Sunday, January 5, 2014

மகப்பேறு அருளும் மகத்தான முகப்பேர் சந்தான ஸ்ரீனிவாச பெருமாள்



Mogappair - Temple Rajagopuram
 சென்னை முகப்பேரில் குடிகொண்டு மகப்பேறு அருளும் மகத்தான சந்தான சீனிவாசப்பெருமாள் சொர்க்கவாசல் திறப்புவிழா வைபவத்தை 
     இந்த லிங்கில்    கண்டு களிக்கலாமே...

Sorgavasal Mogappair West Santhana Srinivasa perumal temple 


இனிய புத்தாண்டு விழா சென்னை முகப்பேரில் அருளும் 
ஸ்ரீசந்தான சீனிவாசப்பெருமாள் கோவிலில் மன நிறைவாக அமைந்தது ...

மார்கழிமாத அமாவாசை திதியும் , அனுமன் ஜெயந்தியும் இணைந்து விழாக்கோலம் கொண்டிருந்தது ஆலயம் ..!
[sssp.bmp]
 பெருமாள் பாதம்  , ஸ்ரீ சர்வசக்தி கணபதிசன்னதி, ஸ்ரீ வீரபக்த அஞ்சநேயர் சன்னதியில் உற்சவராக அருளும்  வீரஹஸ்த ஆஞ்சநேயர் ,  
 ஸ்ரீ சந்தான லஷ்மி தயார் சன்னதி ஸ்ரீ ஆண்டாள் சன்னதி 
ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவ பெருமாள்ஸ்ரீ ஐயப்பன் , நவக்கிரஹங்கள் என அனைத்து சன்னதிகளும் தங்கக்கவசத்தால் ஜாஜ்வல்யமாக ஜொலி ஜொலித்துக்கொண்டு இருந்தது.! துலாபாரமும் உண்டு ..!

குழந்தைகளுக்கு   ஒருவருடம் நிறைவடைந்து ,முடி இறக்கியபிறகே  ஜடாரி சார்த்தல் வேண்டும் என்று அர்ச்சகர் தெரிவித்தார்..!
image
சந்தான கோபால பூஜை : மகப்பேற்றிற்காக விஷேசமாக தம்பதி சமேதராக வந்து சந்தான கோபால பூஜையில் கலந்து கொண்டு குழந்தை செல்வம் பெறுகின்றனர். 

பௌர்ணமி திருவோணம், சுவாதி ரேவதி புனர்பூசம்,ஆகிய நாட்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள்  ஏதேனும் ஒரு தினத்தில் தம்பதி சமேதராக வந்து நம்பிக்கையோடு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ..! 

தம்பதியர் இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து ஸ்ரீ சந்தான கோபால ஸ்வாமியை இருவர் மடியிலும் எழுந்தருளச் செய்யப்படும்.

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீ சுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்

என்கிற சந்தான கோபாலமந்திரத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதில் தியானம் செய்ய வேண்டும் ..!


சந்தான கோபால பூஜை செய்வதற்கு புத்ர பக்க்யம் வேண்டும் தம்பதிகள் மட்டுமே நேரில் வர வேண்டும். 
அவர்கள் சார்பாக தம்பதிகளின் பெற்றோர்களோ உறவினர்களோ சந்தானபூஜை செய்வத்ற்கு அனுமதி இல்லை.
குழந்தைப்பேறு தரும் சந்தான கோபால கிருஷ்ண மந்திரம்
ஸ்ரீ சந்தான லஷ்மி தாயார்அதி அற்புதமாக தங்கத்தாலும் வைரத்தாலும் மின்னிக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அழகே உருவாக அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்..!

ஸ்ரீ  சந்தன லஷ்மிதாயார் வெள்ளிகிழமைதோறும் சிறப்பு அபிஷேகம் 
காலை 10:00 மணிக்கு கண்டருள்கிறார்..!

 புஷ்பலங்காரம் கவச அலங்காரம், முத்தங்கி அலங்காரம் 
ஆகியவை செய்யப்படுகின்றன

ஆடிமாதம் முன்றாம் வெள்ளிகிழமை 
பெண்கள் மட்டும் பங்கேற்கும் விளக்கு பூஜை நடத்தப்படுகிறது. 

வரலட்சுமி நோன்பு, கேதாரி விரத நோன்பு ஆகிய 
நாட்கள் கலசம் நிறுத்தப்பட்டு அர்ச்சனை  செய்யப்படுகிறது 

108 தங்க புஷ்பகாசுகளை கொண்டு 
சொர்ண புஷ்பஅஷ்டோத்திர அர்ச்சனை செய்யப்படுகிறது. 

ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில்  மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 
5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசேஷ அலங்காரம் அர்ச்சனையும் செய்யப்படுகிறது..!. 
மார்கழி மாதம் அதிகாலையில் பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட வெண்பொங்கல் பிரசாதம்  விநியோகம் செய்யப்படுகிறது. 

மூலவர் சீனிவாச பெருமாள்  ஒன்பதரை அடி உயரத்தில் திருப்பதி வெங்கடாசலபதியை பிரத்யட்சமாக தரிசித்த உணர்வைத்தந்து கம்பீரமாக திருவருள் பொழிகிறார்..!

திருப்பதி திருவேங்கடமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமானே முகப்பேரில் ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாளாக  
அருள் பாலித்து கொண்டிருப்பதாக நம்பிக்கை  
எனவே  தென் திருப்பதி என்றே அழைக்கப்படுகிறது..!

சனிக்கிழமைகளில் விசேஷமாக புஷ்பலங்காரம், தங்க கவச அலங்காரம், சொர்ண அலங்காரம் ஆகிய அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன..!

வெள்ளிக்கிழமை மட்டுமே மூலவர் அபிஷேகம் காலை 9.00 மணி 
அளவில் நடைபெறுகிறது.  அபிஷேகத்தின் முடிவில் நிஜபாத தரிசனம் நடைபெறும்.


*  தொடர்புடைய பதிவு
http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_3.html
 ஸ்ரீ சந்தான லஷ்மி ஸ்ரீனிவாச பெருமாள் 

  


கோயிலில் உண்டியல் எந்த சன்னதியிலும் கிடையாது.

இலவச பிரசாதம் வழங்க நன்கொடைகள்பெற்றுக் கொண்டு 
ரசீது வழங்கப்படுகிறது...   

 தங்கள் பிறந்த நாள், திருமணநாள், பெரியோர்களின் நினைவுநாள் போன்ற நாட்களில் இலவச பிரசாதம் விநியோகம் செய்ய ஆலய அலுவலகத்தில் குறைந்தபட்சம் ரூபாய் நூறு முதல் தங்கள் வசதிகேற்ப பணம் கட்டி இலவச பிரசாத விநியோகம் செய்ய உதவுகின்றனர்.

நைவேத்திய பிரசாதமும் அமர்ந்து சாப்பிட , 
கைகழுவ வசதிகளும் சிறப்பாக இருக்கிறது ..!

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் வைபவம் - தடைபடும் திருமணங்கள் விரைவில் நடைபெறவும், நல்ல வரன் அமையவும்  நடைபெறுகிறது.  

ஞாயிறு முதல் வெள்ளி வரை காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆலய நடை திரிந்திருக்கும்.  சனிக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 வரயிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஆலய நடை திறந்திருக்கும்.‌  

புரட்டாசி சனிக்கிழமைகள் , வைகுண்ட ஏகாதசி , ஆங்கில , தமிழ் புத்தாண்டு நாட்களில் அனைத்து சன்னதிகள் மற்றும் தெய்வங்களும் விசேஷமாக அலங்காரம் செய்வதோடு ஆலய  மண்டபம்  முழுவதும் மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு சொர்க்கலோகம் போல் ஆலயம் திகழ்கிறது ..!

சனிக்கிழமை தோறும் காலை 5:30 மணிக்கு சுப்ரபாதம் பூஜையும் , 
கோ பூஜையும் மந்திர புஷ்பங்களோடு கூடிய ஆராதனை நடைபெறும்.
சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 5:45 மணிக்கு கோ-பூஜை நடைபெறும்.

ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் சன்னதியில்  சங்கட ஹர சதுர்த்தி  அன்று அபிஷேகம்,ஹோமம் அலங்காரம்,சிறப்பாக நடத்தப்படுகின்றது. 
 விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது 
திங்கள் முதல் வெள்ளி வரை காலையில் அபிஷேகம் செய்யலாம். 
தங்க கவச அலங்காரம், சொர்ண அலங்காரம், 
சந்தன காப்பு, புஷ்பலங்காரம் ஆகியவை செய்யப்படுகின்றது.

வீரபக்த ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், செய்யப்படுகிறது. வியாழன் மாலை வடைமாலை சார்த்தப்படுகிறது. சனிகிழமைகளில் வெண்ணெய் காப்பு செய்யப்படுகிறது.  அனுமன் ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி ஆகியயை சிறப்பாக கொண்டாடப்படுகிறது 
ஸ்ரீ ஐயப்பன் சன்னதியில்மகர ஜோதி தரிசன நாளன்று வரை தினசரி ஐயப்பனுக்கு விசேஷ புஷ்பலங்காரமும் நெய்அபிஷேகமும், அரவணை பாயச நைவேத்யமும் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. 

ஸ்ரீ நவக்கிரஹ சன்னதியில் சனிக்கிழமைதோறும் தங்க கலச அலங்காரம் மற்றம் புஷ்பலங்காரம் செய்யப்படுகிறது.  குரு பெயர்ச்சி , சனிப் பெயர்ச்சி ஆகியவை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

 ஆலயவாசலில் துளசியும் வண்ண மலர்களும் கருத்தைக்கவர்ந்தன .. சங்குபுஷபம் விஷேசமாக காணப்பட்டது ..

ராஜ கோபுரத்தில் நரசிம்மரின் நின்ற அமர்ந்த திருக்கோலங்களிலும் , லஷ்மி நரசிம்மராகவும் , தாமரையில் அமர்ந்தும்  பல்வேறு நிலைகளில் நரசிம்மரின் சுதை வடிவ சிற்பங்கள் மனம் கவர்ந்தன..!

 ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் பப்ளிக் சாரிடபுள் டிரஸ்ட் என்ற அமைப்பு ஆலய பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தோடு சமூக நல திட்டங்களிலும் ஆர்வம் கொண்டு பல சேவைகளை ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் , மக்களுக்கும் , நலிந்தோர்களுக்கும் செய்து வருகிறது.

சென்னை அண்ணாநகரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் வழியில் ஆலயம் உள்ளது. 
ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் ஆலயம்
வெள்ளாளர் தெரு, முகப்பேர், சென்னை-600 03

image

30 comments:

  1. அதிகாலையில் பெருமாள் தரிசனம்... சிறப்பான கோவில் தகவல்கள்.. படங்கள் என அனைத்தும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  2. அழகிய படங்கள், அருமையான விவரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      அழகிய கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  3. சீனிவாச பெருமாள் அருமை உணர்ந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  4. அழகான படங்களுடன் - மகப்பேறு அருளும் பெருமாளைக் குறித்த தகவல்கள் அருமை!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  5. i have not so far gone to this temple.
    Madam, would u kindly inform where it is exactly situate at Mugaipper chennai?
    I would like to visit here today.
    pl.reply at your earliest
    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      சந்தான பெருமாள் ஆலயம் சென்னை அண்ணாநகரிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் வழியில் வெள்ளாளர் தெருவில் அமைந்திருக்கிறது ..

      ஆட்டோ ,கால்டாக்ஸிகாரர்களிடம் வழி விசாரித்து சுலபமாக செல்லலாம் ..!
      அருமையான தரிசனம் கிடைக்க வாழ்த்துகள்..!

      Delete
  6. வணக்கம்
    அம்மா.

    அனைத்தும் சிறப்பாக உள்ளது படங்கள் சிறப்பு... வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      சிறப்ப்பான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  7. சிறப்பான படங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      சிறப்பான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  8. தலைப்புத்தேர்வு மிக அருமை ;)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      அருமையான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      Delete
  9. படங்கள் அத்தனையும் கண்டு களித்தேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். பெருமாள் என்றும் எனக்குத் துணையிருப்பார் என்ற நம்பிக்கையை அளித்தது. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
      கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      கண்களில் நிறைந்த பெருமாள்
      கண்களை கவனமாக காக்கட்டும் ..!

      Delete
  10. சிறப்பான படங்கள். அனைத்து தகவல்களும் நன்று....

    ReplyDelete
  11. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!
    அழகான கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  12. இந்தக் கோவிலுக்கு நான் சென்றிருக்கிறேன். இந்தக் கோவிலில் என்னைக் கவர்ந்த செய்திகளைஆலயம் சென்றதனாலய பயன் என்று எழுதி இருக்கிறேன்.
    gmbat1649.blogspot.in/2011/04/blog-post_30.html ஒரே கோவில் different reactions.! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வ்ணக்கம் இராஜராஜேஸ்வரி.. அழகான படங்களும் விரிவான விவரங்களுடன் ஸ்ரீசந்தான சீனிவாசன் கோவில் பகிர்வு அருமை.
    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  14. மகப்பே றளிக்கும் முகப்பேர் உறைவான்
    இகத்தார்க்கு ஏற்ற வரம்!

    அனைத்தும் அருமை!
    நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  15. ஸ்ரீனிவாச பெருமாளின் மகிமையை தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  16. முகப்பேரில் இருக்கும் பெருமாளைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  17. சிறப்பான கோயில் பற்றியதொரு அருமையான பகிர்வு அம்மா...
    சென்னை முகப்பேரில் குடியிருந்தபோது தொடர்ந்து சென்ற கோவில்...
    என் மகள் போகவேண்டும் என அடம்பிடிக்கும் கோயில்...
    அருமையான படங்களுடன்... அருமையான பகிர்வு அம்மா...

    ReplyDelete
  18. எங்களது சம்பந்தி வீடு இருப்பது முகப்பேர்தான். அடுத்தமுறை அங்கு செல்லும்போது அவசியம் முகப்பேர் பெருமாள் கோவில் செல்லுகிறேன். விரிவான தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  19. Happy to know that you got to visit such a special temple on the new years eve.. :)

    ReplyDelete
  20. அருமையான தகவல் மற்றும் படங்கள்.
    யானை மேல் அமர்ந்திருக்கும் குழந்தை படத்தின் இனைப்பு அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. யானை மீதேறி சவாரி செய்பவர், வாரிசின் வாரிசாகத்தான் இருக்க முடியும் என, நான் உடனடியாகவே யூகித்து விட்டேன்.

      இருப்பினும் அன்றொருநாள் சமயபுரம் மாரியம்மன் குளக்கரையில் [என் யூகம் தப்பி] என்னை சற்றே வழுக்கி விட்டது, தங்களுக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

      அதனால் மட்டுமே நான் ஏதும் அவசரப்பட்டுக்கூறாமல் கம்முன்னு இருந்துட்டேன்.

      இப்போ எப்படியோ என் சந்தேகம் தெளிவானதில் எனக்கும் மகிழ்ச்சியே. வாழ்த்துகள். ;)))))

      Delete