Friday, February 4, 2011

ஆஸ்திரேலிய வெள்ளம் ஜனவரி2011

சமீபத்திய ஆஸ்திரேலிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் எனது மகனின் குடும்பமும் ஒன்று.


வீடு மாறி ஒரு மாதம் கூட ஆகவில்லை. அணையின் கொள்ளளவுக்கு மேல் தண்ணீர் சேகரித்து வைத்திருந்ததும், விடாத மழையும், கடலில் ஏற்பட்டிருந்த புயல் காற்றும் சேர்ந்ததால் ஏற்பட்ட சோதனை. 


முதலில் புயல், வெள்ள அறிவிப்பு தொலைக்காட்சியில் எச்சரிக்கையாக வந்தபோது, 100 வருட அறிக்கையில், நம் வீடு இருக்கும் பகுதி மேடான பகுதி ஆகவே இதுவே பாதுகாப்பான பகுதிதான் என்று இருந்திருக்கிறார்.


அலுவலகத்திலும் பொது போக்குவரத்தை நிறுத்தப்போகிறோம், பாதுகாப்பு கருதி மின்சாரத்தையும் துண்டிக்கப்போகிறோம் என்று அறிவித்துவிட்டார்களாம்.


பக்கத்துவீட்டுக்காரர்கள் வெளியேறியபோது இவர்களையும் அழைத்தும், மறுத்துவிட்டு,  சிறிதுதூரம் நடந்துசென்று பார்துவிட்டு வரலாம் என்று நடக்க ஆரம்பித்தவர்கள், அடுத்த சில நிமிடங்களில் வடிகால் ஓடை வழியாக பாதத்திற்கு கீழுருந்தும், எதிர்த்திசையிலிருந்தும் குபுகுபு என்று வெள்ளம் பெருகி கழுத்து வரை வந்துவிட்டதாம்.


நல்லவேளை கையில் கைபேசி வைத்திருந்திருக்கிறார். என் அடுத்த மகன் தொலைக்காட்சி செய்தி பார்த்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு அண்ணன் மற்றும் அண்ணியையும் அழைத்துவரக் கிளம்பி, பாலத்திற்கடியில் கரைபுரண்ட வெள்ளத்தைப் பார்துவிட்டு கைபேசியில் அழைத்திருக்கிறார். தான் தண்ணீரால் சூழப்பட்டிருப்பதையும்,  நீர் வரத்து மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் சொல்லியிருக்கிறார்.


பக்கத்தில் நின்று கொண்டிருந்த படகுக் காரரை உதவிகேட்டபோது. தான் அவர்களின் பக்கது வீட்டுக்காரர் தான் என்றும் அவர்களை எச்சரித்து தன்னுடன் வருமாறு அழைத்ததையும், அவர் மறுத்துவிட்டதையும் சொல்லி தானே அவர்களை அழைத்து வருவதாகவும் கிளம்பிச்சென்று படகில் அழைத்துவந்தாராம். 


வெள்ளம் வடியும் வரை தம்பியின் அறையிலேயே தங்கியிருந்துவிட்டு அபாயம் நீங்கியபின் வீட்டிற்குச்சென்று பார்த்தால் கார் நீரில் மூழ்கியிருந்ததால் ஓட்டமுடியாமல் காப்பீட்டுக்காரர்களை அழைத்துச் சொல்லி எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.


குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், படுக்கை, சோபா, தரை விரிப்புகள், உடைகள், மேசை, நற்காலி, என அத்தனைப் பொருள்களும், சேமித்த உணவுப்பொருள்களும் குப்பையில் போடப்பட்டனவாம்.


ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கி இயற்கைச் சீற்றங்களுக்கு காப்பீடு கிடையாதென்று அறிவித்துவிட்டதாம்.


இத்தனைக்கும் ஆஸ்திரெலியாவை செல்லமாக ராபின்ஹுட் தேசம் என்பார்கள். அதிகமாக வரி விதிக்கும் நாடாம். சம்பாதிப்பவர்களிடமிருந்து வரியாக தீட்டி வசதி குறைந்தவர்களுக்கு வசதி, உதவித்தொகை என்று தருபவர்களாம்.


இப்பொழுதும் பிரிஸ்பேன் மாகானப் பகுதி, வெள்ள சேதத்திலிருந்து மீள பல லட்சம் டாலர்கள் என மதிப்பீடு செய்திருக்கிறாகள். மேலும் ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதம மந்திரியின் துரித நடவடிக்கையாலும், குடிமகன்கள் மற்றும் நிறைய தொண்டூழியர்கள் ஆதரவாலும் இமாலயச் சாதனையை செய்திருக்கிறார்கள்.


வெள்ளத்திற்கு பிறகு ஊரையே துவைத்து சலவை செய்திருக்கிறாகள்.


இதில் மறக்கமுடியாத ஒன்று குவின்ஸ்லாந்து தமிழ் சங்கம், பன்னாட்டு கலாச்சார சங்கங்களோடு ஒருங்கிணைந்து வெள்ள நிவாரண நித திரட்டும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, ஒரு பெரும் நிதியை திரட்டி நிவாரண நிதியாக வழங்கியிருக்கிரார்கள். பாராட்டுக்கள் திரு. முத்துகுமார் ராஜு, தலைவர், மற்றும் அதன் உறுப்பினர்கள், குவின்ஸ்லாந்து தமிழ் சங்கம்.


எனது மகன்கள் மற்றும் மருமகள் குவின்ஸ்லாந்து தமிழ் சங்கம் உறுப்பினர்களாக இருந்து பல்வேறு தொண்டுகளை மேற்கொண்டுள்ளனர்.


அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள் !!

6 comments:

  1. இன்றுதான் முதல் வருகை. பதிவு பார்த்ததும் கலங்கிவிட்டேன். இயற்கையின் சீற்றம் மனிதர்களை எப்படி எல்லாம் அலைக்கழிக்கிரது?

    ReplyDelete
  2. I am happy to know that they are safe.
    மீண்டு வந்து இருப்பது சந்தோஷமான விஷயம்.

    ReplyDelete
  3. விரைவில் மீண்டு சகஜ நிலை திரும்ப
    இறைவனைப் பிரார்த்திகிறேன்.

    ReplyDelete
  4. படிக்கும் போதே என் மனம் பதறியது.


    தாங்கள் செய்த புண்ணியம் தான்
    குழந்தைகளை மீட்டுக்கொடுத்துள்ளது!

    அந்தக்கடவுளுக்கு நன்றிகள்.

    //அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்//

    ReplyDelete