Thursday, February 3, 2011

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

நீ எதனை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்.
முயற்சியே செய்யாதவனைவிட போராடுபவன் மேல்.

ஒரே ஒரு ஆசிரியர் தான் உலகில் உண்டு.  அனுபவம் தான் அது.

தன்னலமற்றுப் பணிபுரிபவனே மிகச் சிறப்பாகப் பணி புரிகிறான்.

தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ
அதுவே உண்மையான கல்வி.

ஒரு விஷயத்தில் பைத்தியம் பிடித்தது போல்
தீவிர தன்மை உடையவனே லட்சிய ஒளியைக் காண முடியும்.

மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும்.
Ø  உணர ஒரு அன்பு இதயம்
Ø  சிந்திக்க சிறந்த மூளை
Ø  பணி புரிய வலிய கரங்கள்.

யார் தன்னைத்தானே மறைத்துக் கொள்கிறானோ
அவனே அதிகம் சாதிக்கிறான்.

மாபெரும் உண்மைகள் இவ்வுலகில் எளிய விஷங்களே
நீ உயிரோடு இருப்பதைப் போல.

சுயநலமின்மை அதிக லபகரமானது.
மக்களுக்குத்தான் அதைக் கடைப்பிடிக்கும் பொறுமை இல்லை.

நல்லொழுக்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கு ஒருவன் ஆயிரம் தடவை தடுக்கி விழுந்தாக வேண்டும்.

நடந்து போனதைத் திரும்பிப் பார்க்காதே.
முன்னேறிச் செல்.

உலகமே துன்பம் நிறைந்ததொரு கல்விச்சாலை தான்.

துருப்பிடித்துச் சாவதைவிடக் களைப்படைந்து சாவது மேல்.
குறிப்பாக பிறருக்கு நன்மை செய்வதற்காக.

6 comments:

  1. அவர் சிந்தனை அத்தனையும் லட்சம் பெறும்.....

    ReplyDelete
  2. சிந்தனைச்சிற்பியின் பொன்மொழிகள் பொன்னாய் மின்னின்.

    ReplyDelete
  3. //தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ அதுவே உண்மையான கல்வி.

    மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும்.
    Ø உணர ஒரு அன்பு இதயம்
    Ø சிந்திக்க சிறந்த மூளை
    Ø பணி புரிய வலிய கரங்கள்.//

    அருமையான வார்த்தைகள் அல்லவோ!

    நல்ல பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ;)
    தென்னாடுடைய சிவனே போற்றி !
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி !
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி !!

    ReplyDelete