எத்தனை மழைப் பொழிவு இருந்தாலும், மழைவிட்ட அடுத்த நிமிடம் உலர்ந்துவிடும் சாலைகள். சாலையோ, பாலமோ அமைத்தால், அடுத்த தொன்னூற்றொன்பது வருடங்களுக்கு பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லமல் தரமாக, குறிப்பிட்ட காலத்திற்கு குறந்தபட்சம் ஒருமாதம் முன்பாவது திறப்புவிழா காண்பது, அத்திட்டத்திற்கான முழு செலவை ஒதுக்கிவிடுவது, ஒதுக்கப்பட்ட தொகை மீதப்பட்டது, முன்கூட்டியே முடித்த காரணத்தால் என்று பெருமிதப்படும் அரசு!
முதல் நாள் பெய்த மழையால் கழுவி விடப்பட்டு, அடுத்த நாள் சூரிய வெப்பத்தால் காய்ந்து, மென்மையாக வீசிய காற்றால் தூய்மைப்பட்டு மின்னிக் கொண்டிருந்த சாலையில் முதன்முதலாகக் கால் வைத்தேன்.
அத்தனை தூய்மையான சாலையை கர்ம சிரத்தையாக, தூசி உறிஞ்சியால் தூய்மை படுத்திக் கொண்டிருந்தார்கள். முன்னதாக மின் சாதனத்தால் மரங்களை அழகாக வடிவமாக சீரமைத்து, வெட்டிய மரக்கிளைகளை வேனில் இருந்த இயந்திரத்தால் பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துச் சென்றிருந்தனர். துகள்களை என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். மரங்களைச் சுற்றிலும், வெற்று நிலங்களிலும் தூவி விடுவோம். மிகச்சிறந்த எருவாகும். தவிர காற்றினால் மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்கும். தெருகளில் குப்பையும் சேராது. பல்முகப்பயனளிக்கும் என்று சிரித்தவாறு நட்புடன் பதிலளித்தார்கள்.
உச்சியில் ‘ப’ வடிவில் வெட்டப்பட்ட கிளைகளுடன் செழிப்பாக, மின் கம்பிகளுக்கு, மரத்தையே வெட்டி விடாமல் சீரான இடைவெளியில் கவாத்து செய்து பராமரித்து, அந்த மரங்களின் நடுவில் மின் கம்பிகளுக்கு இடைவெளி கொடுத்து வளரப் பழகிக்கொண்ட மாதிரி சாலையின் இருபுறங்களிலும் சீரான மரங்கள்.
சாக்சையும் ஷுவையும் கழற்றிவிட்டு தரையில் பாதம் பதித்தேன். இதமான வெப்பத்தில், தூய்மையான, வழுவழுப்பான சாலை மனம் கவர்ந்தது.
அந்தப்பகுதி சுற்றி வலமாக நடந்தேன். ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் சூழந்திருந்தது கேரளத்தை நினைவூட்டியது.
இரண்டு வீடுகளுக்கு நடுவிலிருந்த வெற்று நிலத்தில் கற்பூரவள்ளிச் செடிகள் பூத்துக்குலுங்கி மணம் வீசி கொண்டிருந்தன, ஒருஇணுக்கு ஒடித்து வீட்டுத் தோட்டத்தில் வைத்தேன். நன்கு வேர் பிடித்து வளர்தது. வீட்டிற்கு வந்திருந்த வெள்ளைக்காரப் பெண்மணி அந்த செடியைப் பற்றிக் கேட்டார். நம்நாட்டில் குழந்தைகளுக்குச் சளி பிடித்தால் சாறெடுத்துக் கொடுப்போம் என்றேன். பறித்து முகர்ந்து பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்தார். சட்டென்று பழமொழி ஞாபகம் வந்துவிட்டது ‘கழுதை அறியுமா கற்பூரவாசனை’. அப்பென் ‘What? What?’
என்றார். மகர் அம்மா உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார் என்று சமாளித்து விட்டார்.
சென்ற வாரம் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது பச்சைப் பசேலென்று காட்சியளித்த மரம் இன்று செக்கச் சிவப்பாக ஒரு இலை கூட இல்லாமல் அத்தனையும் பூக்களாக, இடைவெளியே இல்லாமல், கொழுந்து விட்டு, தீப்பற்றி எரியும் படிக் காட்சியளித்தது. குருந்தமரக் கொழுந்தைப் பார்த்த குஞ்சுப் பறவைகள் தீப்பற்றி எரிவதாக நினைத்து தாய்ப் பறவையை கூச்சலிட்டு அழைத்த இலக்கியக்காட்சி நினைவுக்கு வந்தது.
வசந்தகாலம் வருகை தந்துவிட்டது போலும்! நீலம், மஞ்சள், ஆரஞ்சு, வயலட், மெஜந்தா, இன்னும் வானவில்லை நினைவூட்டும் பல வண்ண மலர்கள். வகைக்கொன்றாகப் பறித்துக் கொண்டு நடந்து வந்தேன்.
Super. Nice Info
ReplyDeleteஉங்கள் உயிரோட்டமுள்ள எழுத்தின் மூலம்
ReplyDeleteமனதில் அனைத்தையும் கற்பனை
செய்து கொள்ள முடிகிறது
ஆயினும் படத்துடன் பதிவு
இருக்குமாயின் இன்னும் சிறப்பாக
இருந்திருக்குமோ என்கிற ஆதங்கத்தை
தவிர்க்க இயலவில்லை
நல்ல் பதிவு.தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல.தங்கள் அறிவுரைப்படி
ReplyDeleteவிரைவில் படம் இணைக்கப்படும்.
அழகான பதிவை.... அழகை ரசித்து எழுதப்பட்ட பதிவு.
ReplyDelete(பி.கு.) சென்ற பின்னூட்டத்தில் சொல்லியதைத்தான் சொல்கிறேன். படங்கள் சிலவற்றை இணைத்தால், இன்னும் அழகுறும்.
Very interesting... Very very color-full...
ReplyDeletei can feel the colors in your wordings..
அழகான ரசனையுடன்...எழுத்து நடை சூப்பர்....
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ
தொடர்ந்து கலக்குங்க...
அழகான ரசனையுடன்...எழுத்து நடை சூப்பர்....
ReplyDeleteவாழ்த்துக்கள்!
சின்னச்சின்ன விஷயங்களையும் நுனுக்கமாகக் கேட்டறிந்துள்ளீர்கள்.
ReplyDeleteநல்ல ரசனையுடன் ஒரு பதிவாக ஆங்காங்கே நகைச்சுவைத்துளிகளுடன், கழுதையையும் விடாமல் கற்பூரத்தையும் விடாமல், நன்றாகவே எழுதியுள்ளீர்க்ள்.
அம்மா உங்களைப்பாராட்டுகிறார்கள் என்று மகர் சொன்னது சூப்பர்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteசின்னச்சின்ன விஷயங்களையும் நுனுக்கமாகக் கேட்டறிந்துள்ளீர்கள்.
நல்ல ரசனையுடன் ஒரு பதிவாக ஆங்காங்கே நகைச்சுவைத்துளிகளுடன், கழுதையையும் விடாமல் கற்பூரத்தையும் விடாமல், நன்றாகவே எழுதியுள்ளீர்க்ள்.
அம்மா உங்களைப்பாராட்டுகிறார்கள் என்று மகர் சொன்னது சூப்பர்/
நுணுக்கமான கருத்துரைக்கு நன்றி ஐயா..
95+2+1=98
ReplyDelete