Thursday, February 17, 2011

பூ மரங்கள் வீசும் சாமரங்கள்கல்லூரி வயதில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் “பாட்டில் பிரஷ் ட்ரீ” என்ற பெயருடன் இருந்த மரமொன்று மிகவும் கவர்ந்தது.

அதன் தாயகம் ஆஸ்திரேலியா என்று இருந்தது. என் தோழிகளிடம் இந்த மரத்தை இதன் தாயகத்தில் போய் பார்க்கனும் சிங்கத்தை அதன் குகையில் போய் பார்ப்பது மாதிரி என்று விளையாட்டாகக் கூறினேன்.

எந்த அஸ்து தேவதை ததாஸ்து சொல்லியதோ ஆஸ்திரேலியா சென்று இந்த மரங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அழகான பச்சை இலைகளுடன், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை எனப் பல்வேறு வண்ணங்களில் வாசனையும், தேனும் நிரம்பி தேன் சிட்டுக்களும், தேனீகளும் பறவையினங்களும் எந்நேரமும் வட்டமிட எழில் கொஞ்ச எல்லா இடங்களிலும் வளர்ந்து களிப்பூட்டிக் கொண்டிருந்தது.

ரோடு டிவைடர்களுக்கு நடுவிலும், இயற்கை வேலியாக வீடுகள், தோட்டங்களைச் சுற்றியும் வளர்த்து அழகையும், பசுமையையும் நிலைநிறுத்துகிறார்கள். வண்ணமயமாய் சிங்காரமாய் சிரிக்கும் மரத்திற்கு ஈடுஇணை ஏதும் சொல்ல முடியாது.

அரளிச் செடிகளை சாலை நடுவில் நட்டு, அதன் பால் கண்களில் தெரிக்கும் அபாயம் இருப்பதைக் கூட உணரமுடியாத நம் ஊரை நினைத்துக் கொண்டேன்.
சாலை ஓரங்களில் மின் கம்பிகள் செல்ல நேர்ந்தால் மரத்தின் நடுவில் தேவையான் அளவு அழகுற வெட்டி அமைத்திருக்கும் பாங்கு சொல்லி மாளாது.போகன் வில்லாச் செடிகளால் பந்தல் போல நடைபாதை அமைத்து
இருக்கிறார்கள். மனம் மயக்கும் எண்ணமுடியாத வண்ணங்களில் பூத்து குளுமையான நிழலுடன், ஆக்சிஜனும் வழங்கிய அந்த எழிலார்ந்த பாதையில் வாக்கிங் சென்றது மறக்கமுடியாத நிகழ்வு.கல், மண், சிமெண்ட், கட்டடத் தொழிலாளர்கள் என்ற செலவு ஏதுமற்ற இயற்கைப் பாதை. தண்ணீரும் அவ்வளவாகத் தேவைப் படாத இந்த மாதிரி இயற்கைப் பாதை நம் ஊருக்கு மிகவும் ஏற்றது.

ம்.. ஊதுற சங்கை ஊதி வைப்போம்.
விடியறப்ப விடியட்டும்!!

21 comments:

 1. நல்ல பதிவு..
  இன்னும் தாங்கள் விவரித்த காட்சியின் புகைப்படங்கள் கொடுந்திருந்தால் நாங்களும் அதை ரசித்திருப்போம்..

  காக்கையும் குருவியும் என் ஜாதி..
  மரமும் கொடியும் என் இனம்..

  ReplyDelete
 2. தங்களுடைய தளம் விரைவில் பிரபலமடைய திரட்டித்தளங்களில் இணையுங்கள்..
  நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவுகளுக்கும் பின்னுட்டம் இடுங்கள்..
  மற்ற பதிவுகளுக்கும் வாக்களியுங்கள்..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. அறிவுரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.விரைவில் படங்கள் இணைக்கப்படும். பார்த்து கருத்தைத் தெரிவியுங்கள் நன்றி. திரட்டித்தளங்களில் இணக்க முடியவில்லை. ஆம் காக்கை குருவி எங்கள் கூட்டம். நீள் கடலும் மலையும் நோக்க நோக்கக் களியாட்டம்!1

  ReplyDelete
 4. // ஊதுற ச்ங்கை ஊதி வைப்போம், விடியறப்ப விடியட்டும்.//

  நல்லா கனவு காணுறீங்க...

  மத்தபடி பதிவு சூப்பர்..

  ReplyDelete
 5. ஆஸ்திரேலியாவுக்கு போய் புகைப்படம் ஒன்றும் எடுக்கவில்லையா.

  ReplyDelete
 6. அழகான பச்சை இலைகளுடன், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்,வெள்ளை எனப் ப்ல்வேறு வண்ணங்களில் வாசனையும், தேனும் நிரம்பி தேன் சிட்டுக்களும், தேனீகளும் பறவையினங்களும் எந்நேரமும் வட்டமிட எழில் கொஞ்ச எல்லா இடங்களிலும் வளர்ந்து களிப்பூட்டிக் கொண்டிருந்தது.


  .....அழகு.... அழகோ அழகு!

  ReplyDelete
 7. http://ih2.redbubble.net/work.2629081.3.flat,550x550,075,f.bottle-brush-tree-blossom.jpg

  ..Is this the one?

  ReplyDelete
 8. @ Chitra said...//
  ஆம்..ஆம் ..அதே பூக்கள் தாம் சாலைகளின் நடுவில் ஓரங்களில் மற்றும் பல இடங்களில் வரவேற்றன.
  நன்றி சித்ரா.

  ReplyDelete
 9. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
  இனி தினமும் வருவேன்.
  ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

  ReplyDelete
 10. ஓட்டும் போட்டுட்டோம்ல்ல.. ஓ ஓட்டு பட்டன் இல்லையா... ---- சரி.
  // Follower -ம் ஆகிடோமில்ல...

  ReplyDelete
 11. தகவல் புதிதுதான்....

  இங்கே (சிங்கப்பூர்) பாட்டில் ட்ரீ என்னும் ஒரு உயர்தர கடல் உணவகம் உள்ளது.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. //திரட்டித்தளங்களில் இணையுங்கள்..//
  Just a request...

  ReplyDelete
 13. இங்கு பூங்காக்களில்தான் bottle-brush இருக்கின்றன.

  ReplyDelete
 14. டைட்டிலும் படங்களும் அருமை.

  ReplyDelete
 15. நாம் சிறு வயதில் எது எதற்கெல்லாம் பாஸிடிவ் ஆக ஆசைப்படுகிறோமோ, அது எல்லாமே நம் வாழ்க்கையில் என்றோ ஒரு நாள் நிச்சயமாக நிறைவேறும்.

  நம்மால் நிறைவேற்ற முடியாதவைகள் ஒருசில இருப்பின் அவை நம் வாரிசுகளால நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

  இந்த அனுபவம் எனக்கும் நிறையவே உண்டு.

  கடைசியில் ஊதிய சங்கொலியும் அருமை.

  நிச்சயமாக வருங்காலம் நல்லகாலமாகவே அமையும் [விடியும்].

  அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ReplyDelete
 16. ;)
  சிவாய நம ஓம்!
  ஓம் நமச்சிவாயா !!

  ReplyDelete