Sunday, February 27, 2011

நாகலிங்கப்பூ




நாகலிங்கப்பூ எடுத்து
நாலுபக்கம் கோட்டை கட்டி....

கோவையில் ராஜஸ்தானி சங்கத்தில் அழகிய நாகலிங்க மரம் உள்ளது.
மரத்தைப் பார்த்தாலே ஆயிரம் சிவலிங்கங்களைப் பார்த்த உணர்வு ஏற்படும்.
கோனியம்மன் கோவில் ,பழனி திருவாவினன் குடி ஆகிய தலங்களிலும்
பல சிவாலயங்களிலும் நாகலிங்கமரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
இந்த மரத்தின் காய்கள் பீரங்கிக் குண்டு வடிவத்திலும், கீழே விழும் போது குண்டு வெடிக்கும் சத்தமும் ஏற்படுவதால் கோவில்களில் ஸ்தல மரமாக  அக் காலங்களில் வளர்த்திருக்கிறார்கள்.
தாவரவியல் விற்பனை நிலையங்களில் நாற்றுகள் கிடைக்கின்றன.வாங்கி கோவில்களிலும், விரும்பிய இடங்களிலும் நட்டுப் பராமரிக்கலாம்.
பூவின் தோற்றம் பார்க்கும் போதே ஒரு சிவாலயத்தை நினைவூட்டும்.நடுவில் அழகிய சிவலிங்கம்.சுற்றி நிற்கும் அரும்புகள் புனிதமான முனிவர்கள் அனைத்தையும் தன் நாகாபரணக் குடையில் பாதுகாக்கும் நாகவடிவில் மணம் பரப்பி நிறைக்கும்,பதஞ்சலியின் யோக முத்திரையின் குறியீட்டைப் போல.
நஞ்சுண்ட கண்டனுக்கு விருப்பமான விஷேசமான பூவாகும்.
இதன் ஒரு இதழை சுவைத்த என் தோழி வெகு நேரம் நீலநிறத்தில் எச்சில் சுரந்து அவதிப் பட்டாள்.

வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது.
இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது.

12 comments:

  1. அருமையான பதிவு.!!

    புதிதாக இருக்கிறது..!!

    ReplyDelete
  2. இந்த பூவை சிறுவயதில் நான் தினந்தோறும் ஸ்கூல் போகும் வழியில் பார்த்திருக்கிறேன். மருத்துவ தகவல்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    தொடர்ந்து படித்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்கபக்கத்தில் நிறைய புதிய விஷயங்களைத்தெரிந்துகொள்ள முடிகிரது. நன்றி.

    ReplyDelete
  5. என் அருமை தோழி,
    தங்களின் இந்த பதிவு மருத்துவம் குறித்து சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. நான் இதை அவ்வளவாக
    பார்த்தது கிடையாது.

    --

    Murugappan kugan
    http://kathirkamamblogspotcom.blogspot.com

    ReplyDelete
  6. நாகலிங்கப் பூவின் படமும், மரம் மற்றும் காயின் தன்மையும் அதிசயமானதாக இருக்கிறது.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.!!

    ReplyDelete
  8. மிகவும் வியக்கத்தக்க வகையில் இருக்கின்றது இம்மலரின் அமைப்பு..

    தென்னாட்டுடைய சிவனுக்கு இதைப் போல இன்னும் வடிவங்கள் எப்படியெல்லாம் இருக்குமோ என்று எண்ணிடும் போதே பக்தியில் மனம் லயிக்கின்றது.

    நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  9. one of the biggest tree is in Dr. THAMBAIYA'S hOUSE named THE PORT BLAIR a british fort in NUNGAMPAKKAM HIGH ROAD - CHENNAI.

    ReplyDelete
  10. one of the biggest tree in DR.THAMBAI'S BUNGALOW NAMED THE FORT BLAIR A BRITISH FORT IN NUNGAMPAKKAM HIGH ROAD OPP.TO DHASAPRAKASH.

    ReplyDelete
  11. நாகலிங்கப்பூ மிகவும் விசித்திரமானதும் விசேஷமானதும் தான்.

    பட்டையும் காயும் விஷமுறிவுக்கு நல்லதா?

    பட்டையைக் கிளம்பும் செய்தியாக உள்ளது.

    ReplyDelete