Sunday, February 20, 2011

தலை எழுத்தை மாற்றும் பிரம்மா

திருப்பட்டூர்


திருச்சிக்கு அருகிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் திருத்தலத்திற்குச் சென்றிருந்தோம். சிறுகனூர் என்று வழி கேட்க வேண்டுமாம்.

ராஜ கோபுரத்திலிருந்து முன்னூறு அடி தூரத்தில் ஏழு நிலைகளைக் கடந்து சூரிய வெளிச்சம் கிடைக்கும் அதிசய அமைப்பில், தஞ்சைக் கோவிலுக்கு முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.


ஏழு வண்ணங்களாலான, ஏழுகுதிரைகளை ஒற்றைச் சக்கரத் தேரில் பூட்டி, மேரு மலையை வலமாய் வந்து தன் அமிர்த கிரணங்களால் பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரரைத் தரிசிப்பதாக ஐதீகம்.

பங்குனி மாதம் மூன்று நாட்கள் ஏழு நிமிடங்கள் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படரும் அற்புதம் நிகழும்.


ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும், ஏழாம் இடமான களஸ்திர ஸ்தானம் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பரிகாரத்தலமாகும்.

ஐந்து தலைகளைப் பெற்றிருந்த படைப்புக் கடவுளான பிரம்மா தன் ஆணவத்தால் சிவனால் ஒருதலை கிள்ளப்பட்டு, படைக்கும் சக்தியை இழந்தார்.

நான்முகனான பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் கேட்டார். துவாதசலிங்க வடிவில் பன்னிரண்டு பட்டைகளுடன் திருப்பட்டூரில் தன்னை வழிபட்டு படைப்புத் தொழிலைத் திரும்ப அடைய அருளினார் ஈசன்.

தன் தீய தலை எழுத்தை மாற்றிக் கொள்ளும் விதி உடையவர்கள் மட்டுமே பிரம்மனின் பார்வையில் படமுடியுமாம்.

“குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு;
குருர் தேவோ மகேச்வர;
குரு சாக்ஷ?த் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ”

இந்த குரு மந்திரப்படி பிரம்ம புரீஸ்வரர் கோஷ்டத்தில் உள்ள தட்சினாமூர்த்தி, அருகில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன் பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் வரிசையில் தரிசிக்கும் அமைப்பு மிகவும் விஷேமானது. 

குரு மந்திரப்படி பிரம்மாவே முதல் குரு.
குரு பகவானுக்கு அதிதேவதையும் பிரம்மா என்பதால் குரு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது.


ஸ்தலத்திற்கான பிரம்ம காயத்திரி :-

“வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்பாய தீமஹி
தன்நோ பிரம்மப் பிரசோதயாத்”

குருவாரமான வியாழக் கிழமை விஷேச பூஜைகள் உண்டு. அனைத்து தெய்வங்களுக்கும் மஞ்சள் வஸ்திரம் மட்டுமே சார்த்தப் படுகிறது. திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குரு பெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம்.

மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும் முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்" எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்" என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.

17 comments:

  1. இதிலும் படம் வரும் பின்னேவாங்க.!!

    இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்.!!

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. திருப்பட்டூர் பற்றி நானும் கேள்விப் பட்டு இருக்கிறேன். சென்றதில்லை!

    ReplyDelete
  3. தோழி,
    இந்த பதிவில் தாங்கள் குரு பூசை செய்த தலமாக கருதப்படும் என்று எண்ணுகிறேன். நவக்ரக பரிகாரதலமாக கருதலாம் என்று எண்ணுகிறேன்.மிக்க நன்றி

    ReplyDelete
  4. குருப்பரிகாரத்தலத்திற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.

    நான் இந்த கோயிலுக்கு நான்கு முறை சென்று வழிபட்டு வந்தேன்.மிகவும் அற்புதமான திருத்தலம்.
    பிரமா கோயிலிலும் மூலவர் சிவனே,வலதுபுறம் தனி சன்னதி பிரமாவுக்கு உள்ளது.பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியும்,அவர் இக்கோயிலில் வலதுபுற பிரகாரத்தில் தியானம் செய்த இடத்தில தியான லிங்கமும் உள்ளது.
    மிகவும் சக்தி வாய்ந்த கோயில்.
    பிரம்மா கோயிலுக்கு பின்புறமே அரை கிலோ மீட்டர் தொலைவில் காசி விஸ்வநாதர் கோயில் ஒன்றும் உள்ளது.மிகவும் சிறப்புவாய்ந்த சிவபெருமான் ஆலயம்.வற்றாதா திருக்குளம் ஒன்றும் உள்ளது.கோயில் ஆயிரம் வருடத்திற்கு மேற்பட்ட பழம்பெருமை வாய்ந்த கோயில்.
    வியாழன், ஞாயிறு தினங்களும் கூடம் அலைமூதும். அனைவருமே நேரம் கிடைக்கையில் அவசியம் ஒருமுறை இந்த இரு கோயில்களையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

    ReplyDelete
  6. மிக அருமை.
    நாம் தமிழனா பிறந்ததற்கு வரம்.
    வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி.

    ReplyDelete
  7. சிறுகனூர் அருகே உள்ள திருபட்டூர் பிரும்மபுரீஸ்வரையும் பார்க்க வந்துள்ளீர்களா?

    அந்த பிரும்மாவும் என்னிடம் தங்களின் வருகையைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்து விட்டாரே? ;(

    ReplyDelete
  8. மன அமைதி தரும் ஆலயம்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. திருப்பட்டூர் பற்றி கேள்விப்பட்டு அங்குள்ள ஆலயங்களுக்கு சென்று வந்தேன். திருப்பட்டூர் பற்றிய பல தகவல்களை இப்பதிவின்மூலம் தெரிந்து கொண்டேன், நன்றி

    ReplyDelete
  11. திருப்பட்டூர் கோயில் தொலைபேசி எண் தெரிந்தவர் பதிவிடவும். நன்றி

    ReplyDelete
  12. திருப்பட்டூர் கோயில் தொலைபேசி எண் தெரிந்தவர் பதிவிடவும். நன்றி

    ReplyDelete
  13. Its very good.. I was just thinking about my visit to ythis temple with my parents.. It is believed that Pathanjali's Jeevasamadhi is there in this temple. There is a Dhyana Mandabam adjacent tp Brahma sannidhi. It is believed Pathanjali's Jeeva samadhi is that place.

    Just 2 kms away from this temple, there is another temple called Kasi Viswanathar temple. Vyakrapaathar's Jeeva samadhi is in that temple. They also have a Brindhavanam for Vyakarapathar ( like we normally see in Raghavendhra temple).
    There is a pond which is opposite to Kaasi Viswanathar Shrine. Even during very drought times, this pond never dried up. On full moon days, Moons light will fall on this pond water and get reflected on Kaasi Viswanathar's sannidhi. Such a lovely temple

    ReplyDelete
  14. சகல தோஷங்களும் விலகி நல்வாழ்வு அமையும். இந்த கோவிலில் முதலில் ஈசன்,பின்பு பிரம்மன்,அம்பாள் என்று வணங்கிவிட்டு 36 நெய் தீபங்கள் ஏற்றி 9 முறை ஆலயத்தை வலம் வந்தால் சகல வித தோஷங்களும் விலகி விடும் என்று நம்பபடுகிறது. ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலில் வழிபட்டால் விசேஷ பலன்கள் உண்டாகும் என்று நம்பபடுகிறது .

    ReplyDelete