Saturday, February 26, 2011

மரக்கன்று

கொட்டிலுக்கு பெண்ணும்,
தொட்டிலுக்கு ஆணும்
வேணும் என்று சொல்வார்கள்.

அக்காலத்தில் மாட்டுக் கொட்டிலில் பசு மாடு கன்று போட்டால் அது பெண்ணாக இருந்தால் அது பால் கொடுத்து, மீண்டும் மீண்டும் கன்று போட்டு கொட்டில் பெருகும் என்று கொட்டிலில் பெண் பிறப்பதையே விரும்புவர்.
அதுவே வீட்டுத் தொட்டிலாக இருந்தால் ஆண்குழந்தை பிறந்தால் அந்த குலம், கோத்திரத்தின் பெயரை ஏற்று, வீட்டிற்கு குலமகளைத் திருமணம் செய்து குலம் வளர்த்து பெயரெடுப்பான்.
பெண்ணானால், திருமணம் முடிந்த பின் புகுந்தவீட்டின் குலம், கோத்திரத்தையே ஏற்பாள் என்பது மரபு.
 தென்னை, வாழை மரங்களை வீட்டின் குழந்தைகளைப் போன்றே பேணுவர்.
அவற்றைத் தென்னங்கன்று, வாழைக்கன்று என்றே அழைப்போம்.
பரிகாரப் பூஜைகளுக்கு வாழையின் இடப்பாகக்கன்றை பெண்ணாகப் பாவித்து திருமாங்கல்யம் அணிவிப்பர்.
திருப்பைஞ்சீலி தலத்தில் ஏழு சப்த கன்னிகளும் வாழை வடிவாகி, வாழைவன நாதராம் சிவனுக்கு நிழல் தருகின்றனர்.
கோவையில் எட்டு மரங்களை வெட்டி வீழ்த்தி அமிலமும் வேர்ப்பகுதியில் ஊற்றியவருக்கு பத்து நாளில் நாற்பது மரக்கன்றுகளை நடுமாறு தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.
அக்காலத்தில் மன்னராட்சியில் இந்த மாதிரி தண்டனைகள் வழங்கப்பட்டதாலேயே இந்தியா முழுக்க சாலை ஓரங்களில் மரம் நடுவது சாத்தியமாகியிருக்கிறது.
தவறு செய்தவர்களை சிறையில் அரசாங்கச் செலவில் ,பொதுமக்களின் வரிப்பணத்தை விரயப்படுத்தி உணவு, காவல் என்று செலவினங்கள் தவிர்க்கப் பட்டதற்கு நன்றி கூறியே ஆகவேண்டும்.
சில வருடங்களுக்கு வேலியிட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியையும் அவருக்கு வழங்கவேண்டும்.
சிறைக் கைதிகளை சீனஅரசு சிறந்த முறையில் தொழிலுக்குப் பயன் படுத்துவதாலேயே உலகெங்கும் குறைந்த விலையில் பொருள்களை வழங்க் முடிகிறது.

11 comments:

  1. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
    வாழ்த்துக்கள்....

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_26.html

    ReplyDelete
  2. அருமையான பலவிஷயங்களைத்தெரிந்து கொள்ள முடிகிரது. நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பதிவு ....

    ReplyDelete
  4. மரக்கன்று போலவே மிகவும் உபயோகமான உறுப்படியான பயனளிக்கும் [தீர்வு சொல்லும்]
    பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. தோழி ,
    தங்களின் பதிவு முற்றிலும் உண்மை

    --

    Murugappan kugan
    http://kathirkamamblogspotcom.blogspot.com

    ReplyDelete
  6. நல்ல பகிர்வுங்க .. நல்லதகவல் நன்றி

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  8. அருமையான பதிவு .. நிறைவான பதிவு
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. நல்ல பகிர்வுங்க .. நல்லதகவல் நன்றி

    ReplyDelete