எதிர் வீட்டுக் குழந்தை இரவு நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தால் மடிக் கணிணியில் பெற்றோர் இருவரும் மும்முரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
என்ன ஆச்சு? குழந்தை அழுதே? கவனிக்க மாட்டேன் என்கிறார்களே!
ம்.. அம்மா! போய் உட்வர்ஸ் கொடு. இங்கே போய் நாம் ஏன் குழந்தை அழுகிறது என்றெல்லாம் தலையிடக்கூடாது. குறிப்பிட்ட வயதில் தனியே படுத்துத்தூங்கப் பழக்குவார்கள். அழும் குழந்தையை சட்டை செய்யாதமாதிரி இருப்பார்கள்.
உண்மைதான். நாளுக்கு நாள் அழுகை குறைந்து நின்றுவிட்டது.
பதினாறு வயதானால் ஆணோ, பெண்ணோ பெற்றோரைச் சாராமல் தனித்து சம்பாதிக்க ஆரம்பித்து, இயங்கிக்கொள்ள வேண்டுமாம்.
ஒன்றாக ஹோட்டலுக்குச் சென்றாலும் அவரவர் பில்லை அவரவரே செலுத்திக் கொள்ள வேண்டும்.
மீறி பதினெட்டு வயதில் வீட்டைச் சார்ந்து, சம்பாதிக்காமல் இருந்தால் மனநலமருத்துவரிடம் அழைத்துச்சென்று "என் மகன்/மகள் இன்னும் சொந்தக் காலில் நிற்க வில்லை. சிகிச்சை ஆரம்பியுங்கள் " என்று சேர்த்துவிடுவார்கள். ஆகவே அதற்கான பயிற்சி இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தக் குழந்தை வாழ்க்கைப் பயணத்தின் முதல் அடியைப் பதித்துவிட்டது.
good.plz visit my blog also...www.kmr-wellwishers.blogspot.com
ReplyDeleteநானும் முதல் அடியை பதிவில் பதித்து விட்டேன்.
ReplyDeleteசுவையான தகவல்கள்.
ReplyDelete“என்ன ஆச்சு” - குழந்தை அழுதது மிக நல்ல தலைப்புத்தேர்வு.
பொருத்தமான படத்தையும் காட்டியுள்ளதால் படித்ததை
நன்கு ஜீரணிக்கவும் முடிந்தது.
பாராட்டுக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteசுவையான தகவல்கள்.
“என்ன ஆச்சு” - குழந்தை அழுதது மிக நல்ல தலைப்புத்தேர்வு.
பொருத்தமான படத்தையும் காட்டியுள்ளதால் படித்ததை
நன்கு ஜீரணிக்கவும் முடிந்தது.
பாராட்டுக்கள்./
பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் மன்ம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
nalla padivu. arumai
ReplyDelete86+2+1=89
ReplyDelete