ஆஸ்திரேலியாவில் எனது மகர், பதிவுலக வழக்கப்படி மகன்-மகள் என்று வித்தியாசப்படுத்தக் கூடாதே, அதனால் தான் மகன் இங்கு மகர் என்று மரியாதையாக விளிக்கப்படுகிறார்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
ஆஸ்திரேலியாவில் எனது மகர் தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றவர், காபி தயாரித்துக் கொடுத்தார். அங்கே காபி இயந்திரம் இருந்தது. இதற்கு முன் வேலை பார்த்த இத்தாலிக்காரர் ஒருவர் இத்தாலியில் இருந்துவரும் போது வாங்கிவந்தாராம்.
இயந்திரம் வந்த புதிதில் யாராவது காபி தயாரித்தால் இரண்டு டாலர் அங்கிருக்கும் உண்டியலில் செலுத்திவிட வேண்டுமாம். ஒரு கட்டத்தில் அந்த இயந்திரத்திற்கான தொகை நாளடைவில் கிடைத்துவிட, அன்றிலிருந்து காபி தயாரித்துக் கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியது இல்லையாம். எப்படி எல்லாம் யோசித்திருக்கிறார்கள் பாருங்கள்.
அலுவலகத்திற்குள்ளே குளிர்சாதனப் பெட்டியில் பால் பாட்டில் எப்போதும் வைத்திருப்பார்களாம். கொண்டுசெல்லும் மதிய உணவுப் பாக்கெட்டையும் வைத்துக் கொள்கிறார்கள்.
மதிய உணவை சூடுப்டுத்தி சாப்பிடுவதற்காக நுண்ணலை அடுப்பு (Microwave Oven) ஒன்றும் வைத்திருக்கிறார்கள். ஒரு தட்டில் ஆப்பிள், ஆரஞ்சு, கிவி, வாழைப்பழம் போன்ற பழவகைகள், ரொட்டி வாட்டு மின் கலம் (Bread Toaster) ஒன்றும் இருந்தது. சோபா, டீபாய், பக்கத்திலேயே அலமாரியில் செய்தித்தாள்கள் என்று அழகாக அமைத்திருக்கிறார்கள்.

அறுபது டிகிரி சென்டிகிரேடு உஷ்ணம் தான இருக்கவேண்டுமாம் மிகச்சரியாக சூடுவந்ததும் அலங்காரமான நுரைபொங்கித்ததும்பும், வெண்ணிற நுரையின் மேல் பழுப்பு நிற டிக்காஷன் மகுடம் வைத்து அட! அடா!! என் வாழ்வில் இப்படி ஒரு காபியைச் சுவைத்ததில்லையே நான்!!
ஹும் பாற்கடலைக் கடைவதற்குக்கூட இப்படி ஒரு சிரத்தை எடுத்திருப்பார்களோ என்னவோ! அத்தனை கர்மசிரத்தையாகத் தாயாருக்கு காபி தயாரித்த தனயனைக் கண்கொட்டாமல் கண்டு களித்தேன்!
சுவைத்து அருந்தினேன்.
பேஷ்! பேஷ்!
ரொம்ப நன்னா இருந்தது!!
நன்றி மகரே !!
Cappuccino coffee machine and Esperesso....
ReplyDeleteSuper!
மனைவி தூங்கிகிட்டு இருக்க இந்த நேரத்தில நான் காபிக்கு எங்கே போறது? காபித் தாகம் எடுத்துருச்சு போங்க.
ReplyDeleteநல்ல பகிர்வு. ஒரு காஃபி சாப்பிட்டு மற்ற பதிவுகளைப் படிக்கிறேன்... :)
ReplyDeleteதற்போதுதான் தங்கள் பதிவுகளைப் பார்த்தேன்
ReplyDeleteதாஙகள் விருப்பம் என குறிப்பிட்டு இருப்பதைப் போலவே
பதிவும் குடும்ப்ப பாங்கானதாகவும் ஆன்மீக விஷயங்களைத்
தாங்கியதாகவும் உள்ளது.தொடர வாழ்த்துக்கள்
காபி ஜோரா இருக்கு.
ReplyDeleteரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். நுரைபொங்கும் கள்ளிச்சொட்டு காஃபியை, அதுவும் அப்போதே பொடித்து அரைத்த புதுமணமான காஃபி பொடியில், நல்ல ஃப்ளேவருடன், எல்லாவற்றையும் விட, உங்கள் மகன் கையால் போட்டு அடடா...அடடா...
ReplyDeleteருசியான காஃபி பிரியரான என்னை இது விஷயம் என்னவோ பண்ணுதே, கோவைக்கு வருவதே கஷ்டம் எங்கே ஆஸ்திரேலியாவுக்குப் போவது ...?
தங்கள் வர்ணிப்பு அருமை! அதுவே தங்களுடன் சேர்ந்து நானும் காஃபி சாப்பிட்டதுபோல திருப்தியளிக்கிறது.
;)
ReplyDeleteகாயே ந வாசா
மனஸேந்த்ரியைர் வா
புத்யாத்மனா வா
ப்ரக்ருதே ஸ்வபாவாத் !
கரோமி யத்யத்
ஸகலம் ப்ரஸ்மை
ஸ்ரீமந் நாராயணாயேதி
ஸமர்பயாமி !!
இது போன்ற காப்பி தயாரிக்கும் உபகரணங்கள் இங்கு கிடைகின்றன அவைகள் பெரும்பாலும் இத்தாலி அல்லது பிரான்ஸ் நாட்டு தயாரிப்புகளே. விலை சற்று அதிகம்தான். பெரும்பாலான அலுவலகங்களில் உள்ள pantry யில் இது தனியாக சற்று மிடுக்குடன் அமர்ந்திருக்கும் .
ReplyDeleteகம்பனியின் உடமையாளருக்கு மட்டுமே இதில் புதிய காப்பி தயாரித்து கொண்டுசெல்வார்கள் வேறு எவருக்கும் இல்லை
எனினும் pantry யில் உள்ள பணியாளர்களிடம்" ச்ம்ச்சா " அடித்துவிட்டு
எப்போதாவது நாங்களும் காபி போட்டு அருந்தி மகிழ்வோம் .இதன் சுவையே
வித்யாசமாக இருக்கும் .
This comment has been removed by the author.
ReplyDelete43+2+1=46
ReplyDelete