எந்திரன் படம் ஆஸ்திரேலியாவில் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் திரையிட்டிருந்தார்கள்.
அறிவிப்பு வந்த உடனேயே முன்பதிவு செய்து மகன் அழைத்துச்சென்றார்.
சூப்பர் ஸ்டார் படம் முதல் ஷோ, முதல் காட்சி நம்பமுடியாத ஆசரியம்!
வந்திருந்த மக்களைக் கவனித்தேன். உலக நாடுகள் அனைத்திலிருந்தும் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கண்டு வியப்படைந்தேன்.
பல்கலைக்கழக விரிவுரை அரங்கில் காட்சி என்றார்கள். கோவையின் கே.ஜி. தியேட்டர் அளவிற்கு இருந்தது விரிவுரை அரங்கு.
படம் ஆரம்பித்தது.
கைத்தட்டலும், விசிலொலியும் நான் இருந்தது அயல்நாட்டுப் பல்கல்லைக்கழகக் கட்டிடம் என்பதை மறக்கச்செய்து, இந்தியத்திரை அரங்கை நினைவூட்டியது.
படம் எங்களுக்கு மிகப்பிடித்தது.
ஜப்பானிய மாணவர்கள் நிறையப்பேர் கைதட்டி விசிலடித்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
இடைவேளையில் மங்களூரிலிருந்து வந்திருந்த பெண்ணைக் கண்டுபேசிக் கொண்டிருந்தேன்.
கேரளாவிலிருந்து வந்து விஸ்காம் படித்துக் கொண்ட்டிருந்த மாணவர்களுக்கு ரஜினியைப் பிடித்திருந்ததாம். ஐஸ்வர்யாராயைவிட நமீதாவே மிகப்பிடிக்குமாம். அதனாலென்ன? கடைசிக் காட்சி முழுவதும் கிராபிக்ஸ் தானே. நீங்களும் விஸ்காம் மாணவர்கள் ஆயிற்றே! முழுவதும் நமீதாவாக மாற்றி ரசித்துக் கொள்ளுங்கள், ஐஸ்வர்யாராயாகவும் மாற்றிக் கொள்ளலாமே! நல்ல ஐடியா முயற்சித்து பார்க்கிறோம்! என்று விடைபெற்றார்கள்.
அங்கே இரண்டு ருத்ராட்ச் மரங்கள் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. லெமூரியாக் கண்டத்திலிருந்து பிரிந்தவையே இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் என்று படித்திருக்கிறேன்.
நேபாளத்தில், பசுபதிநாதர் கோவிலில் ஸ்தல விருட்சமாக ருத்ராட்ச மரங்களைத் தரிசித்திருக்கிறேன்.
அங்கே ருத்ராபிஷேகம் செய்து அளித்த ருத்ராட்ச மாலையை இன்றும் வணங்கி வருகிறோமே! குன்னூரில் பொட்டானிக்கல் கார்டனில் இரண்டு ருத்ராட்ச மரங்கள் இருக்கின்றன.
கொஞ்சம் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டேன். கீழே கிடப்பதெல்லாம் ஏன் எடுக்கிறாய்? என்றார் மகன்.
கீழே கிடக்கிறது என்பதால் இது ஒன்றும் அற்பப் பொருள் ஆகாது. மண்கூட கீழேதான் கிடக்கிறது. அதன் மதிப்பு என்ன? உனக்குத்தான் கூகிள் தெரியுமே? போய் ருத்ராட்ஷ் என்று கேட்டு, என்ன வருகிறது என்று பதில் சொல் என்றேன்.
கீழே கிடக்கிறது என்பதால் இது ஒன்றும் அற்பப் பொருள் ஆகாது. மண்கூட கீழேதான் கிடக்கிறது. அதன் மதிப்பு என்ன? உனக்குத்தான் கூகிள் தெரியுமே? போய் ருத்ராட்ஷ் என்று கேட்டு, என்ன வருகிறது என்று பதில் சொல் என்றேன்.
ஆம், அம்மா ருத்திராட்சை புனிதமானதுதான் என்று ஒப்புக்கொண்டார்.
Super. Nice Info
ReplyDeleteஇரண்டு செய்திகளையும் படத்துடன்
ReplyDeleteமிக அழகாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறீர்கள்
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்
நமீதா எந்திரனில் நடிச்சிருந்தா சூப்பரா இருந்திருக்குமே.
ReplyDeleteருத்ராட்ச மரங்களின் தரிசன்ம் அருமை.
ReplyDeleteஎந்திரனின் இரண்டாம் பகுதியைவிட முதல் பகுதி தான் நல்ல நகைச்சுவை விருந்து.
ReplyDeleteஐஸுக்கு பதில் யாரை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம், கிராபிக்ஸ் தானே என்று நீங்கள் அவர்களுக்குச் சொன்ன ஆலோசனை, நல்ல அறிபூர்வமானது. இன்றைய இளைஞர்களால் எதுவும் செய்யமுடியுமே இந்த கணினி யுகத்தில்....;))))
எங்கெங்கு சென்றாலும், எதைப்பார்த்தாலும், அதில் தங்களின் தனிச்சிறப்பான ஓர் ஆன்மிகப்பார்வை, செயல், பக்தி சிரத்தை முதலியன எனக்கு மிகவும் பிடித்துள்ளது, ருத்ராக்ஷம் மூலம்.
//கீழே கிடக்கிறது என்பதால் இது ஒன்றும் அற்பப்பொருள் ஆகாது. மண் கூட கீழேதான் கிடக்கிறது//
அம்பாள் வாக்கு போலவே இதுவும்! ;))))).
சபாஷ், மேடம்.
============================
[மற்றவை நாளை தொடரும்]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅருமையான ஆக்கப்பூர்வமான கருத்துரைகள் அனைத்திற்கும் ம்னம் நிரைந்த இனிய நன்றிகள் ஐயா..
92+2+1=95
ReplyDelete