Friday, February 11, 2011

வண்ணக் கிளிகள் !!

மிக அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்றிருந்தேன்.


பச்சைப் பசேலென்று பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் வளர்ந்திருந்தவை புற்களல்ல...

மஞ்சள் கரிசலாங் கண்ணியும்,







வெந்தயக்கீரைச் செடிகளும் தான்.

மஞ்சள் வண்ண சின்னஞ்சிறு பூக்களுடன் விரிந்து பரந்து பரவி செழித்திருந்தன.

கோவையில் மருத்துவக் கழிவுநீரில் கீரைகள் வளர்வதாகக் கேள்வி பட்டதிலிருந்து கீரை சாப்பிடுவதை நிறுத்தியிருந்த நான், மிகத் தூய்மையாக வளர்ந்திருந்த அந்தக் கீரைச் செடி ஒன்றைப் பறித்து சுவைத்துப் பார்த்தேன். சிறு இனிப்புச்சுவையுடன், சக்கை ஏதுமின்றி வாயில் கரைந்ததை வியப்புடன் உணர்ந்தேன்.

சிறு சிறு விழுதுகளுடன் கூடிய மரம்.


கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று
குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் கையினை இழுப்பது போல்
கிளைதொறும் தாவிச் சென்று
உச்சியை போய்
தன் வால் பார்த்து அலறும்
இலக்கியக் காட்சி கண்முன் விரிந்தது.

பூங்காவை சுற்றிலும் கம்பி வேலி.
வேலியைச் சுற்றி வீடுகள்.
வீடுகளில் துவைத்த துணிகளை காயவைத்துக் கொண்டும்,
வீடுகளைச் சுத்தம் செய்து கொண்டும்
அவரவர் வேலையைப் பார்த்தபடி மனிதர்கள்.

கிரிக்கெட் விளையாடும், கருப்பரின, வெள்ளையரின, சீன ஜப்பானிய முகங்களுடன் சிறுவர்கள்.

சிறுவர் விளயாட்டுத் திடலில் யாருமில்லை. கொட்டகையில் பார்பிக்யூ  அடுப்பு! பூர்வீக குடிமக்கள் (Aborigine) பராமரிப்பில் அரசாங்கம் அமைத்திருக்கிறதாக அறிப்புப் பலகை கூறியது.
 
வலுவான ஊஞ்சலில் அமர்ந்தேன். மரத்திலிருந்த மூன்று கிளிக் குஞ்சுகளையும், தள்ளிவிட்டு, பறக்கக் கற்றுத்தந்த படி அழகான கிளிஜோடி.

பழம் ஒன்றை மூன்று குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொடுத்தபடி இருந்தன.

வாயில் உணவூட்டும் பருவத்தை தாண்டியவை போலும்! கண்களைக் கவரும் பல வண்ணத்தில், தலையில் கொண்டையுடன் மயிலை நினைவூட்டும் சாயலில், வண்ணத்துப் பூச்சியின் வனப்புடன், சிறகசைத்துப் பறந்து சென்றது கிளிக்குடும்பம்.
 
ஆங்கில் ‘Y’ வடிவில் பறவைக்கூட்டங்கள் வானில் பறந்தபடி இருந்தது. இவ்வடிவில் பறப்பதால் நாற்பது சதவிகித அளவு சக்தி மிச்சப்படுகிறதாம்.

வண்ணப்பறவைகளைக் கண்டு நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா என்று பாரதி அனுபவித்தே பாடி இருப்பார் போலும்.

12 comments:

  1. தோழி,
    தங்களின் வலைபதிவு ,படிக்க படிக்க ,தேனினும் இனிய தமிழோசை ,என் மனதை கிறங்க அடிக்கிறது.
    தங்களின் வலைப்பக்கம் தினமும் வருவேன்.மிக மிக நன்றி, தோழி.

    முருகப்பன் குகன்

    ReplyDelete
  2. Anbu Amma,

    Vanna Kiligal katturai karuthai kavarum vannam irunthathu.

    Itham idam engay irukirathu?

    Neril sendru thangal kandu kalithathai naanum sendru kaana aavalaaga irukirathu.

    Endrum anbudan
    Lakshmi

    ReplyDelete
  3. @ lakshmi dhevi said...
    This Place is next to petrol station.Please go & enjoy.
    Thanks for comments.

    ReplyDelete
  4. @ Elangai Tamilan
    வருகைக்கு நன்றி. மீண்டும் மீண்டும் படிப்பதற்கும் நன்றி

    ReplyDelete
  5. பதிலைப் பார்த்த சந்தோஷத்தில் படங்கள் சேர்த்து அழகு செய்துளேன். உற்சாகப்படுத்தியதற்கு நன்றிகள் பல. படங்களைப்பார்த்து கருத்துகளைப் பகிரவும். அன்புடன்

    ReplyDelete
  6. தங்களின் வலைபதிவு ,படிக்க படிக்க ,தேனினும் இனிய தமிழோசை ,என் மனதை கிறங்க அடிக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பூங்கா, பசுமையான கீரைச்செடிகள், பறவை ஜோடி, பறவைக்குஞ்சுகள்,
    சிறுவர்கள் விளையாட்டு, இலக்கியக் காட்சி வர்ணனை, அவரவர் வேலைகளில் அவரவர் மூழ்கியது என அசத்தலான பல விளக்கங்கள்.

    வலுவான? ஊஞ்சலில் அமர்ந்தது சிரிப்போ சிரிப்பு. ஆசாமியும் நல்ல வலுவானவர் தானே! ;)))))

    படித்ததும் வண்ணப்பறவைகளாய் மனதில் மகிழ்ச்சி கொண்டோம்.

    ReplyDelete
  8. கோவையிலா இத்தனை அழகான காட்சிகள். கண்ணுக்கு இனிமை ராஜராஜேஸ்வரி.மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..

      கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்..

      ஆஸ்திரேலியா சென்றபோது கண்டுகளித்த காட்சிகள்...

      Delete