பூக்கோலத்தை விட அழகு.

    ReplyDelete
  5. பொன் ஓணம் வாழ்த்துக்கள்! பதிவின் முடிவில் கல்கி அவதாரத்தை எதிர்பார்த்து பொங்கு மாங்கடல் பொங்குவது போல் உள்ளது!

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வு... விளக்கங்கள் அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  7. ஆஆஆஆஆ சொல்லி வேலையில்லை படங்களும் பதிவும்.. சூப்பரோஒ சூப்பர். அதிலும் அந்த முதலாவது குழந்தைப்படம்... தாமரைப்பூவில் தவழும் குழந்தைகளை நினைவுபடுத்துது.

    ReplyDelete