என் ஆஸ்திரேலிய வீடு |
ஜெட்லாக்கினால் இரவு இரண்டு மணிக்கு உறக்கம் கலைந்து, நீலவானத்தில் மின்னும் சின்ன நட்சத்திரங்கள், பொன்னும் மணியும் வைரமுமாக இறைந்து,வானமென்னும் பந்தலில் வண்ணத்தீபக் காட்சியாக் விண்ணில் கண்ணைச் சிமிட்டிச் சிரித்துக் கொண்ட்டிருந்தன.
பூக்கள்கோடி வானிலே பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தது.
விந்தை வானம் சிந்தை கொள்ளைகொண்டது.
பார்த்துக்கொண்டிருந்த நொடியிலேயே இந்திரஜாலம் போல் ஆங்காங்கே பிரகாசமான கருநீலமேகங்கள் இடைவெளியின்றி பூத்தன.
சில நிமிடங்களில் கண்ணைப்பறிக்கும் ஆரஞ்சுவண்ண சிறிய மேகத்துளிகள் பஞ்சு போல் நீலமேகங்களிடையே ஆங்காங்கே ஒட்டிக் கொண்டன.
காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி!
அந்தமேகங்களிடையே நிலவு ஒன்று உதித்தது.
வழக்கமான நிலவைவிட சற்று சிறிதாகவும், களங்கமற்றும் காட்சியளித்துவிட்டு, சட்டென்று மேகக்கூட்டத்தின் இடையில் மறைந்தது.
உடனே குரு கிரகம பூமிக்கு அருகில் சிலநாட்கள் வரும் என்றும், அதை நிலவைப்போல் காணலாம் என்றும் படித்தது ஞாபகம் வந்தது.
கிருஷ்ணன் கருநீல மேகவண்ணன் தானே!
அவன் இதழ்கள் சிவப்புதானே!!
இப்போது ஒவ்வொரு கருநீலவட்டத்துடன் கூடிய ஆரஞ்சு மேகமும் கண்ணனின் முகமாகக் கண்டேன்!
எது நன்றாக இருந்தது ??
ReplyDeleteஎது நன்றாக இல்லை ??
மன்னிக்கவும்,
ReplyDeleteஎல்லாமே நன்றாக இருக்கிறது...
வான்ம் மட்டுமல்ல வர்ண்னையும் வசப்படுத்திவிட்டது. வாழ்த்துக்கள்.
ReplyDelete//இப்போது ஒவ்வொரு கருநீலவட்டத்துடன் கூடிய ஆரஞ்சு மேகமும் கண்ணனின் முகமாகக் கண்டேன்//
ReplyDeleteஅழகான அசத்தலான கற்பனை.
கற்பனை உலகம் என்றுமே அழகானது.
58+2+1=61
ReplyDelete