Monday, February 14, 2011

கருணை பொங்கும் காடம்புழா

OMOMOMOMOM




கருணை பொங்கும் காடம்புழேஸ்வரி அம்மன்

கேரளத்திலிலுள்ள காடம்புழா கோவிலுக்குச் சென்றிருந்தோம். இங்கு பல கோவில்களிலும் குளங்கள் இணைந்திருக்கிறது. காலை மூன்றுமணி அளவில் கோவிலை அடைந்து குளத்தில் குளித்தோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனித் தடுப்புகள் குளத்தின் நடுவில் அமைத்திருக்கிறார்கள். 




குளத்தில் சோப்பு, ஷாம்பு உபயோகிக்கத் தடையிருப்பதால், தூய்மையாக இருக்கிறது. உடை மாற்றும் அறைக்குச் சற்று கீழ் படிகள் சென்றால் கோவிலை அடையலாம்.

சுவாதிஸ்டானச் சக்கரத்திற்குச் சற்று கீழே மூலாதாரம் அமைந்திருப்பதைப் போல் சின்னஞ்சிறு காடம்புழேஸ்வரி அம்மன் அருள் பாலித்துக்  கொண்டிருக்கிறார். 

தேங்காய்  பிரார்த்தனை பிரதானமாம். பிரார்த்தனை சீட்டு வாங்கிக் கொண்டு தேங்காய் வாங்கிவர வெளியில் வந்தோம்.
எல்லாக் கடைகளிலும் ஒரே மாதிரியான தேங்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஆடி பண்டிகையில் சுடுவதற்காக மணல் போட்டு உரசி பிசிறு நீக்கி வைத்திருப்பது போல் அத்தனை அழகாக உரித்து வைத்திருந்தார்கள். ஏதேனும் இயந்திரத்தில் தேய்த்து வைத்திருக்கிறீர்களா என்று கேட்டோம்.
இல்லையாம். கையாலேயே உரித்து தேய்த்து வைத்திருக்கிறார்களாம்.


















நேந்திரன் பழ பஜ்ஜி,


புட்டு கொண்டைக்கடலைக் குழம்பு

என்று கேரள மண்ணுக்கே உரிய உணவு சாபிட்டு,






















கட்டஞ்சாயா என்ற பால் கலக்காத தேனீர் சுவைத்துவிட்டு, தேங்காய்கள் வாங்கிக் கொண்டு வந்தோம். 

பூஜை செய்து கொடுத்த காய்களை அதற்கு உரிய கூண்டில் உடைத்துத் தருகிறார்கள். பிரியப்பட்டால் வீட்டிற்கு எடுத்து வரலாம். அதற்கான பெட்டியிலும் செலுத்தி விடலாம்.

செலுத்தப்பட்ட காய்களை தனி அறையில் ஹோமத்தில் சேர்கிறார்கள். சாட்சாத் பரசு ராமரின் தோற்றத்தில், பரசுராம ஷேத்திரத்தில் நடை பெறும் இந்த யாகப்புகை இனிய மணத்துடன் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றதாம்.

Kadampuzha Thrikkarthika

குளத்திலிருந்து வழியும் நீர் கோவிலைச் சுற்றி சிறு ஓடையாக ஓடி தொட்டியில் சேருகிறது. குளத்திற் குள்ளேயும், அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கும் சிறிய மலையிலும் நீர் ஊற்றுகளுடன், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. சுற்றிலும் பச்சை மரங்கள், கொடிகள், பூச்செடிகள், என்று சேர நாட்டிற்கு இயற்கை ரொம்ப ஓவராகத்தான் ஓரவஞ்சனையுட்ன் அழகை வாரி வாரி வழங்கியிருக்கிறது. 





kadampuzha temple road

kadampuzha temple road

kadampuzha temple resthouse

kadampuzha temple resthouse


21 comments:

  1. தகவல் பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. கவிதை வீதி தங்களை அன்போடு வரவேற்கிறது..

    ReplyDelete
  3. மிக நல்ல பகிர்வு அங்கு படமெடுத்து அதை பதிவேற்றியிருக்கலாமே....
    பகிர்வுக்கி நன்றிங்க

    ReplyDelete
  4. //,என்று சேர நாட்டிற்கு இயற்கை ரொம்ப ஓவராகத்தான் ஓரவஞ்சனையுட்ன் அழகை வாரி வாரி வ்ழங்கியிருக்கிறது. //

    ரொம்ப சரி! அந்த மரப்பச்சை ஊரை விட்டு வந்தாலும் கண்ணுக்குள்ளேயே ரொம்பநேரம் சுற்றிக்கொண்டிருக்கும்.. காடம்புழேஸ்வரி அருள் பெற்றேன்.. நன்றி. ;-)

    ReplyDelete
  5. //சேர நாட்டிற்கு இயற்கை ரொம்ப ஓவராகத்தான் ஓரவஞ்சனையுட்ன் அழகை வாரி வாரி வழங்கியிருக்கிறது//

    எனக்கும் இது தோணும்... பக்கத்துலையே இருக்கற எங்க ஊருக்கு (கோவை) கொஞ்சம் குடுத்து இருக்கலாமேனு...:)
    நல்ல பதிவுங்க ராஜேஸ்வரி...

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான பகிர்வு.

    ReplyDelete
  7. நாக்களும் உங்க கூடவே வந்ததுபோல
    இருந்தது.கேரளா பசுமையான அழகுதான்.

    ReplyDelete
  8. பஜ்ஜி, சாயா எல்லாம் பாத்து ஜொள்ளுவிட்டுன்டே படித்தேன்..:) அங்கு உள்ள கோவில்கள் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதும், மரங்களை வெட்டாமல் பாதுகாப்பதுமே அவர்களுடைய அழகுக்கு காரணம்.

    ReplyDelete
  9. @ தக்குடு said...
    மிக உண்மை. அவர்கள் எங்கள் தேசம் கடவுளின் தேசம். ஆகவே குப்பைகளைக் கூட அடுத்த மாநிலத்தில் தான் கொட்டுவோம் என்று பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  10. @ அப்பாவி தங்கமணி said...
    ஒரு காலத்தில் சோலைவனமாகக் காட்சியளித்த குளுகுளு மேட்டுப்பாளையம் ,அவினாசி ரோடுகளின் இன்றைய நிலை???

    ReplyDelete
  11. //சேர நாட்டிற்கு இயற்கை ரொம்ப ஓவராகத்தான் ஓரவஞ்சனையுட்ன் அழகை வாரி வாரி வ்ழங்கியிருக்கிறது.//.......உண்மைதான், நானும் அப்படிதான் நினைச்சிப்பேன். நல்ல பகிர்வு!

    ReplyDelete
  12. ஒரே மாதிரி எண்ணங்கள்! பகிர்விற்கு நன்றி!!

    ReplyDelete
  13. நல்லதொரு பதிவு எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  14. @அப்பாவி தங்கமணி said...
    Well said Raji... It broke my heart to see those trees cut in front of my eyes when I went to kovai last november... that were the landmark for that city which is no longer there... Its really sad...:(((
    வருந்தவேண்டிய விஷயம்.

    ReplyDelete
  15. கருணை பொழிந்த பதிவு தான்.

    ReplyDelete
  16. ;)
    சிவாய நம ஓம்!
    ஓம் நமச்சிவாயா !!

    ReplyDelete