Thursday, February 10, 2011

பிரபஞ்ச சுற்றுலாவிற்கு கடவுச்சீட்டு


பிரிஸ்பேன் நகரின் கோளரங்கத்திற்கு சென்றிருந்தோம். அறிவியல் வினாவிடை நிகழ்ச்சி ஒரு கம்பியூட்டர் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் மிகப் பயனளிக்கும். பலர் அமர்ந்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர்.

அனைத்து கிரகங்கள், கோள்கள், விண்மீன்களின் மாடல்கள் காட்சியளித்தன.

“பிரபஞ்சத்தின் கடவுச்சீட்டு” (Passport to the Universe) என்ற காட்சிக்கு அனுமதிச் சீட்டு வழங்கிய பெண் ‘காட்சி முடியும் வரை அமைதி காக்க வேண்டும், இருமவோ தும்மவோ கூடாது, மிகச்சிறு குழந்தைகள் அமைதி காக்க முடியாதவர்கள் காட்சியைத் தவிற்கவும்’னு அறிவுறுத்தினார்.

வட்ட வடிவ கோளரங்கத்தில் மேற்கூரையில் காட்சி தொடங்கியது. எளிய ஆங்கிலத்தில் நிறுத்தி நிதானமாக, தெள்ளத் தெளிவாக பிரபல ஆங்கில நடிகரான டாம் ஹான்க்ஸ் (Tom Hanks) குரலில், தலைக்கு மேல் ஆகாயத்தின் தோற்றத்தில் காட்டிய காட்சியினை விளக்கிய அருமையான நிகழ்ச்சி அது. மொத்தம் 40 நிமிடம் பிரமிப்பூட்டிய நிகழ்ச்சி.

பிரபஞ்சத்தின் தோற்றம், நட்சத்திர மண்டலங்கள், ராசி மண்டலங்கள், கிரகணங்கள் ஏற்படும் விதம் எல்லாம் அற்புதமாகக் காட்சிப்படுத்தினர்.

காட்சிமுடிந்து வெளியில் வானியல் புகைப்படங்களைப் பார்வையிட்டோம். அங்கு சமீபத்தில் பராகுவே நாட்டில் நடைபெற்ற சர்வதேச வானியல் நிபுணர்கள் மாநாட்டில் புளூட்டோ தன் கிரக அந்தஸ்த்தை இழ்ந்ததைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
1930ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ கிரகம் பற்றி ஆரம்பம் முதலே சர்ச்சைதானாம்.

75 நாடுகளிலிருந்து 2500 விஞ்ஞானிகள் குழுவினர் இணைந்து தனிச்சுற்று வட்ட பாதையின்றி நெப்டியூனின் கிரக வளையத்துக்குள் வருவதால், தானாகவே தன் கிரக அந்தஸ்திலிருந்து புளூட்டோ வெளியேறி விட்டதாக அறிவித்துவிட்டனர்.
இனிமேல் புளூட்டோ குட்டி கிரகம் என்ற பிரிவில் சேர்க்கப்படும்.

சூரியனை சுற்றிவரும் எண்ணற்ற விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை சூரிய குடும்பத்தின் சிறிய அமைப்புகளாகக் கருதப்படும்.

இனி மொத்த கிரகங்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய எட்டு மட்டுமே என்பது தான் இதனால் அறியப்பட வேண்டிய செய்தி.




7 comments:

  1. ஆரம்பம் முதலே எங்களுக்கும் சேர்த்துப் பார்ப்பது
    என்கிற எண்ணதுடனே நீங்கள் இருக்கிறீர்கள்
    என்பது தெளிவாகப் புரிகிறது.படங்களும் பதிவும் அருமை
    வாழ்த்துக்கள் எனச் சொல்லுவதைவிட
    நன்றி எனச் சொல்லுதல் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  2. "பிரபஞ்ச சுற்றுலாவிற்கு கடவுச்சீட்டு"
    பாஸ்போர்ட்டுடன் சுற்றி வந்த திருப்தி.

    ReplyDelete
  3. படங்கள் யாவும் இந்தப்பதிவினில் இப்போது தான் பார்த்தேன்.

    இந்தத்தங்களின் பதிவை நான் எப்படி இதுவரை பார்க்காமல் விட்டு விட்டேன்? என்று தெரியவில்லை.

    பிப்ரவரியில் பதிவிட்டு உள்ளீர்கள். மார்ச் மாதம் ஒருவர் பின்னூட்டமும் அளித்துள்ளார்.

    என்னுடைய [எலிஸபத் டவர்ஸ்] கதையில் எலி ஓடும்போது தான் நாம் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.

    ஆனால் அதற்கு முன்பே நீங்கள் எனக்கு அவ்வப்போது பின்னூட்டம் தந்து கொண்டுதான் இருந்தீர்கள். நான் தான் உங்கள் வலைப்பூப்பக்கம் வராமலேயே இருந்து வந்தேன்.

    [அதுவும் நான் உங்களுக்கு follower ஆகியும் நீங்கள் எனக்கு follower ஆகாமல் என்னைப்பாடாய்ப் படுத்தி சண்டைபோடும் எலிகளாக இருந்து பிறகு சமாதானத்திற்கு வந்தோம். உங்களுக்கும் நினைவிருக்கலாம்.]

    இது தாங்கள் அதற்கு முன்பு எழுதிய பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    நமக்குள் எழுத்துலகில் நட்பு மலர்ந்து Just 6 மாதங்களே தான் ஆகின்றன என்பது மிகவும் வியப்பாக உள்ளது.

    ஆறேழு ஜன்மமாக உள்ள ஆத்மார்த்தமான நட்புபோல அது ஆலவிருக்ஷமாக வளர்ந்துள்ளதே!
    மிகவும் ஆச்சர்யமாக.

    [ஆலவிருக்ஷத்தின் விழுதுகளாக அன்புடன் எவ்வளவு பின்னூட்டங்கள், எவ்வளவு மெயில்கள், சிற்சில chat messages, அன்பான கருத்துப்பகிர்வுகள், ஆலோசனைகள்]

    ஒரு நாள் உங்கள் பதிவையோ, பின்னூட்டத்திற்கான பதிலையோ காணாவிட்டால் அல்லது காணமுடியாவிட்டால் எனக்கு ஏற்படும் தவிப்பு முதலியனவற்றை எண்ணிப் பார்க்கிறேன். வியப்பு அதிகரிக்கிறது.

    நேரில் இதுவரை தங்களைப் பார்க்காவிட்டாலும், இனிமேலும் கடைசிவரை பார்க்க முடியாவிட்டாலும், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

    கற்பனையில் உங்களை எப்போதும் காண்கிறேன். ஏதோ உங்கள் எழுத்துக்களால், பதிவுகளால், பதில்களால், என் பிரச்சனைகளுக்கு உங்களின் பிரார்த்தனைகளால், ஒரு சொக்குப்பொடி போட்டு விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    அந்தக்கற்பனையான மகிழ்ச்சியே எனக்குப் போதும். நம் நட்பு இதுபோலவே தொடரட்டும்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  4. காணொளியை இப்போது தான் கண்டு மகிழ்ந்தேன்.

    PASSPORT TO UNIVERSE பெற்றுள்ள தங்களுக்குப் பாராட்டுக்கள்.

    தங்கள் பதிவுகளின் மூலமே இந்தப்பிரபஞ்சத்தின் அழகுகளை நாங்களும் இன்று காணமுடிகிறது.

    ReplyDelete