ஆஸ்திரேலியாவில் உருளைக் கிழங்குகள் தாம் எத்தனை எத்தனை வகைகள்! சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நிறத்தில் ஒருவகை மிகச் சுவையாக இருக்கிறது. ‘வாஷ்டு பொட்டேடோ’ என்ற பெயரில் மிகத் தூய்மையாக கழுவி பாக்கெட் செய்திருக்கிறார்கள். ரகம் ரகமாக நிறைய வகைகளில், நிறங்களில் உருளைக்கிழங்குகள்!!
வெட்டும்போதே சாறு வடிந்து தாங்கள் உயிர் தன்மையுடன் இருப்பதை பறை சாற்றுகின்றன. அடுப்பில் வைத்த சிறிது நேரத்திலேயே பூவாக வெந்து சாப்பிடத் தயாராகிவிடுகிறது.
என் மகன் சில கிழங்குகளை வெட்டி நீரில் போட்டு வேகவைத்து எடுத்து மசித்து சிறிதளவு பால், வெண்ணை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடக் கொடுத்தார்.
காலை உணவாக முதியோர் விடுதிகளிலும், மருத்துவமனைகளிலும் தரும் சத்தான உணவாம் இது. இதே போல் மஞ்சள் பூசணியையும் பயன்படுத்துவார்களாம். ஆச்சரியமாகத்தான் இருந்தது. நாம் உருளக் கிழங்கு வாய்வு பதார்தம் என்று விலகிவைக்கிறோம். இங்கே முக்கிய உணவு!!
பிரெஞ்ச் பிரை மாட்டுக் கொழுப்பில் ஊற வைத்து தயாரிக்க படுவதால் தான் அவ்வளவு மிருதுவாக இருப்பதாகவும், சைவ உணவாளர்கள் தவிர்க்கும் படியும் கேள்விப்பட்டிருந்தேன்.
ஆனால் கண்கூடாக குறைந்த நேரத்திலேயே மிருதுவாகிவிடும் உருளைக் கிழங்கைப் பார்த்ததும் வியப்பாக இருந்தது. பெரும்பாலான உணவு வகைகளுடனும் உருளை சிப்ஸை சேர்த்துக் கொள்கிறார்கள்.
உருளைக் கிழங்கு எனக்கு பிடித்தமான ஒன்று! ஆனால் ‘பிடித்து’ விடுமோ என்கிற பயமும் உண்டு!!
ReplyDeleteநானும் பயந்தேன். இந்திய உருளை தான் பிடிக்கும். இங்கிருக்கும் கிழங்கு மிகவும் ச்த்து வாய்ந்தது. முதியோர் விடுதிகளில் முக்கிய உணவு. வாய்வு பிடிப்பு வராது என்கிறார்கள்.
ReplyDeleteஅருமையான உருளைக்கிழங்கு. சுவையான பதிவு.
ReplyDeleteஉருளைக்கிழங்கு பொடிமாஸ் போன்ற சுவையான பதிவும் தகவல்களும்.
ReplyDeleteஉ.கி.சிப்ஸ் என்றால் அநேகமாக எல்லோருக்குமே பிடிக்குமே ....
எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
137+2+1=140
ReplyDelete