Saturday, April 6, 2013

ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள்..


அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி.

.ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத் துவங்கி, ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்வது வழக்கம் .... 
ஸ்ரீ ராமரின் காவியம் படிப்பது, ராமரின் பெருமை களை பிறர் சொல்லக் கேட்பது போன்றவை நமக்கு சிறந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.

ஸ்ரீராமன் பிறந்த புனித திருநாளை ராம நவமியாகக் கொண்டாடுகிறோம். ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. 
கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது. 
அஷ்டமியும், நவமியும் கலந்த தினத்தில் தான் பார்வதி அன்னை அவதாரம் செய்தாள். 

எனவே, தேவியின் பக்தர்கள் தேவி பூஜை செய்துவிட்டு, நிறைவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை நடத்துகின்றனர்.
ஸ்ரீராம நவமி, வட மாநிலங்களில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது..

தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங் களோடு ராம நவமி சிறப்பாக கொண்டாடப் படுகிறத

Inline image 1Inline image 1
Inline image 2
Inline image 3





11 comments:

  1. விளக்கம் . படங்கள் அருமை

    ReplyDelete
  2. அற்புதமான படங்களுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  3. மிக அருமை. ஸ்ரீராம ஜனனம் மீண்டும் நிகழட்டும்.
    வேறு யார் நம் ஊரைக் காப்பாற்றுவார்கள்.
    படங்கள் கண்ணில் ஒத்த்க் கொள்ளலம் போல இருக்கிறது.
    மிக நன்றி.

    ReplyDelete
  4. ஸ்ரீ ராம நவமி கொண்டாட்டங்கள் பற்றிய அழகான பதிவு.

    திறக்கப்பட்டுள்ள படங்கள் எல்லாமே அழகாக உள்ளன.

    படம் 7, படம் 8, படம் 9 மற்றும் படம் 11 ஆகிய் நான்கும் திறக்கப்படவில்லை.

    விளக்கங்கள் யாவும் மிகவும் ‘அ ழு த் த மா க வே’ உள்ளன.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ooooo 871 ooooo

    ReplyDelete
  5. Sambavaami yuge yuge

    தர்ம சம்ஸ்தானபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

    அப்படின்னு பகவானே சொல்லியிருக்காரே

    வல்லி நரசிம்மன் அம்மா அதனாலெ நம்பிக்கையுடன் இருப்போம்.

    ஸ்ரீ ராம நவமி அன்று

    ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
    ரகுனாதாய நாதாய சீதாயா பதயே நமஹ.

    என்று சொல்வோம். பஜிப்போம் ராமனை.

    ராஜேஸ்வரி செய்த புண்ணியம்
    நமக்கெல்லாம் ஸ்ரீ ராமன் கடாக்ஷம் தருகிறார்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்கள் பற்றி விரிவாக அழகிய படங்களுடன் அருமையாக சொன்னீர்கள்.
    சில படங்கள் எனக்கு தெரியவில்லை.

    ReplyDelete
  7. ஸ்ரீராம நவமியின் சிறப்பதனை மிக அழகாக படங்களும் பதிவும் விளக்கிற்று.
    அருமை. படங்கள் அற்புதமாக இருக்கின்றன.

    அழகிய பதிவு. பகிர்தலுக்கு நன்றிகள் சோதரி!

    ReplyDelete
  8. ராம ராம என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
    கம்பராமாயணக் காட்சியும், பாடலும் அருமை.
    ஸ்ரீராமன் கருணை புரிவாராக.

    ReplyDelete
  9. ஸ்ரீ ராமநவமி பற்றிய நல்ல பகிர்வு... படங்கள் அனைத்தும் அருமை.... தொடரட்டும் உங்கள் சேவை.... நன்றி அம்மா....

    ReplyDelete
  10. Nice pictures dear.
    Let the Gods blessings be with us ever.
    viji

    ReplyDelete
  11. மிக நல்ல பதிவு. சுமார் 4 அல்வது 5 படங்கள் திறக்கவில்லை. மற்றையவை மிக அருமை. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete