Tuesday, April 9, 2013

ஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்கிரா தேவி





 " ஓம் ஷம் பஷ ஜ்வாலாஜிஹ்வே கராளதம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கிரா ஷம் ஹ்ரீம் ஹிம்பட் "

- பிரத்யங்கரா தேவி மூல மந்திரம்..

குழுமணி அக்ரஹாரத்தில் எல்லோரும் இன்புற்றிருக்க அருளும் திருக்கோவிலின் பெரிய வாயிற்படி. நிலைக்கு மேலே இரண்டு யானைகள் புடைசூழ ஸ்ரீ கஜலட்சுமி திருஉருவம். 
விக்னங்கள் தீர சாந்தஸ்வரூபியாய் வீற்றிருக்கும்  ஸ்ரீ வலம்புரி விநாயகரின் பின்புறம் ஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்கிரா தேவின் நேர் பார்வையில் இருபத்தைந்து துவாரங்கள்.

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மறு உரு! 


பத்து பிறவிகளில் செய்த பாவங்கள் நீக்கப்பட்டு புனிதராக தாய் அருள்பார்வை உதவுகிறது. 

அடுத்து பதினைந்து துவாரங்கள் மாதத்தில் இரண்டு பட்சங்கள். 


ஒவ்வொரு பட்சத்திருக்கும் உரிய பதினைந்து நாட்களில் ஸ்ரீ அம்பாளை தரிசிப்பவர்கள், அம்பாளின் பரிபூரண அருளைப் பெற்று, இவ்வுலக வாழ்வில் தேவையான தனம், தானியம், கல்வி, நல்மனம், நோயற்ற உடல், போன்ற பதினாறு பேறுகளை பெருபவர் என்பது .விளக்கும் விதமான இருபத்தைந்து துவாரங்கள் அமைந்துள்ளன..

கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாய் இருந்து, தன்னிடம் வந்து பணிந்து வேண்டுவோருக்கு நல்லன எல்லாம் தந்து மகிழ்பவர் 'பிரத்யங்கிரா தேவி.  அபரிதமான சக்தி கொண்டவள். 


எல்லா இடத்திலிருந்து ஆட்சி புரிபவள். முக்காலத்திலும் அருள்புரிபவள்.

இவள் திருவடிகளைப் பற்றி "தாயே 'பிரத்யங்கிரா தேவி, நீயே கதி என்று ஆழ்ந்த பக்திடனும் தூயமதுடனும் சரணடைவோருக்குச் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்குபவள்.


இவள் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், முதியவர், இளையவர், ஆண், பெண் என்ற பேதம் பாராதவள்.
தன்னைத் தஞ்சமடைந்தவர்க்குத் தட்டாமல் உதவிடும் தயாபரி.


இந்த இருபத்தைந்து துவாரங்கள் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களின் மறு உரு இதன் வழியே வருகிறவர்களை பார்க்கிறாள் ஸ்ரீ ஜய மங்கள மஹாப் பிரத்யங்கிரா தேவி

கலைநயமிக்க மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஜய மங்கள மஹாப் பிரத்யங்கிரா தேவி.  பெயரிலேயே 'ஜெயம்' இருக்கின்றது. - தரிசிக்க வருகிறவர்களின் எண்ணங்கள் எல்லாமே ஜெயம்தான். 'மங்களம்' அவள் அடுத்த பெயரின் அடுத்த சொல். வருகின்ற பக்தர்களின் இல்லங்களில் மங்களம் நிறையும். மஹாப் பிரத்யங்கிரா தேவி சக்தி இவள்.

அன்னையின் வலதுபுறமும், இடதுபுறமும் ஜெயா, விஜயா என்ற இரு சக்திகள் நின்று அமைதிப்படுத்துகின்றனர்.

 ஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்கிரா தேவி யை சரணடைந்து சகலவரம் பெற்றுச் செல்லுங்கள் என்று ஜெயா, விஜயா கூறுவது மனதில் புரியும்..

 பிரம்மாண்டமான திருவாசி. சுடர்விடும் தீப வரிசை ஆஜானுபாகுவான
ஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்கிரா தேவியின் திருஉருவம்.
 காணக் கண்கோடி வேண்டும்.

ஸ்ரீ சரபேஸ்வரரின் இரண்டு இறக்கைகளில் ஒன்றாகத் தோன்றியவள் இவள்.

சௌம்யமான அழகும் கோர உருவமும் நமக்குள் அன்பையும், பாசத்தையும், அன்யோன்யத்தையும், மனதெம்பையும், மனத் தெளிவையும் ஊட்டுகின்றன.

கம்பீரமான விஸ்வரூபம். சிரசின் மேல்புறம் நிழற்குடையாய் ஆதிசேஷன். அடியவர்களுக்கு வாரி வழங்கிட நான்கு திருக்கரங்கள்.

கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம், தவழ்கின்றன. கூப்பிட்டவுடன் ஓடிவரத் தயாராய் உள்ள பாசமிகு நின்ற உருவம். சீறிப்பாந்து, அடியவர்க்கு உதவ ஏறிச் செல்ல சிம்ம வாகனம். பில்லி, சூன்யம், பெரும்பகை, போக்கிட திரிசூலம்.

என் பக்தன் இவன், இவனிடம் வராதே" என்று எதிரிகளை எச்சரிக்க டமருகம்.

'என் பக்தர்களைத் துன்பப்படுத்தியவர்களின் கதி, என்று காட்டிட கபாலம். பாசத்தோடு அரவணைக்க பாசம். 
  வடதிசை நோக்கிய அம்பாளின் அருட்கடாக்ஷம் ... 

அவளுடைய மூன்று பக்கங்களிலும் ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ ஜயமங்களா, ஸ்ரீ வாக்தேவி ஆகியோர் நின்ற திருக்கோலத்தில் அருள்கின்றனர் ...

பிரத்யங்கிரஸ், அங்கிரஸ் என்ற இரண்டு முனிவர்கள்  ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு உரிய மந்திரங்கள் உருவாக்கியவர்கள்.

அதனாலதான் இந்த இரு முனிவர்களின் பெயர்களையே தனக்கு 'பிரத்யங்கிரா' என்று நாமமாகத் தரித்துப் பெருமைபடுத்துகிறாள்

திருக்கோவிலை வலம் வரும்போது சீதாபிராட்டியால் என்றும் சிரஞ்சீவியாய் இருந்து உன்னை நாடி வருவோருக்கு நல்லருள் தருக என்று ஆசிபெற்ற
ஸ்ரீ ஆஞ்சநேயர். இருவர் அருட்காட்சி அருள்கின்றனர்.

முதலில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், அடுத்து ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர்.

திருக்கோவிலில் வலம் வந்தால் புத்துணர்வு. நெகிழ்வு புரிதல் குணம், நம்பிக்கை ஒளி தோன்றுவதை உணரலாம்...

   அமாவாசை நன்னாளில் காலையில் ஸ்ரீ அம்பாளுக்கு அபிஷேகம், மாலையில் ஸ்ரீ பிரத்யங்கிரா ஹோமம் நடைபெறுகிறது.
திருச்சி நகரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் 
குழுமணி ஆலயம் அமைந்திருக்கிறது ..

விஷேச நாட்களில் முத்தங்கி சேவை, தங்க தங்க கசத்துடன்
ஸ்ரீ அம்பாள் தரிசனம் தருகிறாள்


நிறைந்த நன்றிகள் http://www.kulumanisriprithiyangaradevi.com/mantra.html


19 comments:


  1. MOST RESPECTED MADAM,

    VERY GOOD MORNING !

    இன்றைய தங்களின் வெற்றிகரமான பதிவு, இந்த 2013ம் ஆண்டின் 100வது பதிவு ஆகும். ;)))))

    என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>> மீண்டும் வருவேன் >>>>>

    ReplyDelete
  2. ஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்கிரா தேவிக்கு
    என் அன்பான வந்தனங்கள்..

    "ஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்கிரா தேவி"
    பற்றி மிக அருமையான தகவல்களைத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள்

    தங்களின் கடுமையான உழைப்புக்கு தலை வணங்குகிறென். ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  3. //குறையெல்லாம் தீர்ந்திட குழுமணிக்கு வாருங்கள் ::

    பிரத்தியங்கிரா தேவியவள்
    பொற்பதாம் தான்பணிந்து
    திருமுன்னே நின்று
    திடமாகப் பிரார்த்தித்தால்
    வந்த வினையும் வரபோகும் வல்வினையும்
    நொந்தே அழிந்துவிடும் !
    சுகந்தமிகு சந்தனம்போல்
    சுகத்தோடு வாழவைப்பாள் !//

    அழகான பாடல் இணைப்பு நறுமணம் உள்ள சந்தனத்துடன் மகிழ்வளிக்கிறது. கமகமக்கிறது. ;)

    >>>>>

    ReplyDelete
  4. //குழுமணி அக்ரஹாரத்தில் எல்லோரும் இன்புற்றிருக்க அருளும் திருக்கோவிலின் பெரிய வாயிற்படி. நிலைக்கு மேலே இரண்டு யானைகள் புடைசூழ ஸ்ரீ கஜலட்சுமி திருஉருவம்.

    விக்னங்கள் தீர சாந்தஸ்வரூபியாய் வீற்றிருக்கும் ஸ்ரீ வலம்புரி விநாயகரின் பின்புறம் ஸ்ரீ ஜய மங்கள மஹா பிரத்யங்கிரா தேவின் நேர் பார்வையில் இருபத்தைந்து துவாரங்கள். . //

    துவாரங்கள் ஒவ்வொன்றையும் பற்றி அற்புதமாக விளக்கியுள்ளது, தங்களின் தனிச்சிறப்பு ;)))))

    ஸ்பெஷ்ல் பாராட்டுக்கள்.

    >>>>>>

    ReplyDelete
  5. //இவள் திருவடிகளைப் பற்றி "தாயே 'பிரத்யங்கிரா தேவி, நீயே கதி என்று ஆழ்ந்த பக்திடனும் தூயமதுடனும் சரணடைவோருக்குச் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்குபவள்.//

    தாங்கள் தினமும் வாரி வாரி வழங்கும் அற்புதமான பதிவுகள் போலல்லவா இருக்கிறது இந்தச் செய்தியும்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

    சாதாரணமானவர்களான என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் எப்போதும் நீங்களே கதியாக்கும். ;)

    //என் பக்தன் இவன், இவனிடம் வராதே" என்று எதிரிகளை எச்சரிக்க டமருகம்//

    ;))))))

    >>>>>

    ReplyDelete
  6. //அவளுடைய மூன்று பக்கங்களிலும் ஸ்ரீ மகாலெட்சுமி,
    ஸ்ரீ ஜயமங்களா, ஸ்ரீ வாக்தேவி ஆகியோர் நின்ற திருக்கோலத்தில் அருள்கின்றனர் ...//

    அவர்கள் நின்ற கோலத்தில் அருளினாலும் சரி, அமர்ந்த கோலத்தில் அருளினாலும் சரி ஏழைபாழைகளான எங்களை நீங்கள் தினமும் ஒவ்வொரு கோயிலாகக்காட்டி குழுமணிக்குப் போ, குற்றாலம் போ, கும்பகோணம் போ என்றால் அதெல்லாம் எங்களுக்குச் சரிப்பட்டு வராதுங்க.

    உங்கள் பதிவே கோயில், அதில் எழுதும் / படம் காட்டும் நீங்களே அம்பாள் என நினைத்து மகிழ்கிறோம். ;)))))

    >>>>>

    ReplyDelete
  7. இன்றைய பதிவும் மிகவும் அற்புதமானத் தகவல்களுடன், அழகழகான படங்களுடன் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

    என் அன்பான பாராட்டுக்கள்.

    மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 874 ooooo

    ReplyDelete
  8. பிரத்தியங்கரா தேவி பற்றிய விரிவான தகவல்கள் தெரிந்து கொண்டோம். குழுமணி எங்கிருக்கிறது?

    ReplyDelete
  9. To Mr. T.N.MURALIDHARAN

    திருச்சி டவுன் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் குழுமணி என்ற கிராமம் உள்ளது. [திருச்சி உறையூரிலிருந்து 1 கிலோ மீட்டரில் உள்ளது.]

    ஆனால் இவர்கள் சொல்லும் கோயில் அந்தக்குழுமணியில் தான் உள்ளதா என எனக்குத்தெரியாது.

    ReplyDelete
  10. VGK ஐயா கொடுத்த தகவல்களும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. தகவல்கள் அருமை , தேவியின் ஆசி பேர ஆராதிப்போம் .

    ReplyDelete
  12. ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியைப்பற்றி விரிவாக அறிந்துகொண்டோம்.
    அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி!

    ReplyDelete
  13. தெரியாத பல தகவல்கள் தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  14. I dontknow about this temple.
    Sure next time i must visit here. Thanks for the post.
    viji

    ReplyDelete
  15. படங்கள் எல்லாம் அருமை தேவியின் பெருமையும் அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  16. அனைத்து படங்களும் அருமை அம்மா... தங்கள் மூலம் தேவியைப்பற்றி அறிந்துகொண்டேன்....நன்றி அம்மா....

    ReplyDelete
  17. பிரத்யங்கிரா தேவியின் தர்சனம் கிடைக்கப்பெற்றோம்.

    ரி.வி ஒளிபரப்பில் பார்த்த நினைவு அதுவேறு இதுவேறா தெரியவில்லை.

    ReplyDelete
  18. திருச்சி உறையூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் குழுமணி கிராமம் + அக்ரஹாரம் பற்றி எனக்குத்தெரிந்த மேலும் சில தகவல்கள்:

    நான் ஆராய்ச்சி செய்த வரையில், இந்தக் குழுமணிக்காரர்கள் பலருக்கும் காது அவ்வளவாகக் கேட்பது இல்லை. சிலருக்கு அவ்வளவும் கேட்பதில்லை.

    பெரும்பாலும் எல்லோருமே ’மணல் கயிறு’ படத்தில் வரும் [S.V. சேகரின் மாமனார்] தாத்தா போலத்தான் இருக்கிறார்கள்.

    ஏதாவது நாம் சொன்னால், தமது வலது கைவிரல்களால், காதை வளைத்துப்பிடித்துக்கொண்டு நம் வாய் அருகே காதைக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

    எனக்கு இந்த குழுமணியைப் பூர்வீக்மாகக் கொண்டு திருச்சி டவுனில் தற்சமயம் வாழ்ந்து வரும் ஒரு 20-25 பேர்களைத் தெரியும்.

    அவர்கள் அனைவரிடமும் உள்ள ஒரே ஒற்றுமை இந்த காது ரிப்பேர் விஷயம் மட்டும் தான். மற்றபடி எல்லோருமே மிகவும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete