Wednesday, September 3, 2014

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்ஆவணித் திருவிழா


சுசீந்தரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக   சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் தனித்தனி சந்நதிகள் திகழும் திருக்கோவிலாகும்..!
 சிவபெருமானுக்கு சித்திரை, மாசி, மார்கழி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். 
விஷ்ணு சுவாமிக்கு ஆவணி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடக்கும். 

இரு சுவாமி சந்நதிகளின் நேர் எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்பட்டு விழாக்கள் நடக்கும். 
திருவேங்கட விண்ணவரம் பெருமாள் (விஷ்ணு) சுவாமியின் நேர் எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்பட்டு ஆவணித் திருவிழா துவங்கி விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் விஷ்ணு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரதவீதி உலா வரும் நிகழ்ச்சியும், சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்... 





சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழாவின் ஒன்பதாம் நாள் விழாவில்  மாலை  இந்திரன் தேரில் விஷ்ணு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தம்பதி சமேதராய் காட்சியளித்து கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதிகள் வழியாக பவனி வந்த தேர் அதன் நிலையை அடையும் 
அடுத்தநாள்  ஆராட்டு விழா நடக்கிறது. 



6 comments:

  1. சிறப்பான பகிர்வு. வடக்கிடம், தெற்கிடம் அர்ச்சகர்கள் பற்றிய குறிப்பும் அருமை.

    என்ன ஒரு அழகான கோவில்...

    ReplyDelete
  2. பலமுறை சென்று ஆலய தரிசனம் தரிசித்து வந்தாலும், மீண்டும் ஒருமுறை திருவிழாக்களில் கலந்து கொண்டு இறையை தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. சபரிமலை செல்லும் போதெல்லாம் தரிசனம் செய்த தலம்.
    இன்றைய பதிவினில் காணும் போது மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. அழகான ஆலயங்களும் தரிசனங்களும். மிக்க நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. ஆலய தரிசனம் அருமையாக உள்ளது.

    ReplyDelete